ஞாயிறு, 22 மே, 2022

ரஷ்யர்கள் பலாத்காரம் பண்றாங்க.. கேன்ஸ் ரெட்கார்ப்பெட்டில் நிர்வாணமாக வந்த பெண்ணால் பரபரப்பு!

  Mari S  -  tamil.filmibeat.com  : கேன்ஸ்: ஐஸ்வர்யா ராய், பூஜா ஹெக்டே, தீபிகா படுகோன், தமன்னா உள்ளிட்ட இந்திய நடிகைகளுடன் உலக நடிகைகள் பலரும் அணிவகுத்து வரும் கேன்ஸ் ரெட்கார்ப்பெட்டில் நிர்வாணமாக ஓடி வந்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
75வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இதில், தமிழ் சினிமா பிரபலங்களான கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான், பார்த்திபன், பா ரஞ்சித் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.
கேன்ஸ் திரைப்பட விழா
பிரான்ஸ் நாட்டில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த மே 17ம் தேதி கோலாகலமாக ரெட்கார்ப்பெட் நிகழ்ச்சியுடன் தொடங்கிய நிலையில், வரும் மே 28ம் தேதி வரை அங்கே இந்த பிரம்மாண்ட சினிமா விழா நடைபெற உள்ளது. முதல் முறையாக ஒரு நாட்டின் சினிமாவை கெளரவிக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ள கேன்ஸ் அமைப்பு இந்திய சினிமாவை கெளரவப்படுத்தி வருகிறது.

இந்திய சினிமா பிரபலங்கள்
கேன்ஸ் திரைப்பட விழாவில் கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான், மாதவன், பார்த்திபன், பா ரஞ்சித், தீபிகா படுகோன், தமன்னா, பூஜா ஹெக்டே, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். விக்ரம் படத்தின் NFTஐ கமல் அறிமுகப்படுத்தியுள்ளார். வேட்டுவம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பா ரஞ்சித் அறிமுகப்படுத்தி உள்ளார். லெ மஸ்க் படத்தை ஏ.ஆர். ரஹ்மான் ரிலீஸ் செய்துள்ள நிலையில், மாதவனின் ராக்கெட்டரி படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ரெட் கார்ப்பெட் வரவேற்பு
தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, பூஜா ஹெக்டே, ஊர்வசி ரவுத்தேலா மற்றும் பாலிவுட்டின் இளம் நடிகைகள் என இந்திய சினிமா பிரபலங்கள் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் என பலரும் தினமும் விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து ரெட்கார்ப்பெட்டை கலக்கி வருகின்றனர்.
நிர்வாணமாக வந்த பெண்
இந்நிலையில், கேன்ஸ் விழாவையே கதிகலங்க செய்யும் ஒரு நிகழ்வு அரங்கேறி உள்ளது. ரெட்கார்ப்பெட்டில் திடீரென உடலில் ஆடை ஏதும் அணியாமல் நிர்வாணமாக ஒரு பெண் ஓடி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் உடலில் எழுதியிருந்த வாசகங்கள் அதை விட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ரஷ்யர்கள் பலாத்காரம் பண்றாங்க
உக்ரைன் நாட்டை சேர்ந்த அந்த பெண் ரஷ்ய படை வீரர்கள் எங்கள் நாட்டு பெண்களை வயது வித்தியாசம் கூட பார்க்காமல் பலாத்காரம் செய்து வருகின்றனர் என்கிற அழுத்தமான தனது குரலை பதிவு செய்யவே இப்படி நிர்வாணமாக ஓடி உள்ளார். உடனடியாக அங்கு இருந்த காவலர்கள் அவருக்கு ஆடையை போர்த்தி அங்கிருந்து அழைத்துச் சென்றது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் அதிபர் பேச்சு
உக்ரைன் அதிபர் பேச்சு

உக்ரைன் நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திரையில் தோன்றி பேசிய வீடியோ மெசேஜ் உடன் தான் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவே தொடங்கியது. உக்ரைன் நாட்டிற்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள போருக்கு ஹாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவும் உக்ரைன் நாட்டு மக்களுக்கு ஆதரவு குரல் கொடுத்தது. இந்நிலையில், தான் இப்படியொரு சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக