புதன், 3 ஆகஸ்ட், 2022

3 மாணவிகள் உயிரை குடித்த எஸ்விஎஸ் கல்லூரி.. அதிகாரிகளை திருப்பி அனுப்பியதால் அதிர்ச்சி!

tamil.samayam.com - Govindaraji Rj : கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் எஸ்.வி.எஸ் சித்த மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவ மாணவிகள்,
 15-க்கும் மேற்பட்டோர் கல்லூரியில் சேர்ந்து 2 வருடங்கள் ஆன நிலையில் கொரோனா காலத்தில் முறையாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தவில்லை எனவும், நேரடி வகுப்பில் கல்லூரிகளில் தங்கி படிக்கும் பொழுது அங்கு எந்த விதமான அடிப்படை வசதிகள் இல்லை எனவும் கல்லூரி நிர்வாகத்தில் முறையிட்டு தங்கள் வேறு கல்லூரிகளுக்கு செல்கிறோம் கேட்ட பொழுது நிர்வாகத்தின் தரப்பில் அவர்களுக்கு மிரட்டல் விட்டதாக தெரியப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனரகம் மற்றும் தமிழக முதல்வரின் நேரடி பிரிவிற்கும் புகார் மனுவை அளித்துள்ளனர். இதனை அடுத்து சுகாதாரத்துறை இயக்குனரகம் மூலம் வேறு கல்லூரிகளுக்கு செல்ல விருப்பமுள்ள மாணவர்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனை அறிந்த நிர்வாகத்தினர் அந்த உத்தரவுக்கு தடை கேட்டு நீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து அங்கு கல்வி பயில விரும்பாத மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் நீதிமன்றத்தை நாடி உள்ளதாகவும் வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்ஜிஆர் பல்கலைக்கழக மருத்துவ குழுவினரை நியமித்து நேரடியாக கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இறந்துவிட்டதாக கூறி ஓஏபி(OAP) நிறுத்தம்.. கலெக்டரிடம் கதறி அழுத 80 வயது மூதாட்டி!

அதன் அடிப்படையில் எம்ஜிஆர் பல்கலைக்கழக மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொள்ள கல்லூரிக்கு சென்ற பொழுது நிர்வாகத்தினர் வளாக கதவினை பூட்டி வைத்து ஆய்வுக்குழுவினரை உள்ளே அனுப்ப மறுத்துள்ளனர் மேலும் ஆய்வு குழுவினர் நிர்வாகத்தினர் தொடர்பு கொண்ட பொழுது எவ்வித பதிலும் கிடைக்காததால். இது குறித்த விளக்கத்தினை வளாக முகப்பில் ஒட்டி சென்றனர்.

சர்ச்சைக்கு ஆளாகியுள்ள இந்த எஸ்விஎஸ் கல்லூரியின் மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா கடந்த 2016-ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக