ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

அரவிந்தர் ஆசிரமத்தில் அமித் ஷா தியானத்தில் ஈடுபட்டார்

 நக்கீரன் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரிக்கு வருகைப் புரிந்தார்.
சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையம் வந்த அவரை அம்மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.


இதனை தொடர்ந்து அவர் கார் மூலம் பாரதியார் அருங்காட்சியகத்துக்கு சென்றார். அங்கு பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அவர், பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திட்டார். பின்னர் பாரதியாரின் படைப்புகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் அரவிந்தர் ஆசிரமம் சென்று அங்கு தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழக கலையரங்கில் நடைபெற்ற அரவிந்தரின் 150- வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக