சனி, 16 ஏப்ரல், 2022

இந்தி நிறவெறி சினிமா உலகை ஏறி மிதித்து எகிறி அடிக்கும் தென்னிந்திய சினிமா ..

May be an image of 2 people and outdoors

Kathir RS  :  ஹிந்தி சினிமா உலகம்...இனி என்ன செய்யப் போகிறது?
80 90 களில் ஆதிக்கம் செலுத்திய ஹீரோக்களும் ஹீரோயின்களும் மெல்ல பழஞ்சரக்காகி காணாமல் போய்..இன்று புதியவர்களில் ஒரு சிலரே தேறுவார்கள் என்ற நிலையில்..
சுனாமியாய் பேரெழுச்சியாய் 1000 கோடி 2000 கோடி வசூலைக் குவிக்கும் படங்களை தென்னிந்தியா தயாரித்து உலகின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கும் நிலையில்...
இந்தி சினிமா உலகம் இனி என்ன செய்யப் போகிறது?
இந்தியாவின் பெரியண்ணனாக தன்னை கருதிக் கொண்டு இங்கிருந்து சென்ற அத்தனை டெக்னீசியன்களையும் நடிகர்களையும்...துணை நடிகர்களையும்.. ஓ..தட் டார்க் கை னா என அலச்சியமாக ஏறிட்ட இந்தி சினிமா உலகம் இனி என்ன செய்யப் போகிறது?
இந்தி நஹி ஆத்தீஹே?
சர் நேம் நஹிஹே?
என்று கிண்டல் செய்தும்...
என்ன ராஸ்கலா....


கோகனட் மே லஸ்ஸி மிலாக்கே..
நூடுல்சில் தயிர்... என்று இல்லாத பழக்கங்களை தென்னிந்தியர்களின் பழக்கங்கள் என படங்களில் பதிவு செய்து
லுங்கி வாலா தோத்தி வாலா எனபெயர் சொல்லி அழைத்த
இந்தி சினிமா உலகம் இனி என்ன செய்யப் போகிறது?
மணி ரத்னம் ஏஆர்ரஹ்மான் முதற்கொண்டு அத்தனை தென்னிந்திய இயக்குநர்களுக்கும் கலைஞர்களுக்கும் உரிய மரியாதை தராமல் அவர்களது தோல்விகளை கொண்டாடிய இந்தி சினிமா உலகம் இனி என்ன செய்யப் போகிறது?
வெள்ளைத்தோலை மத்திய ஆசியர்களிடமும் பர்சியர்களிடமும் முகமதியர்களிடமும் பிற்காலத்தில் ஐரோப்பியர்களிடமும் கடன் பெற்றதோடல்லாமல்..
இந்த மண்ணின் மைந்தர்களைப் பார்த்து காலா கல்லு காலியா என நிறவெறிச் சொற்களை முகத்துக்கு நேராக பேசி கிண்டல் கேலி செய்த இந்தி சினிமா உலகம் இனி என்ன செய்யப் போகிறது?
இது தெரியாமலா நாங்கள் இந்தியை எதிர்த்தோம்  எதிர்க்கிறோம்?
இன்னும் எதிர்ப்போம்..!
இந்தி என்ற மொழியை தேசிய மொழியாக்கி ஆங்கிலத்தை துரத்தியிருந்தால்..இன்று எங்கள் மொழி திரைப்படங்கள் இப்படி இந்தி மொழி சினிமாவை ஏறி மிதித்திருக்க முடியுமா?
எல்லா மாநிலங்களிலும் இந்தி படங்கள் தானே ஓடியிருக்கும்..இந்தி ஹீரோக்களும் ஹீரோயின்களும் தானே நட்சத்திர அந்தஸ்த்தில் இருந்திருப்பார்கள்..இந்தி இயக்குநர்களும் தாரிப்பாளர்களும் மட்டும்தானே கோடிகளில் புரண்டிருப்பார்கள்.
இந்தி சினிமாவுடன் ஒருபோதும் போட்டி போட முடியாத மராட்டி குஜராத்தி பெங்காலி போஜ்பூரி மொழி சினிமாக்களைப் போலத்தானே தென்னிந்திய திராவிட மொழி சினிமாக்களும் ஒரு ஓரமாக இருந்திருக்கும்.
அதெல்லாம் இருக்கட்டும்..
இனி என்ன செய்ய போகிறது இந்தி சினிமா?
**
கதிர் ஆர்எஸ்
16/4/22

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக