வியாழன், 28 ஜூலை, 2022

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா.. 186 நாடுகள் கொடி அணிவகுப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு அங்கீகாரம்

Javid Ahamed -  tamil.mykhel.co  : சென்னை: 2022 சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக தொடங்கியது.
இதில் பிரதமர் மோடி விழா மேடை வருவதற்கு முன்பே ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பட்டு வேட்டி சட்டையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, வைரமுத்து உள்ளிட்ட நட்சத்திரங்கள் பார்வையாளராக பங்கேற்றனர்.
சர்வதேச தொடரில் அரசியல்.. காரணம் என்ன?
செஸ் ஒலிம்பியாட் தொடரிலிருந்து  பாகிஸ்தான் விலகல்..
சர்வதேச தொடரில் அரசியல்.. காரணம் என்ன?
கொடி அணிவகுப்பு கொடி அணிவகுப்பு தமிழ்த் தாய் வாழ்த்து பாடி தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில்,
186 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளின் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு நாட்டின் கொடியும் லேசர் லைட் மூலம் ஒளியூட்டப்பட்டது.
அப்போது, அந்த நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் உள்விளையாட்டு அரங்கில் தங்களது தேசிய கொடியை ஏந்தியவாறு, தமிழக மக்களின் வரவேற்பை பெற்று கொண்டனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள் இதில் ஒவ்வொரு அணியையும் அறிமுகப்படுத்தி, வழிநடத்தி செல்லும் பொறுப்பு, தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. அதிலும் குறிப்பாக, இந்த மாணவர்கள் அனைவரும், தமிழகம் முழுவதும் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

இதன் மூலம், தமிழக பள்ளி மாணவி, மாணவர்களுக்கு செஸ் போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நாமெல்லாம் ஒன்று என்ற கருத்தை பறைச்சாற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 முதலில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் சர்வம் பட்டேல் வரைந்த மணல் ஓவியங்கள் தொடர்பான வீடியோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதன் பிறகு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி அரங்கேறியது.
விழாவின் முக்கிய அம்சமாக பிரபல கீபோர்ட் வாசிக்கும் லிடியன் நாதஸ்வரன், கண்களை மூடிக்கொண்டு கீபோர்டும், ஒரு கையில் ஹாரிபாட்டர் இசையும், மறு கையில் மிஷன் இம்பாசிப்பல் இசையையும் வாசித்து அசத்தினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக