செவ்வாய், 24 மே, 2022

நடிகர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி

 மாலைமலர் : நடிகர் டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர்.
இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது நல்ல முறையில் அவர் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக