வியாழன், 24 மார்ச், 2022

மாணவிகளை இப்படிதான் மயக்கி என்னுடைய காம வலையில் வீழ்த்தினேன்.. கைதான ஆசிரியர் பரபரப்பு வாக்குமூலம்.

 asianetnews.com  :  எனது வீட்டின் அருகே வசிக்க கூடிய 16 வயது மாணவி என்னிடம் நடனம் கற்றுக்கொள்ள வந்தார். அவர் கொஞ்சம் வசதி படைத்தவர். அவரிடம் பணம் இருப்பதை அறிந்த நான் மாணவியுடன் நெருங்கி பழக தொடங்கினேன். ஏற்கனவே 2 மனைவிகளை பிரிந்து வாழ்ந்து வந்த நான், சிறுமியை தனது வலையில் வீழ்த்த திட்டமிட்டேன்.
 பாலியல் தொழிலுக்கு தள்ளிவிடுவதாக மிரட்டிஅடி பணிய வைத்தேன் என்று மாணவிகளை கடத்திய ஆசிரியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்தவர் மணிமாறன்(40). இவர் கோவையில் தங்கியிருந்த போது, தன்னிடம் டியூசன் படிக்க வந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இதேபோல் கன்னியாகுமரியை சேர்ந்த கல்லூரி மாணவியிடமும் திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்றார். 

இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 8 மாதங்களாக தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பதியில் பதுங்கி இருந்த மணிமாறனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து மாணவிகளையும் மீட்டனர்.

பரபரப்பு வாக்குமூலம்

இதனையடுத்து, மணிமாறனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், நான் ஆசிரியராக பணிபுரிந்து வந்தேன். அப்போது அங்கு ஒழுங்கிணமாக நடந்து கொண்டதாக கூறி என்னை பணிநீக்கம் செய்து விட்டனர். இதையடுத்து சேலத்தில் சொந்தமாக நிதி நிறுவனம் தொடங்கினேன். அதில் மக்களும் பணம் செலுத்தினர். அந்த பணத்தை மோசடி செய்து விட்டேன். இதுகுறித்து என்னிடம் பணம் செலுத்தியவர்கள் புகார் கொடுத்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும், அங்கிருந்தால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து கோவைக்கு வந்தேன்.

இதனையடுத்து, வருமானத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது டியூசன் மற்றும் நடன கற்றுக்கொடுத்தால் பெண்கள் பழகுவார்கள் நினைத்தேன். அதன்படி முறைப்படி நடனம் கற்று அந்த பகுதியில் டியூசன் மற்றும் நடன வகுப்பும்குப்பும் நடத்தினேன். அப்போது தான் எனது வீட்டின் அருகே வசிக்க கூடிய 16 வயது மாணவி என்னிடம் நடனம் கற்றுக்கொள்ள வந்தார். அவர் கொஞ்சம் வசதி படைத்தவர். அவரிடம் பணம் இருப்பதை அறிந்த நான் மாணவியுடன் நெருங்கி பழக தொடங்கினேன். ஏற்கனவே 2 மனைவிகளை பிரிந்து வாழ்ந்து வந்த நான், சிறுமியை தனது வலையில் வீழ்த்த திட்டமிட்டேன். ஒரு நாள் மாணவியிடம் நாம் எங்காவது சென்று விடலாம் என்றேன். அவரும் சம்மதித்தார். வரும்போது நகைகளை எடுத்து வர கூறினேன். அவரும் வீட்டில் இருந்து 8 பவுன் தங்க நகை, ரூ.1½ லட்சம் பணம் எடுத்து வந்தார்.

ஆசையை தீர்த்து கொள்ள நினைத்தேன்

இதைனயடுத்து, பாண்டிச்சேரி, கொடைக்கானல், சென்னை, பழனி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றேன். பின்னர் கன்னியாகுமரி சுசீந்தரம் பகுதியில் அவருடன் வாடகை வீட்டில் வசித்தேன். அப்போது அவர்களிடம் இது எனது அக்கா மகள். அவர்கள் இறந்து விட்டதால் நான் தான் கவனித்து கொள்கிறேன் என தெரிவித்தேன். இதனிடையே, அங்கு வீட்டின் உரிமையாளரின் மகள், கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். அவர், சரவணம்பட்டியை சேர்ந்த சிறுமியுடன் நெருங்கி பழகினார். மேலும் அவர் சரியாக படிக்காததால், அவரை பெற்றோர் அடிக்கடி கண்டித்து வந்தனர். இதையறிந்த நான், அந்த மாணவிக்கு ஆறுதல் கூறுவது போல் நடித்து, அவரை என் வலையில் வீழ்த்தி ஆசையை தீர்த்து கொள்ள நினைத்தேன். அதன்படி, அவருடன் பேசும் சந்தர்ப்பத்தை அதிகப்படுத்தி கொண்டேன். ஒருநாள் அந்த மாணவியிடம், நாம் வெளிமாநிலம் சென்று ஊர் சுற்றி பார்க்கலாம் என கூறி அவரையும், சிறுமியையும் பல இடங்களுக்கு அழைத்து சென்றேன்.

பாலியல் தொழிலில் தள்ளிவிடுவதாக மிரட்டல்

கல்லூரி மாணவி வீட்டில் இருந்து நகை, பணம் எடுத்து வந்திருந்தார். அதை வைத்து செலவு செய்தோம். எங்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராதபடி நடந்து கொண்டோம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, திருப்பதிக்கு சென்று வாடகை வீட்டில் தங்கினோம். கல்லூரி மாணவி கொண்டு வந்த பணம் தீர்ந்து போனதால், வாடகை செலுத்த முடியாமல் மிகவும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி மாணவியை சைக்கிளில் சென்று டீ விற்று வருமாறு தெரிவித்தேன். முதலில் மறுத்தார். பின்னர் அவரை பாலியல் தொழிலுக்கு தள்ளி விடுவதாக மிரட்டி அடிபணிய வைத்தேன். ஆனால், யாரிடமோ செல்போன் வாங்கி அவரது நண்பரிடம் பேசியதால் தான் போலீசில் சிக்கியதாக கூறியுள்ளார். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக