புதன், 22 ஜூன், 2022

பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு .. ஜார்ஜ்கண்ட் பழங்குடி பெண்

BBC :  குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்த முர்மு பழங்குடியினத் தலைவர்.
குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பாஜகவின் அறிவிப்பு வந்துள்ளது.


முர்மு 20015 முதல் 2021 வரை ஜார்கண்ட் ஆளுநராக இருந்தார். 2015 வரை பாஜகவின் எஸ்.டி. மோர்ச்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இரண்டு முறை ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், நவீன் பட்நாயக்கின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக