செவ்வாய், 3 மே, 2022

திமுக ... அதிமுக போன்று, மற்றொரு நிறுவனமாக மாறிக் கொண்டு வரு‌கிறது?

No photo description available.

Kandasamy Mariyappan  :  வலதுசாரிகளால் இந்திய ஒன்றியத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் தீவிரவாதம் வளர வாய்ப்புள்ளது.!
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செயல்பாடுகள் குறைந்த பிறகு, இந்திய ஒன்றியத்தில் ஜனநாயகம் இறந்துவிட்டது.!
காங்கிரஸ் கட்சி அழிந்தே விட்டது.!
தமிழ்நாட்டை திமுக மட்டுமே காப்பாற்றும் என்று எண்ணியிருந்த நிலையில்., அது அதிமுக போன்று, மற்றொரு நிறுவனமாக மாறிக் கொண்டு வரு‌கிறது.!
திமுக மாணவரணி 85களோடு முற்று பெற்றுவிட்ட பிறகு..,
DYFI, SFI போன்ற இளைஞர்கள் அமைப்பின் செயல்பாடுகள் குறைந்த பிறகு...,
பள்ளி கல்லூரிகளில் ABVP போன்ற வலதுசாரிகளின் இயக்கங்கள் வலுப்பெற ஆரம்பித்து விட்டன.!
இது எதிர்காலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தான ஒன்று.!
தமிழ் மீது, தமிழ் மக்கள் மீது, தமிழ்நாட்டின் மீது திமுகவிற்கு அக்கறை இருக்குமேயானால்..,
மாணவரணியை வலுப்படுத்த வேண்டும்.!


அதற்கு UG முடித்த கல்லூரியில் படிக்கும் ஒருவரை மாணவரணி செயலாளராக நியமித்து., நன்றாக முகம் தெரிந்த ஒருவரை, மாணவரணி ஒருங்கிணைப்பாளராக நியமித்து மாணவரணியினரோடு தொடர் களப்பணியில் இருக்க வேண்டும்.!
இளைஞரணியை வலுப்படுத்த வேண்டும்.!
அதற்கு 30 வயதிற்குள் இருக்கும் ஒருவரை மாணவரணி செயலாளராக நியமித்து, உதயநிதியை இளைஞரணி ஒருங்கிணைப்பாளராக நியமித்து இளைஞரணிகளோடு தொடர் களப்பணியில் இருக்க வேண்டும்.!
அதேபோன்று மருத்துவ அணி, விவசாய அணி போன்ற ஒவ்வொரு அணிகளிலும் ஆக்கப்பூர்வமாக உழைப்பவர்களை மருத்துவரணி செயலாளர்களாக, விவசாய அணி செயலாளர்களாக நியமிக்க வேண்டும்.!
அதை விட்டு விட்டு எனது வீட்டிற்கு பக்கத்தில் இருந்தனர், முன்னாளின் மகன்கள், மகள்களாக இருந்தனர் என்றால் அவைகள் ஒரு பாரம்தானே (Liability) ஒழிய ஆக்கப்பூர்வமான (Asset) அணிகளாக செயல்படாது.!
கட்சி..,
பணம் வைத்திருப்பவர்களை நம்பினால்.....,
அவர்கள், சொத்துகளை காப்பாற்ற நாளை பாஜகவோடு இணைந்து திமுகவை அழித்து விடுவார்கள்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக