ஞாயிறு, 5 ஜூன், 2022

திருமாவளவன் : தி.மு.க. அரசு மீது அண்ணாமலை விளம்பரத்துக்காக குற்றம் சாட்டுகிறார்

 மாலைமலர் : தி.மு.க. அரசு மீது அண்ணாமலை விளம்பரத்துக்காக குற்றம் சாட்டுகிறார்-
நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று காட்டிக் கொள்ளுவதற்காக அண்ணாமலை இதுபோன்று செயல்படுகிறார் என திருமாவளவன் கூறியுள்ளார்.
தி.மு.க.வுக்கு மாற்று பா.ஜனதா தான் என்கிற பிம்பத்தை உருவாக்க அக்கட்சியின் மேலிட திட்டத்தை அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.
சென்னையில் இன்று காயிதே மில்லத் நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் கட்சி நிர்வாகிகள் பால சிங்கம், தமிழேந்தி, செல்லத்துரை, இரா.செல்வம், எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


பின்னர் திருமாவளவன் நிர்வாகிகளிடம் கூறியதாவது:- காயிதேமில்லத் தமிழை ஆட்சி மொழியாக்க குரல் கொடுத்தவர். அவர் பெடரில் தமிழக அரசு விருது வழங்க வேண்டும்.
காயிதே மில்லத் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதுடன், அவரது பிறந்தநாளை மதநல்லிணக்க நாளாகவும் கடைபிடிக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: உலக சுற்றுச்சூழல் தினம்- சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய யோகாசன கலைஞர்கள் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை விளம்பரத்துக்காக தி.மு.க. அரசு மீது குற்றம் சாட்டி வருகிறார். நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று காட்டிக் கொள்ளுவதற்காக அவர் இதுபோன்று செயல்படுகிறார்.

தி.மு.க.வுக்கு மாற்று பா.ஜனதா தான் என்கிற பிம்பத்தை உருவாக்க அக்கட்சியின் மேலிட திட்டத்தை அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். 2024 தேர்தலை மனதில் வைத்து பா.ஜனதா இப்படி செயல்படுகிறது. அவர்களின் கனவு பலிக்காது. அ.தி.மு.க. தற்போது விழித்துக்கொண்டு செயல்பட தொடங்கி விட்டது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக