tamilmurasu.com : சென்னை: சென்னையில் விசா ரணைக் கைதி விக்னேஷின் மரணம் தொடர்பாக ஆறு காவலர் களைச் சிபிசிஐடி காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரைச் சோதித்தபோது கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சென்னை தலைமைச் செயலக காவல்நிலைய விசா ரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ், சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் கடந்த 19ஆம் தேதி உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், விக்னேஷ் தாக்கப்பட்டது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விதம் குறித்து ெபண் காவலர் ஆனந்தி வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, தலைமைச் செயலக காவல்நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ், தலைமைக் காவலர் குமார், ஊர் காவல்படை காவலர் தீபக், இரு ஆயுதப்படை காவலர்கள் என ஆறு பேர் கைதாகியுள்ளனர். விசாரணையும் தொடர்கிறது.
இதற்கிடையே, “காவல்துறை உங்கள் நண்பன் எனக் கூறிவிட்டு, நண்பர்களாக இருக்கவேண்டிய காவலர்களே விசாரணைக் கைதிகளை அடித்துக் கொலை செய்வது எந்த விதத்தில் நியாயம்?” என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக