வியாழன், 28 ஜூலை, 2022

கலைநிகழ்வுகளுடன் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்... Chess Olympiad Live:

 இந்தியன் எக்ஸ்பிரஸ் : Chess Olympiad Live: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் வேட்டி சட்டை அணிந்து வந்த பிரதமர்
Chennai: சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்த கவுரவமிக்க போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன.



இதுவரை நடத்தப்பட்ட எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையையாகும். 6 அணிகளில் 30 வீரர்களை கொண்டு இந்த போட்டியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அணியை இந்தியா களமிறக்குகிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் இன்று தொடங்க உள்ள நிலையில். இந்த போட்டியில் தொடக்க விழாவிற்கு பிரதமர் மோடி வந்துள்ளார். தற்போது ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தில் இருந்து நேரு விளையாட்டு அரங்கம் வருகிறார் பிரதமர் மோடி சாலை மார்க்கமாக காரில் வரும் வழிநெடுகிலும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் இன்று தொடங்க உள்ள நிலையில். இந்த போட்டியில் தொடக்க விழாவிற்கு பிரதமர் மோடி வந்துள்ளார். தற்போது ஒரே மேடையில் பிரதமர் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவை தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளபிரதமர் மோடி சதுரங்க டிசைனில் வேட்டி சட்டையுடன் வந்துள்ளார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் இன்று தொடங்க உள்ள நிலையில். இந்த போட்டியில் தொடக்க விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த, அவரது மகள் ஐஸ்வர்யா மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இளம் இசையமைப்பாளர் லிடியன் ஒரே நேரத்தில் இரண்டு பியானோவில் இசைத்து அசத்தியுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பட்டு சட்டை, வேட்டி அணிந்து பங்கேற்றார். போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினரும் வேட்டி, சட்டையும், பெண்கள் புடவையும் அணிந்திருந்தனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க மோடி இன்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தார். சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்லும் அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

44வது ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் தங்கள் அணிகளுடன் அணிவகுத்து செல்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யாவுடன் நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தார்.
செஸ் ஒலிம்பியாட் பிரமாண்ட துவக்க விழாவில் பங்கேற்க, மோடி அகமதாபாத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். மாலை 5.10 மணியளவில் சென்னை வரும் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்க பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பங்கேற்கும் வீரர்கள் மாமல்லபுரத்தில் இருந்து, அரசு ஏற்பாடு செய்த பேருந்துகள் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகியுள்ளது. ஜூலை 21 அன்று காஷ்மீர் வழியாக இந்தியா நடத்திய ஜோதி ஓட்டம் தான் வாபஸ் பெறுவதற்கான காரணம் என்று குறிப்பிட்டு, பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் அசிம் இப்திகார், “இந்த மதிப்புமிக்க சர்வதேச விளையாட்டு நிகழ்வை இந்தியா அரசியலாக்கியது” என்றார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் பிரமாண்ட துவக்க விழா நடைபெறுவதையொட்டி, நேரு உள் விளையாட்டு அரங்கம் வண்ண விளக்குகளால் ஒளிர்கிறது. தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.


செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சென்னை நகரின் முக்கிய சந்திப்புகள், சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் நிகழ்ச்சிப் பகுதியில் பிரதமர் நரேந்திரடி மோடியின் பெயர் மற்றும் படங்கள் சரியான வகையில் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியினர் கடந்த இரண்டு தினங்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று சென்னை முழுவதும் உள்ள செஸ் ஒலிம்பியாட் விளம்பர போர்டுகளில் பிரதமர் மோடியின் படத்தை கம்யூட்டர் பிரின்டிங் செய்து அதை பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஒட்டினர்.

இதைத்தொடர்ந்து பஜகவினர் எங்கெல்லாம் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருந்தனரோ அங்கெல்லாம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களாக அறியப்படும் சிலர் கறுப்பு மை பூசி மோதியின் படத்தை அழிக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் படத்தை அனைத்து விளம்பர பேனர்கள், நிகழ்ச்சி பேனர்களில் இடம்பெற வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல இடங்களில் பிரதமர் மோதி இல்லாமல் இருந்த விளம்பர ஃபிளஸ்க் பேனர்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு மோதி ஒருபுறமும் முதல்வர் ஸ்டாலின் ஒருபுறமும் இருக்கக் கூடிய பேனர்கள் இடம்பெறச் செய்யப்பட்டன.

மாமல்லபுரத்தில் நேற்று மாலையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் சுடர் வரவேற்பு நிகழ்வு மேடையில் பிரதமர் மோதியின் படம் ஒரு புறமும் முதல்வர் ஸ்டாலினின் படம் மறுபுறமும் இருக்கும் வகையிலேயே பேனர் இடம்பெற்றிருந்தது.

மாமல்லபுரத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சர்வதேச செஸ் வீரர்கள், நேரு ஸ்டேடியம் வந்தடைந்தனர்

பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை முடித்தவுடன் இரவு எட்டு மணி அளவில் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று அங்கு தங்குகிறார். அன்று இரவில் பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச அவர் திட்டமிட்டு இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியை இரவு 8:30 மணிக்கு மேல், முன்னாள் முதல்வர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் தனித்தனியாக சந்தித்து பேச இருக்கிறார்கள் என்ற தகவல் இருந்தது.

அதிமுகவில் வெடித்த ஒற்றை தலைமை புயல், எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னிர் செல்வம் இடையே பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக, கடந்த 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகளை, ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு தான் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரது அடுத்த கட்ட நடவடிக்கைகளில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பது தெரியவரும். எனவே, இரவு நடக்கப்போகும் சந்திப்பு அதிமுகவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேநேரம், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு இதுவரை பிரதமர் தரப்பில் இருந்து நேரம் ஒதுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

செஸ் ஒலிம்பியாட்: இந்திய வீரர்களை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து!
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடவுள்ள வீரர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி, வாழ்த்து தெரிவித்தார்.


செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் படம், பெயரை சேர்க்க கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவர்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே? என்றும், பல நாடுகளின் வீரர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ள நிலையில், சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டுமெனவும் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

சர்வதே செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள், விருந்தினர்களுக்கு 700 வகை உணவுகள் வழங்கப்பட உள்ளது. 77 உணவு பட்டியல்கள் உருவாக்கபட்டு அதில் 53 பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 
செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கலைநிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில் பரிசோதனை செய்யப்பட்டது.

ஈவிஆர் சாலை, சென்ட்ரல் சதுக்கம், அண்ணாசாலை, ராஜா முத்தையா சாலை மற்றும் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று சென்னை காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
 
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 5.25 மணிக்கு புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையாருக்கு 5.45 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து 5.50 மணிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு, விழா நடைபெறும் உள் விளையாட்டு அரங்கத்துக்கு மாலை 6 மணிக்கு வந்தடைகிறார்.

இந்த நிகழ்ச்சியில் இரவு 7.30 மணி வரை பங்கேற்கிறார். விழா முடிந்தவுடன் சாலை மார்க்கமாக புறப்பட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இரவு 7.50 மணிக்கு சென்றடைகிறார். அப்போது அவரை முக்கிய பிரமுகர்கள் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது.

இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் நரேந்திர மோடி, நாளை (வெள்ளிக்கிழமை) அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். இந்த விழாவை முடித்துவிட்டு மதியம் 11.50 மணி அளவில் சென்னையில் இருந்து அவர் புறப்பட்டு செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று முதல் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள உள்ள செஸ் வீரர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், செஸ் நான் மிகவும் விரும்பும் உள்ளரங்க விளையாட்டு. செஸ் வீரர்கள் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை தவிர்த்து சென்னையில் இந்த போட்டிகள் நடத்தப்படுவதற்கு முக்கிய காரணம், தமிழகத்தின் சென்னையில் தான் 26 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். பிற மாநிலங்களில் ஒற்றை இலக்க அளவிலேயே கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கின்றனர். செஸ் போட்டிகளில் இந்தியாவில் தமிழகம் சிறந்து விளங்குவதன் காரணமாக சென்னையில் இந்த போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக பிடே அறிவித்தது.

1924-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சதுரங்க போட்டிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடியவே, அதன்பிறகு, தனிப்பட்ட முறையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துவது தொடங்கப்பட்டது. அதே 1924-ம் ஆண்டில் பாரீசில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றபோது, சர்வதேச சதுரங்க போட்டிகளுக்கான கூட்டமைப்பு பிடே, முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பாரீசிலேயே நடத்தியது.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அதிகாரப்பூர்வமற்றவையாக கருதப்பட்டன. 1927-ம் ஆண்டு முதல்முறையாக அதிகாரப்பூர்வமான சர்வதேச சதுரங்க போட்டிகள் லண்டனில் நடத்தப்பட்டன. இரண்டாம் உலகப்போர் வரை இந்த போட்டிகள் முறையான இடைவெளியின்றி அவ்வப்போது நடத்தப்பட்டு வந்த போதிலும், 1950-ம் ஆண்டுக்குபிறகு, பெரும்பாலும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தாண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி முதலில் பெலாரசில் உள்ள மின்ஸ்க்கில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அது ரஷியாவின் மாஸ்கோ நகருக்கு மாற்றப்பட்டது. பின்னர், உக்ரைன் மீது ரஷிய படையெடுப்பை தொடர்ந்து, சர்வதேச சதுரங்க போட்டிகளின் கூட்டமைப்பு, இந்த போட்டிகள் இந்தியாவின் சென்னையில் நடைபெறும் என்று இறுதியாக அறிவித்தது. அதன்படி, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இன்று முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக