Susairaj Babu : தமிழறிஞர் தெரிந்துகொள்வோம், வாழ்ந்தது 33 ஆண்டுகள், மட்டுமே,,,,
நா.கதிரைவேற்பிள்ளை (1874-1907) யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் வந்து, தமிழ்ப்பணிக்கும் சைவப்பணிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைக் கவனிக்கும் – அவதானிக்கும் – ஆற்றல் படைத்தவர். ஆகையால் இவரை சதாவதானி என்ற சிறப்புப் பட்டத்துடனேயே குறிப்பிடுவர்.
இரு மொழி அகராதி இருந்தபோதிலும், தமிழுக்கு ஒரு மொழி அகராதி வெளிவராமல் இருந்தது. அந்த குறையை போக்கும் வண்ணமாக அவர் வெளியிட்ட அகராதி, தமிழ் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. கதிரைவேற்பிள்ளையின் 'சுப்பிரமணிய பராக்கிரமம்' என்ற நூலின் அடிப்படையில் தான் பழநி தண்டாயுதபாணி கோயிலில் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு தலப்புராணங்களை இவர் இயற்றியுள்ளார். மதுரை தமிழ்ச்சங்கப் புலவராகவும் அவர் இருந்துள்ளார்.
கதிரைவேற் பிள்ளை இயற்றிய நூல்கள்:-
தமிழ்ப் பேரகராதி, அதிவீரராம பாண்டியனாரின் கூர்ம புராணத்துக்கு விளக்க உரை, பழநித் தல புராண விருத்தியுரை, சித்திரக் கவிகள்: கமலபந்தனம், கோபுர பந்தனம், ரத பந்தனம், இரட்டை நாக பந்தனம், சிலேடை வெண்பா, யமகம் நிறைந்த கட்டளைக் கலித்துறை வெண்பா, கருவூர் மான்மியம் (மஹாத்மியம்), சீட்டுக் கவிகள் பல எழுதியுள்ளார். இவர் திறமையை கண்டு வியந்த ஆங்கிலேயர் கிலேட்டன் குன்னூரில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.
ரெவெரெண்ட் கிளேட்டன் துரையவர்களால் மெயில் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட செய்தி:-
“தமிழ்ப் பாண்டித்யத்தின் அபிவிருத்தியி லூக்கமுடைய சதாவதானம் நா.கதிரைவேற்பிள்ளைக்கு இம்மாதம் 25ஆம் தேதி குண்ணூரில் திடீரென்று நேர்ந்த மரணம் துக்கத்தையுண்டாக்கக்கூடியதே. அவரது வயது 36 ஆயினும் இச்சென்னையிலும், மதுரையிலும், தன் சுய நாடாகிய இலங்கையின் வடக்கிலும் தமிழ்க் கல்வியில் சிறந்தவர் என்ற கீர்த்தியைப் பெற்றிருக்கிறார். பூர்வீக பாஷையின் தத்துவ சாத்திரங்களில் பாண்டித்தியமும் மிக்க வைராக்கியமுடையவ ரென்றும் பிரசித்தியடைந்தவர். சின்னாளைக்கு முன் இச்சென்னையில், சதாவதானம் , (அதாவது நூறு விஷயங்களை ஏக காலத்தில் கவனமாய்ச் செய்தல்) ஆச்சரியமான பெரு ஞாபகத்தைக் காட்டினார். அக்காலத்திலங்கு வந்திருந்த வித்துவான்கள் முன்னிலையில் அபரிமிதமான வரிசைகளுடைய எண்களின் தொகைகளையும், மிகக் கஷ்டமான தமிழ்ச் செய்யுட்களைச் சொல்லியும், அநேகர் பிரமிக்கும்படியான கேள்விகட்குச் சிறிதும் தாமதமும், சந்தேகமில்லாதும், கலவரப்படாமலும் விடையிறுத்திய பின்னர்தான் சதாவதானியென்ற பெயரால் வித்வத்சிரோமணிகளால் அழைக்கப்பட்டார். அவர் அநேக நூல்களைச் செய்திருப்பவராயிருந்தாலும் அவற்றுள் மிக்க அருமையும் எவரும் தெரிந்துகொள்ளும்படியாய் வெளியாகியது தமிழ்ப் பேரகராதியே. தம்வேலைகளில் மிக்க ஊக்கமும் ஜாக்கிரதையுமுடையவர். அவர் வைதீக சைவராயிருந்தும் அந்நாட்க்குரிய வேலைகளின் பேரில் மிக்க கவனமுடையவர். அவர் பிறப்பு மிகச் சிறந்ததே.”
அருமை, நன்றியுடன் இனிய காலை வணக்கம்
பதிலளிநீக்கு