ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

பார்ப்பனர்களுக்கு தானம் கொடுத்தால் கிடைக்கும் அதிஷ்டங்கள்! .. வருண சிந்தாமணி என்கின்ற சுரண்டல் தத்துவ சிந்தாமணி

May be an image of 5 people, people standing and text that says 'சகல தானங்களும் பிராமணர்களுக்கே செய்யவேண்டும். அவர்களுக்குச் செய்யுந்தானம் சகலவருணத்தாருக்கும் செய்தபலனை யொக்கும். அது எங்ஙனமொக்கு மெனில், ஓர் செடியின் வேரில் சலம் விட்டால் அது அம்மரத்தின் கிளை இலை பூ காய் முதலியவைகட்கும் பலனுண்டாக்குவது போலப் பிரமாவின் வாயினிட முண்டானவன் அந்தணனாதலால், அவனுக்குக் கொடுக்கும் உணவு அப்பிரமாவின் வாயின் வழியாகச்சென்று அவன் தோள் துடை பாதம் ஆகிய அவயவங்களிலுண்டான கூத்திரிய வைசிய குத்திரர்களுக்கும் பலனைக்கொடுக்கு மென்பதாம். -"வருண சிந்தாமணி" 1901 பதிப்பு'

Dhinakaran Chelliah  :  “வருண சிந்தாமணி” விமர்ச்சிக்கும்  பிராமணர்க்கீந்த தானபலன்;
 சகலதானமும், அந்தணர்க்கே கொடுக்கவேண்டும்.
அவர்களுக்குக் கொடுக்கும் பூதானத்தால் சொர்க்கமும்,
கோதானத்தால் வைத்தரணி என்னும் அக்கினி ஆற்றைக் கடத்தலும்,
கிருக தானத்தால் சொர்க்கம் பெறுதலும், குடைத் தானத்தால் உஷ்ண நிவிர்த்தியும்,
பாதரட்சைத் தானத்தால் நடையில் உண்டாகும் உபாதியொழிவும், கந்தத்தானத்தால் துர்காற்றம் ஒழிவும், அன்னதானத்தால் சுகமும் அடைவன்.
வீட்டின்மேலே கழுகு வந்து இருந்தால் அதைப்பிராம ணனுக்குத்தானஞ்செய்தாற் பாவவிமோசனமாம்.
பூனையைக்கொன்றால் பொன்னாற் பூனை செய்து பிராமணனுக்குத் தானஞ் செய்தால் பாப விமோசனமாம். இவை போலுந் தானபலன்கள் பலவுள விரிக்கிற் பெருகும்.


அந்தணர்க் கீந்ததானம் அனைத்துயிர்க்கீந்ததானமெனல்;
ஆகையால் சகல தானங்களும் பிராமணர்களுக்கே செய்யவேண்டும். அவர்களுக்குச் செய்யுந்தானம் சகலவருணத் தாருக்கும் செய்தபலனை யொக்கும். அது எங்ஙனமொக்கு மெனில், ஓர் செடியின் வேரில் சலம் விட்டால் அது அம்மரத்தின் கிளை இலை பூ காய் முதலியவைகட்கும் பலனுண்டாக்குவது போலப் பிரமாவின் வாயினிட முண்டானவன் அந்தணனாதலால், அவனுக்குக் கொடுக்கும் உணவு அப்பிரமாவின் வாயின் வழியாகச்சென்று அவன் தோள் துடை பாதம் ஆகிய அவயவங்களிலுண்டான க்ஷத்திரிய வைசிய குத்திரர்களுக்கும் பலனைக்கொடுக்கு மென்பதாம்.
இன்னும் இந்த தானங்களை பிராம்மணர்களுக்கு மட்டுமே வழங்கும் வழக்கம் உள்ளது, காரணம் மேலுள்ளது போல்  சுரண்டல் தத்துவத்தை நிலைநிறுத்தப் பயன்பட்ட விளக்கங்களே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக