தினத்தந்தி : ஆஸ்பத்திரியில் விபத்தில் துண்டான வாலிபரின் கையை நாய் கவ்வி எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்பத்திரியில் சுற்றி திரிந்த நாய் வாயில் விபத்தில் துண்டான வாலிபரின் கை
நாய் வாயில் விபத்தில் துண்டான வாலிபரின் கை
மேற்கு வங்காள மாநிலம் சிலிகிரி துர்காராம் காலணி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் சர்க்கார். வாலிபரான இவர் சம்பவத்தன்று ஒரு சாலை விபத்தில் சிக்கினார்.
இதில் பலத்தகாயம் அடைந்த அவரது வலது கை துண்டானது. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை சிலிகுரி மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் துண்டிக்கப்பட்ட கையையும் எடுத்து சென்றனர்.
அதை மருத்துவ மனையில் பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும். விரைவில் ஆபரேஷன் மூலம் கையை பொருத்த இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருக்குஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்குள் சுற்றி திரிந்த தெருநாய் ஒன்று அந்த ஆஸ்பத்திரியின் மொட்டை மாடியில் ஏதோ ஒன்றை வாயில் கவ்வி இருந்ததை பொதுமக்கள் பார்த்தனர்.
அப்போது அது துண்டிக்கப்பட்ட சஞ்சய்யின் கை என்பது தெரியவந்தது. இதை அறிந்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் அந்த நாயிடம் இருந்து கையை பிடுங்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் நாய் கையை எலும்பைகடித்து திண்பது போல பாதியை சாப்பிட்டு விட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சஞ்சய் உறவினர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த கை எப்படி நாய் வாய்க்கு சென்றது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்பத்திரிக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக