சனி, 9 ஏப்ரல், 2022

கேரளா மாநில சுயாட்சி மாநாட்டில் மலையாளத்தில் முழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 கலைஞர் செய்திகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலையாளத்தில் பேசத் தொடங்கி பின்னர் தமிழில் உரையாற்றினார்.
“எல்லாத்திலும் மேல் என்ட பேரு ஸ்டாலின்” : கேரளாவில் மலையாளத்தில் பேசி அசத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநாடு, கேரளாவின் கண்ணூரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று கலந்துகொண்டு ஒன்றிய - மாநில அரசு உறவுகள் எனும் தலைப்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் இடையேயான உறவு என்பது சங்க காலம் தொட்டு உள்ளது. திராவிட - கம்யூனிஸ்ட் உறவு என்பது 80 ஆண்டு கால வரலாறு கொண்டது. வ.உ.சிதம்பரனார் சிறை வைக்கப்பட்ட கண்ணூர் மண்ணில் மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தில் பெரியார் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்தார். எல்லாவற்றிற்கும் மேலாக என் பெயர் ஸ்டாலின்” என மலையாளத்தில் உரையாற்றினார்.
“எல்லாத்திலும் மேல் என்ட பேரு ஸ்டாலின்” : கேரளாவில் மலையாளத்தில் பேசி அசத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், “மாநில உரிமைகளை காப்பதில் சிங்கம் போல் செயல்படுகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். எனக்கு வழிகாட்டும் முதல்வராக பினராயி விஜயன் திகழ்கிறார். சிறந்த மாநில ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் பினராயி விஜயன். ஒன்றிய அரசை பற்றி கவலைப்படாமல் சிறப்பாக ஆட்சி நடத்துபவர் பினராயி விஜயன்.

இந்தியாவை காப்பற்ற வேண்டும் எனில் முதலில் மாநிலங்கள் காப்ப்பாற்றப்பட வேண்டும். மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மக்களை பழிவாங்குகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என மாற்ற முயற்சிக்கிறார்கள். ஆளுநர்கள் ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படுகின்றனர். வேற்றுமைகள் அனைத்தையும் அழித்து ஒற்றைத்தன்மையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
“எல்லாத்திலும் மேல் என்ட பேரு ஸ்டாலின்” : கேரளாவில் மலையாளத்தில் பேசி அசத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஆங்கிலேயர் ஆட்சியில் கூட ஒற்றை தன்மை அதிகாரங்கள் இல்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள் இருக்கும்போது ஆளுநர்கள் மூலம் ஆட்சிபுரிய நினைக்கிறது ஒன்றிய அரசு.

மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் கொண்டதாக இந்திய அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும்.” எனப் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக