சுமதி விஜயகுமார் : இளையராஜா, கௌண்டமணி இருவருமே அவரவர் துறையில் ஜாம்பவான்கள். இன்றும் நாம் விரும்பி கேட்கும் அநேக பாடல்கள் இளையராஜாவின் இசையில் வந்ததாகத்தான் இருக்கும். இளையராஜா மோடியை ஆதரித்து ஒரு நூலுக்கு முன்னுரை எழுதியதெல்லாம் யாருக்கும் பெரிய அதிர்ச்சி எல்லாம் இருந்து விட போவதில்லை.
ஏனென்றால் , அவர் மோடியை ஆதரிக்க கூடியவர் தான் என பலமுறை அல்ல , ஒவ்வொரு முறையும் நிரூபித்து கொண்டே இருப்பவர் தான்.
மேடையில் ஒருவரின் தாகத்தை தணிக்க தண்ணீர் கொடுக்க சென்றவரை , லட்சம் மக்கள் முன் எதோ மிக பெரிய தவறு செய்து விட்டவர் போல மன்னிப்பு கேட்க வைத்தார்.
அடடா ரசிகர்கள் மேல் அவ்வளவு மரியாதையா என்று பார்த்தால், இன்னொரு மேடையில் பாடலுக்கு நடுவே கைதட்டி , விசிலடிக்கும் ரசிகர்களை பார்த்து 'இப்படி சத்தம் போடீங்கன்னா நான் இசையில் சேர்த்த நுணுக்கங்களை எப்படி உங்களால் ரசிக்க முடியும்?' என்று கேட்கிறார்.
இளையராஜாவின் பாடல்களை ரசிக்கும் 80% ரசிகர்கள் அந்த நுணுக்கங்களை அறிந்து கொள்ளும் அளவிற்கு சங்கீதம் கற்றவர்களாகவோ , அதை அலசி ஆராயும் அளவிற்கு நேரம் உள்ளவர்கவோ இருப்பார்கள் என்பது சதேகமே. உழைக்கும் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரம் ஏது ?
வைரமுத்துவுக்கும் , இளையராஜாவிற்கும் முறிவு ஏற்பட்ட இத்தனை வருடங்கள் கழித்து , இல்லயராஜாவின் மனைவியின் மரணத்தில் அவரின் கையை பற்றி இருந்த வைரமுத்துவை கடைசி வரை திரும்பி கூட பார்க்கவில்லை. 1980லில் ஒரு மேடையில் ரஜினியை வைத்து கொண்டு 'ஹீரோவிற்கு என்ன , ஜாலியா ஹீரோயின் கூட ஊட்டி , கொடைக்கானலில் டான்ஸ் ஆடுவாங்க. நான்தான் இசையமைக்க கடினமாக உழைக்க வேண்டும்' என்று கூற , அடுத்து பேசிய ரஜினி ' உங்களுக்கென்ன ஏசி ரூமில் உக்காந்துட்டு மியூசிக் போடுவீங்க, நாங்க வெய்யிலையும் , குளிர்லயும் பிடிச்ச , பிடிக்காத நடிகைகள் கூட ஆடி பாடணும்' என்றார். அந்த மோதலுக்கு பின் சில வருடங்களுக்கு ரஜினி படத்திற்கு இளையராஜா இசையமைக்கவில்லை.
இன்னொரு மேடையில் பிரசன்னா 'உங்க இசையை கேட்டு கேட்டு தான் நானும் ஸ்னேஹாவும் ஒருவரை ஒருவர் காதலித்தோம்' என்று கூற , உடனே நேத்து ராத்திரி எம்மாவிற்கு இசையமைத்த ராஜா 'பாருங்க மக்களே, இசையமைப்பது மட்டும் தான் என் வேலை, இவர் காதலில் விழுந்ததெற்கெல்லாம் நான் பொறுப்பில்லை' என்று விளையாட்டாகவெல்லாம் கூறவில்லை. இயக்குனர் சங்கரிடம் 'ஏன் உங்கள் திரைப்படங்களுக்கு இளையராஜாவை பயன்படுத்தவில்லை' என்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரோகிணி கேட்க , இளையராஜா 'உங்ககிட்ட நான் எனக்கு வாய்ப்பு வாங்கி கொடுக்க கேட்க சொன்னேனா?' என கேட்க , அதன் பின்னர் ரோகிணிக்கு பதிலாக வேறு ஒருவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் (பார்த்திபன் என்பதாக நினைவு). இவையெல்லாம் கடலில் சிறு துளிகள் தான்.
'கௌண்டமணி போல கலாய்க்க முடியாது', 'ரொம்ப தைரியமான ஆளு ,அரசியல்வாதிகளையே கலாய்ப்பாரு' என்பார்கள். அதுமட்டுமா , ஈஸவரன் கோவில் எண்ணெய் சட்டி, ஓடுற தண்ணில பாக்குற மூஞ்சி, நாயே , சங்கூதுர வயசுல சங்கீதா, நாலு வீட்ல வாங்கி திங்குற நாய்க்கு பேச்ச பாரு போன்ற அறிய கருத்துக்களை உதிர்த்த நல்லவர். சமீபத்தில் காவேரி நீர் போராட்ட போஸ்டரின் ஒண்ணுக்கு போவது போல போஸ்டர் போட்ட சந்தனத்தை காய்ச்சி எடுத்தார்கள் முற்போக்காளர்கள். சைடு ஸ்டண்ட் என்று கிண்டல் அடித்ததற்கு மாற்று திறனாளிகள் கண்டனம் தெரிவித்தார்கள். சந்தனத்திற்கெல்லாம் அப்பன் கௌண்டமணி. அரசியல்வாதிகளை மட்டுமில்லை , மாற்று திறனாளிகள் , திருநங்கைகள், பசிக்கு கையேந்துபவர்கள் என எந்த வித ஒடுக்கப்பட்டவர்களையும் விட்டுவைத்தவரில்லை. பெண்களை நகைச்சுவை என்ற பெயரில் கௌண்டமணி அவமானப்படுத்தியது போல எந்த வில்லன்களும் கூட அவமானப்படுத்தியதில்லை.
சந்தானத்திற்கு கண்டனம் தெரிவித்த சில முற்போக்காளர்கள் , அவர் நடிப்பில் பின்பற்றும் கௌண்டமணியை மட்டும் முற்போக்கு நகைச்சுவை நடிகர் என்கிறார்கள். அவர் எவ்வளவு முற்போற்காளர் என்றால், பெயருக்கு பின்னால் இருந்த சாதியை ஒழித்த ஒரு நாட்டில் , பெயருக்கு பின்னல் இல்லை , பெயருக்கு முன்னால் சாதியை போட்டு கொள்ளும் அளவிற்கு முற்போற்காளர். எல்லாவற்றிக்கும் சரியாக counter கொடுப்பதால் அவருக்கு Counter மணி என்ற பெயர் கொடுத்து அது பின்னல் கௌண்டமணி ஆனது என்று நம்பி கொண்டிருப்பவர்களுக்கு, அவர் ஒரு நாடகத்தில் கௌண்டராக நடித்த காரணத்தால் கௌண்டமணி என்ற சாதிய பெயர் வந்தது. அவருக்கு முன்பு இப்படி உருவ கேலி பேசிய நடிகர்கள் கிடையாதா என்றால் , ஒருவர் இருக்கிறார். M R ராதா.
பல முற்பொற்க்கு கருத்துக்களை கிண்டலாக பேசி கலாய்க்கும் MR ராதா பல முறை உருவ கேலி செய்திருக்கிறார். ஆனால் அப்படி உருவ கேலி பேசி நடித்த காதாபாத்திரங்கள் அனைத்தும் வில்லனுக்கு உரிய கதாபாத்திரங்கள். அதாவது ஒரு கெட்டவன் பேசும் வசனங்கள். அது மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தாது. அவர் நடித்த வில்லன் அல்லாத கதாபாத்திரங்களில் உருவ கேலி பேச மாட்டார். ஆனால் உருவ கேலியை, காது கேளாதோர் , வாய் பேச முடியாதோரை எல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் கேலி பேசியவர் கௌண்டமணி. அவரின் வாரிசாக சந்தானம்.
இளையராஜாவையாவது அவரது இசைக்காக பொறுத்து கொள்ளலாம். கௌண்டமணி எல்லாம் தமிழ் சினிமாவிற்கு சாப கேடு.
பிகு : சாராயம் விற்கும் சினிமா உலகில் இளநீர் விற்க வந்த சீனு ராமசாமியின் 'மாமனிதன்' வெற்றி பெற வாழ்த்துகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக