ஞாயிறு, 22 மே, 2022

பன்னீர்செல்வம் : உயர் பதவிகளில் இந்தியர்கள் என்றால் அது பார்ப்பனர்கள் என்றே பொருள்

May be an illustration of 1 person

Paneerselvan  :  * Defile(அசுத்தி) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இயற்கையான அசுத்தி என்றே பொருள்-வெள்ளைய நீதிபதி போர்டர்.
*
* பிராமணர்கள் அதற்கு எப்படி பொருள் கொள்கிறார்களோ அப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும்- (தாந்திரிகமான அசுத்தி)                              நீதிபதி சா.முத்துச்சாமி அய்யர்
* :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இவரைப் பற்றி பார்ப்பனர்கள் -தெருவிளக்கின் வெளிச்சத்தில் படித்தவர்.அப்படிப் படித்து வெள்ளையர் அல்லாத முதல் நீதிபதி என்பார்கள்.
- [x] பொதுவாக அந்தக்காலகட்டங்களில் வெள்ளையர்கள் தான் நீதிபதி,கலெக்டர்,காவல் துறை உயர் அதிகாரிகளாக இருப்பார்கள்.
*
* வெள்ளையர் அல்லாத யாராவது உயர் பதவிகளுக்கு வந்தால் அது பார்ப்பனர்களாகத் தான் இருக்கும்.
*
* பார்ப்பனர்கள்,இந்தியர்களை உயர் பதவிகளில்அரசு நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டால் அது பார்ப்பனர்களை நியமிக்க வேண்டும் என்பதே அன்றைய பொருள்.


*
* வெள்ளுடை வேந்தர் தியாகராயரின்,பார்ப்பனர் அல்லாதார் அறிக்கையும் (Non Brahamin manifesto)அதைத்தான் சுட்டிக்காட்டியது.
* சர் முத்துச்சாமி அய்யர் தலைமை நீதிபதியாகவே ஆனார்.
*
* அன்றைக்கு மெயில் ஏடு -பார்ப்பனர்களை நீதிபதியாக நியமித்தால்-ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி எப்படி கிடைக்கும்?என்று எழுதிற்று.
*
* அப்படி மெயில் ஏடு -சமூக நீதிக் கண்ணோட்டத்தோடு எழுத,பார்ப்பனர்கள்,
* நாமும் ஒரு பத்திரிக்கை,மெயில் ஏட்டிற்கு எதிராக தொடங்கவேண்டும் என்ற ஆதிக்க சித்தத்தில் பிறந்தே THE HINDU-ஆங்கில நாளிதழ்.இதை தனிப்பதிவாக எழுதுவோம்.
*
* மெயில் ஏடு கணித்ததற்கு ஒரு பங்கு மேலாகவே ஸனாதன தர்மப்படி’நடந்து கொண்டார்;தீர்ப்பும் வழங்கினார் திருவாளர் தெரு விளக்கில் படித்தவர்.
*
* வழக்குகுள் செல்வோமா!
* 1885-இல் ஒருஆசாரி (விஸ்வப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள்) ஒருவர் கோயிலுக்குள் சென்று சிவலிங்கத்தை அவரே அபிஷேகம் செய்தார்.
*
* பார்ப்பனர்கள்,—ஆசாரி சிவலிங்கத்தை’
* அசுத்தப்படுத்தி விட்டார் என்று சென்னை
* உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
* இருவர் பெஞ்ச் விசாரித்தது.
*
* ஐரோப்பிய நீதிபதி போர்ட்டர்-defile என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இயற்கையான அசுத்தி’ என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
*
* ஆங்கில அகராதிகள் சதாரணமாக கொடுக்கப்படும் பொருள்  அது தான்என்றார்.
*
* விடுவாரா!நமது தெருவிளக்கு அய்யர்.
* பிராமணர்கள்,அந்த ‘அசுத்தியை’”எப்படி பொருள் கொள்கிறார்களோ”அப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும்.அதன் அடிப்படையில் “தாந்திரிகமான அசுத்தி”
* என்று பொருள் கொள்ளப்பட்டு,அதன்படி ஆசாரிக்கு தண்டனை வழங்கப்பட்டது.
*
* முத்துச்சாமிஅய்யர் எழுதிய தீர்ப்புதான்,அதன் பிறகு இது போன்ற வழக்குகள் உயர்நீதிமன்றத்திலோ,அல்லது
*
* கீழமை நீதிமன்றங்களிலோ வந்தால் முத்துச்சாமி அய்யரின் தீர்ப்பின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
*
* குறிப்பாக 1899-இல் கமுதி ஆலயத்திற்குள் நாடார்கள் பால்குடம் எடுத்து நுழைந்த வழக்கிலும்,முத்துச்சாமி அய்யரின் தீர்ப்பின் சராம்சங்களே பேசிற்று.
*
* கீழமை நீதிமன்றங்களில் இருந்து பிரிவு கவுன்ஸில் வரை நாடார்கள் போராடித் தோற்றார்கள்.
*
* அவர்களுக்கு அன்றைக்கு வழக்குச் செலவு,
* ஒரு லட்சத்தி நாற்பத்தி இரண்டாயிரம் ரூபாய்.அன்றைக்கு அதன் மதிப்பு 7கிலோ தங்கம்
* இன்றைய மதிப்பில் பெருக்கி பார்த்துக் கொள்ளுங்கள்.
*
* தந்தை பெரியார் சும்மாவா!சொன்னார்
* “பார்ப்பனர்கள் நீதிபதியாய்,ஆட்சித்தலைவனாய் இருக்கும் நாடு, கடும் புலி வாழும் காடு என்று”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக