திங்கள், 25 ஜூலை, 2022

சீனா-வின் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை மணி..!

GoodReturns Tamil :  சீனாவில் ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து வருவது உலக நாடுகளுக்கு மிகப் பெரிய எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
இப்போ 10%, பின்னாடி 90%. பெருங்களத்தூர் அருகே 2 & 3 BHK வீடுகள் @ 67 லட்சம்* முதல்
சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது சீனாவில் வீடு விற்பனை வரலாறு காணாத விதமாக 60 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்துள்ளது.
சீனாவில் உள்ள 80 நகரங்களில் நடைபெற்று வந்த 200-க்கும் மேற்பட்ட முக்கிய கட்டுமானப் பணிகள் நின்றுள்ளன. வீடு வாங்க முன்வந்த வாடிக்கையாளர்கள் பலர் கட்டிக்கொண்டு இருக்கும் வீடுகளுக்கு இனி தங்களால் தவணையைச் செலுத்த முடியாது என தெரிவித்தது ரியல் ஏஸ்டேட் நிறுவனங்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
உலகின் மிகப் பெரிய உற்பத்தி நாடானா சீனா, கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து பெரும் ஆடர்கள் இழந்தது. பல்வேறு அமெரிக்க மற்றும் மேற்கத்திய நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறின. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் தங்களது வேலை வாய்ப்பை இழந்தனர். மேலும் சீன அரசும் 2022-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு பல்வேறு கடுமையான உத்தரவுகளை பிரப்பித்தது. அதனால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்க முடியாத நிலை உருவானது.

எனவே பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வருங்கால திட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளனர். வீடு வாங்க முன் பணம் செலுத்திய மக்கள் முறையாக அதற்கான தவணையைச் செலுத்தினால் தான் வங்கிகளால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குக் கடன் வழங்க முடியும். ஆனால் பல்வேறு முக்கிய கட்டிட திட்டங்களில் வீடு வாங்க திட்டமிட்டு இருந்த மக்கள் தவணையைச் செலுத்துவதை நிறுத்தியுள்ளனர்.

எனவே என்ன செய்யலாம் என விழிபிதுங்கிய சீன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பண்ட மாற்ற முறையில் கோதுமை, பூண்டு, தர்பூசணி கொடுத்து வீடு வாங்கலாம் என தெரிவித்து வருகின்றன.

சீனாவில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளால் 2 டிரில்லியன் யுவான், அதாவது 296 பில்லியன் டாலர் தேக்கம் அடைந்துள்ளது என ஜி.எப்ப் செக்யூரிட்டிஸ் மற்றும் டெயூச் வங்கி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகின் மிகப் பெரிய உற்பத்தி நாடே இப்படி ஒரு சிக்கலில் மாட்டித் தவிக்கும் நிலையில் இது உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை என்று தான் கூற வேண்டும். சீன அரசும் தற்போது தடைப்பட்டுள்ள 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான கட்டுமான திட்டங்களுக்கு நிதி வழங்க முன்வந்துள்ளது. விரைவில் இதிலிருந்து எப்போது எப்படி சீனா மீண்டு எழும் என்பது கேள்வியாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக