வெள்ளி, 29 ஏப்ரல், 2022

தமிழ்நாடு முதல்வர் திரு மு க ஸ்டாலின் : என்னால் உணர்ச்சி பெருக்கை கட்டுப்படுத்த முடியவில்லை

 

ராதா மனோகர் : இலங்கை தமிழர் தலைவர்களும் சில தமிழ் அமைப்புக்களும் எனக்கு வைத்த கோரிக்கை , தனியாக தமிழர்களுக்கு என்று மட்டும் அனுப்பவேண்டாம் இலங்கை மக்களுக்கு என்று பொதுவாக அனுப்புங்கள்.
மக்களை பிரித்து பார்க்கவேண்டாம் . அனைத்து இனமக்களும் சேர்ந்துதான் இந்த நெருக்கடியை அனுபவித்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள்
அதை கேட்டபோது நான் நெகிழ்ந்து போனேன்
என்னால் உணர்ச்சி பெருக்கை கட்டுப்படுத்த முடியவில்லை .இதுதான் தமிழர் பண்பாடு
பகைவர்க்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்பது போல இலங்கை தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இது எடுத்து காட்டு
இந்த நிலைமையில் நாம் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்குமாக உதவிகள் செய்தாக வேண்டும்.
அந்த வகையில் பின்வரும் அத்தியாவசிய பொருட்களை வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது


முக்கியமாக 40 ஆயிரம் டன் அரிசி .இதன் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் எண்பது  கோடி (இந்திய ரூபாய்)
உயிர்காக்க கூடிய 137 வகை மருந்து பொருட்கள்    இதன் மதிப்பு 28 கோடி ரூபாய்
குழந்தைகளுக்கு வழங்க 500 டான் பால் பவுடர்.  இதன் மதிப்பு 500 கோடி ரூபாய் ( இந்திய ரூபாய்) .
இதனை எல்லாம் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் வழங்க நாம் நினைக்கிறோம்.
இதனை மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது
ஒன்றிய அரசின் அனுமதியோடு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம்தான் வழங்க முடியும்.
இலங்கையில் நெருக்கடி நிலைமை ஏற்பட்ட உடனேயே ஒன்றிய அரசிடம் இதுபற்றி கோரிக்கையை நான் வைத்தேன்.
 31 - 3 - 2022 இல் அன்று டெல்லி சென்று இதை வலியுறுத்தி இருக்கிறேன்  பின்பு ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களோடு இது பற்றி தொலைபேசியில் பேசியும் இருக்கிறோம்
... முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முழு பேச்சையும் இந்த காணொளியில் பாருங்கள்
இவர்தான் திராவிட முதலமைச்சர்  
வாழ்க தமிழ்நாடு அரசு   வெல்க திராவிடம்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக