திங்கள், 11 ஏப்ரல், 2022

ராமநவமி வடஇந்தியா முழுவதும் வன்முறை .. பாஜக குண்டர்கள் ...

 Rishvin Ismath : 'ராம் நவமி' எனப்படுகின்ற ராமன் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் யாத்திரைகளைத் தொடர்ந்து இந்தியாவின் நான்கு மாநிலங்களில் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன.
பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன, பொலிசாரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர், காயமடைந்த போலீசார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அடையாளம் காணப்படாத ஒருவர் கொல்லப் பட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்துக்கள், வீடுகள், வாகனங்கள் தீயிடப் பட்டுள்ளன.
அத்துடன் மாமிச உணவை சாப்பிட்ட டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது.


கலவரங்களில் ஈடுபட்டதாக வலதுசாரி இந்துத்துவா அமைப்புகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ராம் நவமிக்காக ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப் பட்டதைத் தொடர்து இடம்பெற்ற கல்லெறித் தாக்குதல் காரணமாகவே கலவரங்கள் தூண்டப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒலிமாசை உருவாக்கும் காரணத்தால் ஒலிபெருக்கிகளின் தேவையற்ற பாவனை தடை செய்யப்படல் வேண்டும்.
கலவரத்தில் பாதிக்கப் படப் போவது மக்களே தவிர கடவுள்கள் அல்ல, அத்துடன் யார் பாதிக்கப் பட்டாலும் இல்லாத கடவுள்களான அல்லாஹ்வோ, ராமனோ வந்து யாரையும் காப்பாற்றப் போவதில்லை, மாறாக சக மனிதர்களே காப்பாற்ற வேண்டும்.
இல்லாத கடவுள்களுக்காக மத ரீதியாக, சாதி ரீதியாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொள்வதில் பயனில்லை. மதம் துறந்து மனிதம் வளர்க்க முன்வாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக