சனி, 16 ஏப்ரல், 2022

நடிகை பலாத்கார வழக்கு.. 11,161 வீடியோக்கள் மீட்பு.. திகைத்துப் போன அதிகாரிகள்.. சிக்கலில் நடிகர்!

 Mari S  -  ://tamil.filmibeat.com/ : திருவனந்தபுரம்: கேரள நடிகை பாலியல் வழக்கில் திடுக்கிடும் பல திருப்பங்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் தீலிப் மற்றும் அவரது மனைவி காவ்யா மாதவன் இணைந்து திட்டமிட்டு நடிகையை பழிவாங்க நடத்திய பாலியல் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
2017ம் ஆண்டு நடந்த அந்த கொடூர சம்பவத்திற்கு விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில்,
நடிகர் திலீப் மற்றும் அவரது உறவினர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்து டெலிட் செய்யப்பட்ட வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் லட்சக் கணக்கான போட்டோக்கள் சிக்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
 நடிகையை பழிவாங்க நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவியின் தோழியான பிரபல தென்னிந்திய நடிகையை கடந்த 2017ம் ஆண்டு காரில் கடத்தி நடத்தப்பட்ட பாலியல் பலாத்கார விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.



இந்த விவாகரத்தில் நடிகர் தீலிப்பின் மனைவி காவ்யா மாதவனை விசாரணைக்கு போலீசார் அழைத்த நிலையில், அவர் இன்னமும் ஆஜர் ஆகவில்லை. 11,161 வீடியோக்கள் 11,161 வீடியோக்கள் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ உள்பட, பல வீடியோ ஆதாரங்கள் சிக்கிய நிலையில் தான் நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நடிகர் திலீப் மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அவரது உறவினர்கள் உள்ளிட்டவர்களின் செல்போன்களில் டெலிட் செய்யப்பட்ட டேட்டாக்களை போலீசார் மீட்டுள்ளனர்.
மொத்தம் 11,161 வீடியோக்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், 22 ஆயிரம் ஆடியோக்கள் மற்றும் 2 லட்சம் புகைப்படங்கள் என ஒரு பெரிய டேட்டாவே அழிக்கப்பட்டு இருந்த நிலையில், போலீசார் அதனை ரிகவர் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் திலீப் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான பல ஆதாரங்கள் அதில் இருப்பதாக கூறப்படுகின்றன. அவகாசம் தேவை அவகாசம் தேவை வரும் ஏப்ரல் 18ம் தேதிக்குள் மொத்த ஆதாரங்களையும் டிரையல் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை அதிகாரிகள் மேலும்,
3 மாத கால அவகாசத்தை கேட்டுள்ளனர். 6,682 வீடியோக்கள், 10,879 ஆடியோக்கள் மற்றும் 65,384 புகைப்படங்களை சோதிக்க வேண்டி உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மறுபக்கம் நடிகர் திலீப்பின் வழக்கறிஞர் கேரள டிஜிபி சந்தியா மற்றும் ஏடிஜிபி ஸ்ரீஜித் மீது புகார் அளித்துள்ளார். ஆதாரங்களை மீடியாக்கள் மூலம் லீக் செய்து நிதிமன்றத்தை அவமதித்துள்ளனர் என்றும், இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கிலும் தனது கட்சிக்காரரான திலீப்பின் குடும்பத்தினருக்கு தொல்லை கொடுக்கும் விதத்திலும் போலீசார் முறைகேடாக நடந்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார்.

Read more at: https://tamil.filmibeat.com/news/actress-sexual-assault-case-investigators-shocks-after-recover-11-161-deleted-videos-094578.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக