சனி, 28 மே, 2022

35 ஆண்டுகளுக்குப் பின் அண்ணா சாலையில் கலைஞர் சிலை ..16 அடி உயரம்.. 5 கட்டளைகள்

 கலைஞர் செய்திகள்  : முத்தமிழரிஞர்  கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு !
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை இன்று (28.05.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை சிறப்பித்துப் போற்றிடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் இன்று (28.5.2022 சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு அவர்கள் திறந்து வைத்தார்.

மேலும். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திறக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் 16 அடி உயரமுள்ள வெண்கல சிலையின் கீழ் அமைந்துள்ள 14 அடி உயர பீடத்தில், கலைஞரின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன!

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!

அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்!

இந்தித் திணிப்பை எதிர்ப்போம்!

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி! - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக