ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது- முதலமைச்சர் ஸ்டாலின்

 மாலைமலர் வல்லுநர் குழு பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து, உரிய முடிவை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது- தமிழக அரசு
தமிழ்நாட்டில் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரலம் 1-ம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையைக் கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியமும், அவர்களுக்குப் பிறகு அவர்களின் வாழ்விணையருக்கு குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படும். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது.

மாறாக, அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் ஒரு பகுதி பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திரும்ப எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இது பயனற்றது என்பதால் பழைய ஓய்வூதியத்துக்கு மாற அரசு ஊழியர்களும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விவகாரம் பரிசீலனையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் வழங்கியுள்ளது.  வல்லுநர் குழு பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து, உரிய முடிவை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக