ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

Sri Lanka அவசர நிலை பிரகடனம்.. சமூக வலைதள தடை நீக்கம்.. இலங்கை அரசின் திடீர் விளக்கம்..

 Thanalakshmi V - tamil.asianetnews.com  : பொருளாதார நெருக்கடி:
இலங்கையில் முடக்கப்பட்டிருந்த சமூக வலைதள சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு  வந்தது என்று தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
இலங்கை அரசு அந்நிய செலாவணி கையிருப்பு குறைவால் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மேலும் பிற நாடுகளிடமிருந்து பெற்றுள்ள கடன் அளவு அதிகமானதால், அன்னியச் செலாவணி கையிருப்பு 2000 கோடி டாலருக்கும் குறைந்துவிட்டதால் உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், அத்தியாவசியப்பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால அனைத்து பொருடகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.



மக்கள் போராட்டம்:
மேலும் உணவு பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் இல்லாததால் பெரும்பாலான இடங்களில் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்று வாகனங்களுக்கு எரிபொருள் போட்டு செல்கின்றனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியாவிடம் கடனுதவி கோரியுள்ளது இலங்கை அரசு. மேலும் சர்வதேச நிதியத்திடமும் கடனுதவியை இலங்கை கேட்டுள்ளது.

Social web service back in Sri Lanka

நிலக்கரி, டீசல் உள்ளிட்ட எரிபொருள் குறைவால், மின் உற்பத்தி வெகுமாக குறைந்தள்ளது. இதனால் இலங்களில் ஒரு நாளைக்கு 13 மணி  நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின்  பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து அதிபர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முந்தினம் இரவு, அதிபர் கோத்தபய ராஜபக்ச இல்லத்தின் முன் நடத்தப்பட்ட போரத்தில், ஒரு பேருந்து ஜீப் ஆகியவை தீவைத்து கொளுத்தப்பட்டன. இதனால் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய தடியடியில், 5 பெண்கள் உட்பட 45 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே எதிராக மிக பெரிய பேரணியை நடத்த மக்கள் இன்று திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் ஒன்றிணைவதை தடுக்கும் வகையில், இலங்கை அரசு நேற்று நள்ளிரவு முதல் 12 சமூக ஊடகங்களுக்கு நாடுமுழுவதும் தடைவிதித்திருந்தது.Social web service back in Sri Lanka

அதுமட்டுமல்லாமல் இலங்கையில் 36மணிநேரம் ஊரடங்கு உத்தரவையும் அதாவது சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை ஊடரங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் முடக்கப்பட்டிருந்த சமூக வலைதள சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு  வந்தது என்று தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக