செவ்வாய், 19 ஜூலை, 2022

அதிபர் தேர்தல் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் டல்லாஸ் அழகபெருமாவுக்கும் இடையே கடும்போட்டி

 kuruvi.lk : இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும்  டல்லாஸ் அழகபெருமாவுக்கும் இடையேதான் போட்டி ! ஜேவிபியின் அனுரா ஒரு அடையாள வேட்பாளர் மட்டுமே
டல்லசுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
ஐக்கிய மக்கள் கூட்டணி – 50
ஐக்கிய மக்கள் சக்தி – 37
தமிழ் முற்போக்கு கூட்டணி – 05
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 04
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 02
அபி ஶ்ரீலங்கா (குமார வெல்கம) – 01
43 ஆம் படையணி (சம்பிக்க)- 01
 சுயாதீன அணிகள் – 31
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – 10
தேசிய சுதந்திர முன்னணி – 06
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் – 02
(இன்னும் இறுதி முடிவு இல்லை)
ஜனநாயக இடதுசாரி முன்னணி – 01
இலங்கை கம்யூனிஸ் கட்சி – 01
லங்கா சமசமாஜக் கட்சி – 01
தேசிய காங்கிரஸ் – 01
எமது மக்கள் சக்தி – 01
யுதுகம  – 01
பிவிதுரு ஹெல உறுமய – 01
அசங்க நவரத்ன – 01
அநுர பிரியதர்சன அணி – 05
 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
(டலஸ் அணி) – 25
(டலசுக்கு ஆதரவான மொட்டு கட்சி எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 10
( தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை. அக்கட்சியின் எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்கினால் டலசுக்கான வெற்றி வாய்ப்பு குறையும். வாக்கெடுப்பை புறக்கணித்து நடுநிலை வகித்தால் அது டலசுக்கு சார்பாக அமையும். கூட்டமைப்பின் முழு அதரவு டலசுக்கு எனில், அவருக்கான ஆதரவு 116 ஆக உயரும்.)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 02
(நடுநிலை வகிக்கபோவதாக அறிவித்துள்ளது)
சிவி விக்னேஸ்வரன் – 01
(அவரும் நடுநிலை அறிவிப்பை விடுத்துள்ளார்)
 கூட்டமைப்பு, கஜா, விக்கி அணிகள் நடுநிலை வகிக்க,  ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களில் சிலர், முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் சிலர், முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் சிலர், சஜித் அணி உறுப்பினர்கள் சிலர் மொத்தம் 10 என எடுத்துக்கொள்வோம். அப்போதும் டலசுக்கான வெற்றி வாய்ப்பு குறையும். (106-10) 96
கூட்டமைப்பு, விக்கி, கஜா அணிகள் நடுநிலை வகிக்க மேற்படி கட்சிகளின் எண்ணிக்கை மாறாது, மொட்டு கட்சியின் மேலும் 6 எம்.பிக்கள்வரை டலஸை ஆதரித்தால், அவரால் இலகுவில் ‘113’ என்ற இலக்கையும் அடையமுடியும்.

இ.தொ.கா. ரணிலை ஆதரித்தால், டலசுக்கான சுயாதின எம்.பிக்களின் ஆதரவு எண்ணிக்கை 29 ஆக குறைவும்.
ரணிலுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
ரணில் வசம் –  103! கூட்டமைப்பு கை கொடுத்தால் வெற்றி உறுதி!!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 92

ஈபிடிபி – 02
ஐக்கிய தேசியக் கட்சி – 01
பிள்ளையான் – 01
முஷாரப் எம்.பி.- 01
அமைச்சர் நஷீர் அஹமட் – 01
அலி சப்ரி (புத்தளம்) – 01
அரவிந்தகுமார் – 01
டயானா கமகே- 01
ஹரின் பெர்ணான்டோ – 01
மனுச நாணயக்கார – 01
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் 10 வாக்குகள் உள்ளன. அக்கட்சி ரணிலுக்கு முழு ஆதரவை வழங்கினால் ரணிலுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும்.
 கூட்டமைப்பு, விக்கி, கஜா அணிகள் நடுநிலை வகிக்க,  ஹக்கீம், மனோ, ரிஷாட் ,மைத்திரி மற்றும் சஜித் அணிகளின் எம்.பிக்களில் 10  ரணிலை ஆதரித்தால் அப்போது ரணிலுக்கே வெற்றி.
ஆர்.சனத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக