அது எப்போது யாரால் தொடங்கி வைக்கப்பட்டது.!
திருப்பெரும்புத்துரில் ஒரு உலர் துறைமுகம் (Dry Port) உருவாக்கி.,
சென்னை துறைமுகத்தில் இறக்கப்படும் பொருட்களை நேராக, வேகமாக திருப்பெரும்புதூருக்கு கொண்டு செல்ல வசதியாக உருவாக்கப்பட்டதே துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட பறக்கும் சாலை.!
2008ஆம் ஆண்டு 1,450 கோடி மதிப்பீட்டில், அன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் தலைமையில் அன்றைய பிரதமர் திரு. மன்மோகன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட திட்டம்.!
சுமார் 400 கோடி செலவு செய்து தூண்கள் உருவாக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், கலைஞரால் உருவாக்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அந்த திட்டத்தை நிறுத்தி விட்டார்.
இதே போன்றுதான் 1800 கோடி செலவில் உருவான தலைமைச் செயலகத்தையும் முடக்கி வைத்துள்ளார்.!
காழ்ப்புணர்ச்சியின் மொத்த உருவம் செல்வி. ஜெயலலிதா எனலாம்.!
அடுத்து வந்த அடிமைகளுக்கு திறமை இல்லாததால், அதனை செயல்படுத்த ஆண்மை இல்லை.!
முன்னாள் மத்திய இணை அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன், மூத்திர சந்தில் ஊடகங்களை பார்த்தாலும் இதோ, அதோ என்று கூறுவாரே ஒழிய சிறிதும் அதற்கான முயற்சி இருந்ததில்லை.!
2021ல் ஆட்சிக்கு வந்த திமுக, மீண்டும் அந்த திட்டத்தை நிறைவேற்ற எல்லா முயற்சிகளையும் செய்து சுமார் 5,885 கோடி மதிப்பீட்டில் ஈரடுக்கு உயர்மட்ட சாலையாக செயல்படுத்த மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.!
வரும் 29ம் தேதி, முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின் தலைமையில் இந்திய பிரதமர் அவர்கள் அதற்கான அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.!
மேலடுக்கில் துறைமுகம் முதல் மதுரவாயல் வரை நேராக சரக்கு வாகனங்கள் செல்லவும், கீழடுக்கில் பயணிகள் வாகனம் செல்லவும் ஏதுவாக அமைக்கப்பட்டுள்து.!
திட்டத்தின் பயன்....
கப்பல்களிலிருந்து இறக்கப்படும் பொருட்கள் உடனடியாக துறைமுகத்தை விட்டு வெளியேற்றப்படும். கப்பலில் ஏற்றுவதற்காக கொண்டு சென்ற பொருட்கள் உடனடியாக ஏற்ற வசதியாக இருக்கும்.
Loading and Unloading வேகமாக நடைபெறும்.
கப்பல்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை இருக்காது.!
It can handle more Containers and avoid sea traffic.!
கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டத்தை நிறுத்தி வைத்ததால் சென்னை துறைமுகத்திற்கு நிறைய நட்டம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் L&T உருவாக்கிய தற்போது அதானி நிறுவனம் வாங்கியுள்ள, காட்டுப்பள்ளி துறைமுகம், Loading and Unloading வேகமாக செயல்படுவதால் அது லாபத்தில் இயங்குகிறது.!
உண்மையில் செல்வி. ஜெயலலிதாவும் இன்றைய மத்திய அரசும் காட்டுப்பள்ளி துறைமுகம் லாபத்தில் இயங்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லையோ என்ற எண்ணம் நமக்கு உருவாகிறது.!
இந்த திட்டம், சென்னை துறைமுக வளர்ச்சிக்கும், நகரத்திற்குள் வரும் பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக