புதன், 9 மார்ச், 2022

உத்தர பிரதேசத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி திடீரென்று எடுத்து செல்லப்படுகிறது: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

 Rajkumar R  -   Oneindia Tamil :  லக்னோ : உத்திரப்பிரதேச மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் வரும் மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்து மதத்திற்கு மாறிய இளம்பெண்..மாமனரை தூக்க வாட்ஸ் ஆப்பில் பக்கா ஸ்கெட்ச்..வசமாய் சிக்கிய 5 பேர்.!இந்து மதத்திற்கு மாறிய இளம்பெண்..மாமனரை தூக்க வாட்ஸ் ஆப்பில் பக்கா ஸ்கெட்ச்..வசமாய் சிக்கிய 5 பேர்.!


பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் இல்லாமல் தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை மறுநாள் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை விவரங்களுக்கு மாற்றம் செய்வதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

அயோத்தியில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற உள்ளதாகவும் அதனால் பாஜக பயப்படுவதாக கூறியுள்ள அகிலேஷ் ,ம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறையீடு செய்தனர் எனவும், வாரணாசி தேர்தல் அதிகாரி உள்ளூர் வேட்பாளர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றனர் என்றார். இந்தப் புகார் குறித்து தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும் எனவும் அகிலேஷ் கூறியுள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எந்த வழியில் கொண்டு செல்லப்பட்டாலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், இது ஒரு திருட்டு போல எனக் கூறியுள்ளார். மேலும் நமது வாக்குகளை நானம் காப்பாற்ற வேண்டும் எனவும் இந்த முறைகேடுகளை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம் ஆனால் அதற்கு முன் ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் மக்கள்முன் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் எனவும் கூறியுள்ளார்.

ஜனநாயகத்தை காப்பாற்ற உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நமக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு எனவும் அகிலேஷ் கூறியுள்ளார். இந்நிலையில் அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டுக்கு இடையே வாரணாசியின் பஹாரியா பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு வெளியே சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக