ஞாயிறு, 5 ஜூன், 2022

மலையக மக்களின் குடியுரிமையும் கம்யூனிசமும்

ராதா மனோகர்: :   1948 ஆம் ஆண்டு இலங்கை அரசு இந்திய
வம்சாவளியினரின் குடியுரிமையை  பறித்த வரலாறு.தொடர்பாக சில தகவல்கள் ...
இந்த விடயத்தின்  பின்னணி பற்றிய   பல விடயங்கள் மர்மமாகவே இருக்கிறது
ஏராளமான பத்திரிக்கை  செய்திகளும்  நூல்களும் பொதுவெளிக்கு வந்தாலும் சில உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது
அரசியல் வாதிகளின் அ
ரசியல் வியாபாரமானது பல  உண்மைகளை  வெகு நேர்த்தியாக திட்டமிட்டு மறைத்தே வந்துள்ளது.
இந்திய வம்சாவளி தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே அப்போது இருந்திருக்கிறது
எமக்கு ஏதாவது ஒரு வழியில் விடிவு வராதா என்று ஏங்கி கொண்டிருந்த மக்களிடையே இடதுசாரி கருத்துக்கள் ஓரளவு வரவேற்ப்பை பெற்றதில் ஆச்சரியம் இல்லை.
அந்த காலக்கட்டங்களில் கம்யூனிச அச்சுறுத்தல் என்ற பதம் உலக  நாடுகளில் வெகு பலமாக உச்சரிக்கப்பட்ட வார்த்தையாகும்
இந்த பின்னணியை பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் மலையக தொழிலாளர்களின் வாக்குரிமை பறிப்பு பற்றி பேசவே முடியாது
1948 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்திற்கு மலையகத்தில் இருந்து ஏழு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்
அது மட்டும் அல்லாது பல சிங்கள இடதுசாரிகளும் கூட மலையக மக்களின் வாக்கு பழத்தில் வெற்றி பெற்றிருந்தனர்  
இதன் காரணமாக அந்த தேர்தலில்   இடதுசாரி கட்சிகள் தென்னிலங்கையில் மிக அழுத்தமாக வேரூன்றின     .  அத்தேர்தலில் வலதுசாரி கட்சியான யு என் பி UNP  42 seats தொகுதிகளில் வெற்றி பெற்றது
மீதி தொகுதிகளில் வெற்றி பெற்ற  LSSP 10,  the CIC 7, the BLP 5, the CP 2, the Labor Party 1, ( 21 independents).போன்றவை இடது சாரி கட்சிகளாகும் ,சுயேட்சையாக வெற்றி பெற்ற பல உறுப்பினர்களும் இடது சாரி மற்றும் தொழிலாளர் வர்க்க சார்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்களாகும்


அது மட்டுமல்லாமல் மலையக மக்களும் கொழும்பு போன்ற தென்னிலங்கையில் வசித்த இதர இந்திய வம்சாவளி மக்களும் இடதுசாரி கருத்துக்களால் பெரிதும் கவரப்பட்டிருந்தார்கள்.

இலங்கை இடதுசாரி கட்சிகளும் இந்திய இடதுசாரி கட்சிகளும் பல விடயங்களில்  ஒரு மித்த கருத்து அடிப்படையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்தன.

அன்றைய இலங்கை அரசியலில் வெகு சுலபமாக இடதுசாரிகள் தேர்தல்  மூலமே கம்யூனிஸ்டு அரசை உருவாக்க முடியும் என்ற தோற்றம் இருந்தது

இந்தியாவிலோ பாகிஸ்தானிலோ இந்த நிலை இருக்கவில்லை

அங்கு காந்தி நேரு தலைமையிலான காங்கிரஸ் பெரியக்கமும், முகமதலி ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக் கட்சியும் முழு பலத்தோடு இருந்தன

இலங்கையில் அந்த நிலைமை இருக்கவில்லை  ஏனெனில் இலங்கையில் சுதந்திர போராட்டமே நடக்கவில்லை .

1921 இருபதுகளில் இருந்தே ஒருவகை சுயாட்சியை படிப்படியாக இலங்கைக்கு வழங்கி பூரண சுதந்திரத்திற்கு உரிய பாதையை ஆங்கில ஆட்சியே வழங்க தொடங்கியது.

காலனி நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கும் தீர்மானத்தில் இலங்கையை ஒரு மாதிரி பைலட் புராஜெக்ட் ஆகத்தான் ஆங்கிலேயர் முன்னெடுத்தனர்

இந்திய சுதந்திர போராட்டமானது கம்யூனிசம் என்ற போர்வையில் மீண்டும் ஒரு சிறைக்குள் சென்று விடாது  என்ற நம்பிக்கையை ஆங்கிலேயர்களுக்கு அது அளித்தது

இலங்கையில் செல்வாக்கு பெற்ற  ஐரோப்பிய  இடதுசாரி கோட்பாடுகள் ஆங்கிலேயர்களை விட,

 இந்திய ஆட்சியாளர்களையே அதிகமாக பயமுறுத்தியது என்று எண்ணுகிறேன் .
இதற்கான ஆதாரங்கள் உள்ளன.

இந்தியாவின் தொட்டுவிடும் தூரத்தில் ஒரு கம்யூனிச கடும் கோட்பாட்டு  அரசு தோன்றுவதை தடுப்பதற்கு அன்று இருந்த ஒரே வழி இடதுசாரிகளின் வாக்குவங்கியை உடைப்பதுதான்
இது  ஒன்றே ஆங்கிலயேர்களுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் முன்னே தெரிந்த  ஒரே வழியாகும்

அந்த காலக்கட்டங்களில் கம்யுனிச ஆபத்து என்று முதலாளித்துவ நாடுகளால் குறிப்பிடப்படும் வார்த்தைக்கு மிக சரியான ஒரு உதாரணமாக இலங்கை இருந்தது

தெற்கு ஆசியாவில் ஒரு கம்யூனிச நாடாக வரக்கூடிய எல்லா வாய்ப்புக்களும் இலங்கைக்கு அன்று இருந்தது.

அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அடித்தட்டு மக்களிடையே பலம் வாய்ந்த கட்டமைப்பை கொண்டிருந்த இலங்கை இடதுசாரி கட்சிகளும்  தொழிற்சங்கங்களுமாகும்.

அத்தோடு  இலங்கை இடதுசாரிகள் மாவோவின் சீனாவை ஒரு கனவுலக மயக்கத்தோடு ஆதரித்து கொண்டிருந்தன

இந்திய இடதுசாரி கட்சிகளோடும் நெருக்கமான உறவை   இடதுசாரி கட்சிகள் கொண்டிருந்தன.

நான்காம் அகிலம் என்று அறியப்பட்ட டிராஸ்கிய கம்யூனிஸ்டு குழுவாக திரு பிலிப் குணவர்தன டாக்டர் என் எம் பெரேரா . திரு.கொல்வின் ஆர் டி சில்வா . திரு.லெஸ்லி குணவர்தன . திரு.ராபர்ட் குணவர்தன , திரு.வேனன் குணவர்தன திரு.எட்மண்ட் சமரக்கொடி  திரு.வி காராளசிங்கம் போன்றோர் இரகசியமாக இயங்கினார்கள்

1942 ஆம் ஆண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் சிறை வைக்கப்பட்ட திரு என் எம் பெரேரா திரு.லெஸ்லி குணவர்தனா உட்பட வேறு சில தலைவர்களும் சிறையில் இருந்து தப்பி இரகசியமாக யாழ்ப்பாணம் சென்றனர்
அங்கு வல்வெட்டித்துறையில் இருந்து  படகு மூலம் வேதாரணியத்துக்கு (இந்தியாவுக்கு) தப்பி சென்றனர்
அங்கிருந்து பம்பாய் சென்றனர்
 
இந்திய போல்ஷ்விக்  லெனினிஸ்ட் மற்றும் பர்மிய போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சி ஆகியவற்றோடு செயல்பட்டு பிரித்தானிய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தனர்

1943 ஆம் ஆண்டு இவர்கள் பம்பாய் போலீசின் கண்களில் சிக்கிக்கொண்டனர் இவர்களை இலங்கைக்கு டிப்போர்ட் செய்தனர் ஆங்கில ஆட்சியாளர்கள்  
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சிங்கள இடதுசாரி தலைவர்கள் ஆறுமாத சிறைவாசத்தின் பின்பு விடுவிக்கப்பட்டனர்

இந்திய வம்சாவளி தமிழர்களின் வாக்குரிமையை பறித்தமையானது இலங்கையில் இடதுசாரிகளின் அரசியலுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது .

அதுவரையில் அவர்களுக்கு இருந்த வாக்கு பலம் பின்பு ஒருபோதும் கிடைக்கவில்லை என்பது கவனிக்க தக்கது.

28 ஏப்பிரல் 1952 இல் இலங்கை நாடாளுமன்றத்திற்கு முன்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் பல மலையக தொழிற்சங்கங்களும் தலைவர்கள் ஒரு நீண்ட சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இலங்கை மக்களின் மனச்சாட்சியை தட்டி எழுப்பும் முகமாகவும், மக்களின் எந்த பகுதியினருக்கு எதிராக இழைக்கப்படும் எவ்வித அநீதியையும் தட்டி கேட்கவும்  இந்த அமைதி வழி போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்தனர்

வெகு ஜன மக்களின் பெரும் பங்களிப்புடன் தொடர்ச்சியாக நடந்த இந்த அறவழி போராட்டம் இந்திய ஒன்றிய அரசின் தலையீட்டின் காரணமாக 143 வது நாட்களில் கைவிடப்பட்டது.

இந்திய பிரதமர் நேருவின் சார்பாக இலங்கைக்கு பழ\ம் பெருந்தலைவர் ஆச்சரிய கிருபளானி . அவர் மனைவி சுசேதா கிருபளானி .  இந்திய  ஒன்றிய  அமைச்சர் திரு அசோக் மேத்தா .தமிழ்நாடு தமிழரசு கழக தலைவரான திரு . மா பொ சிவஞானம் ஆகியோர் ஹட்டனில் நடந்த இ தொ க மாநாட்டில் பங்கு பற்றி ,
இந்த தொடர் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டிக்கொண்டனர்

இந்திய அரசின் இக்கோரிக்கையை ஏற்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போராட்டத்தை நிறுத்தியது.
இதன்பின்பு மலையக மக்களின் குடியுரிமை  பறிப்புக்கு  எதிராக எந்த பெரிய போராட்டமும் நடக்கவில்லை

இந்த போராட்ட காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியில் அமைச்சராக இருந்த கௌரவ சுப்பையா பிள்ளை நடேசபிள்ளை (சு. நடேசன்) மலையக போராட்டக்காரர்களை நேருக்கு நேராக சந்தித்த போதும் எந்த வித சம்பிரதாய வணக்கம் கூட செலுத்தாமல் உள்ளே சென்றுவிட்டார்

அவரோடு கூட வந்த பிரதம மந்திரி டட்லி சேனநாயக்க கூட  மலையக  சத்தியாகிரகிகளுக்கு மரியாதையாக வணக்கம் செலுத்தி விட்டுத்தான் தனது காரியாலயத்திற்கு சென்றார்
பின்பு வெளியேறும் பொழுதுகூட மந்திரி நடேசனின் கார் வர சற்று தாமதமாகி விட்டது  
அப்போது கூட அவர் சத்தியா கிரக போராட்டக்காரர்களை ஏறெடுத்தும் பார்க்காமல் தலையை மறுபுறமாக திருப்பி கொண்டே இருந்தார்
இத்தனைக்கும் இந்த நடேசன் என்பவர் தஞ்சாவூரில் பிறந்த அசல் தமிழ்நாட்டுக்காரர்   அது மட்டுமல்ல அங்கு அவர் கவுன்சிலராகவும் இருந்தவர்
சேர் பொன்னம்பலம் ராமநாதனின் தொடர்பால் இலங்கை வந்து அவரது மகளையும் திருமணம் செய்து இலங்கை குடிமகனாகி விட்டவர் (சேர் பொன்னம்பலம் ராமநாதனின் பூர்வீகம் கூட தஞ்சாவூர்தான்)

பொன்னம்பலம் ராமநாதனின் பள்ளிக்கூடங்கள் கோயில்கள் போன்ற பெரும் சொத்துக்களுக்கு வாரிசாக வந்து அரசியலில் பெரிய தலைவராக முன்னேறியவர்

மலையக மக்களின் குடியுரிமையை பறித்த ஐக்கிய தேசிய கட்சியின் நிறுவனர்களில் ஒருவர்
அந்த கட்சியின் செனட்டராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும்  அமைச்சராகவும் இருந்து அக்கட்சியின் அத்தனை விடயங்களினதும் பங்கு பங்குதாரியானவர்
இவரது குடும்ப வாரிசுகளில் ஒருவர்தான் வடமாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் எனப்வர்
மலையக மக்களின் குடியுரிமையை யு என் பி அரசு பறித்ததில் முழுக்க முழுக்க நடேசனின் கைங்கரியமும் உண்டு
 

இவர் மட்டுமல்ல இவரின் உறவினர்களான திரு அருணாசலம் மகாதேவா,

திரு.சித்தம்பலம் (இவரின் மகன் அர்ஜுனா சித்தம்பலம் லண்டன் சுவிஸ் பாங்கிங் கார்பொரேஷன் தலைவராக இருந்தவர் . புலிகளின் பொறியில் சிக்கி ராஜீவ் காந்தியிடம் தூது சென்று புலிகளால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டில் சுதந்திரமாக பிரசாரம் செய்ய வைத்தவர்)
ஆனால் ஏனோ இன்றுவரை இந்த விடயங்கள்  பற்றி ஒருவரும் பேசுவதில்லை

மலையக மக்களின் குடியுரிமை பறிப்பில் பலர் காரணமாக இருந்திருக்கின்றனர்
முதலில் மலையக மக்களின் மேல் சவாரி செய்து கம்யூனிசத்தை கொண்டுவர முயற்சித்த இலங்கை இடதுசாரிகள்...
 

இந்திய ஒன்றிய அரசை மலையாக மக்கள் மலை போல நம்பியிருந்தனர்   
ஆனால் அவர்கள் இலங்கை அரசோடு கூடி குலாவி கைகழுவி விட்டனர்

1952 இல் பிரதமர் நேரு மலையக மக்களின் குடியுரிமை போராட்டத்தை கிருபளானி அசோக் மேத்தா ம பொ சிவஞானம் ஆகியோரை அனுப்பி நீர்த்து போக வைத்தது
 

அப்போது இந்திய ஒன்றிய அரசு  மலையக சத்தியாக்கிரகிகளுக்கு என்ன வாக்குறுதியை  வழங்கினார்கள் என்பது தெரியவில்லை .
 

ஒரு காத்திரமான வாக்குறுதி இல்லாமல் சதியாக்கிரத்தை முடிவுக்கு கொண்டுவந்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன்
 

1954 இல் பிரதமர் நேருவும் இலங்கை பிரதமர் சேர் ஜான் கொத்தலாவலையும் ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்கள்  .
ஆனால் பிரதமர் கொத்தலாவலையின் அரசு அவ்வளவு உறுதியான அரசுகவும் இருக்கவில்லை  அந்த ஒப்பந்தம் இலங்கை தரப்பில் அவ்வளவாக வரவேற்க படவும் இல்லை  
 

எந்த காரணம் கொண்டும் குடியுரிமையை கொடுப்பதற்கு இலங்கை  தயாரில்லை
இலங்கையை நிர்பந்த படுத்த இந்தியா தயாரில்லை என்ற நிலைமையே நீடித்தது
இவற்றிற்கு எல்லாம் ஒரு தீர்வு வந்தது   அது வடக்கில் இருந்து வந்தது
 

இவை எல்லாம் ஒரு மேலோட்டாமான் வரலாற்று செய்திகள் மட்டுமே
இன்னும்  பல  வரலாற்று அகழாய்வுகள்  மேற்கொள்ள படவேண்டும்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக