பத்திரிக்கையாளர் சங்க அரங்கத்தில் நடக்கவிருந்த இந்த நிகழ்வானது திவிக அலுவலகத்திற்கு இடம் மாற்றப்பட்டிருக்கிறது.
தோழர் பரூக் ஒரு மத அடிப்படைவாதியால் (தனிநபர்) அவருடைய நாத்திக கொள்கைக்காக கொல்லப்பட்டிருக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை அவருக்கு ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சிகூட நடத்தக்கூடாது என்று சிலர் நினைப்பது அவமானகரமானது.
உண்மையில் அவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவில்லை. பரூக் கொல்லப்பட்ட பிறகுதான் பல முஸ்லிம் நாத்திகர்கள் (முன்னாள் முஸ்லிம்கள்) துணிச்சலாக தங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். தோழர் பரூக் நினைவேந்தல்கூட நடத்தக்கூடாது என்று பிரச்சாரம் செய்ய செய்யதான் , யார் அந்த பரூக், யாரால் எதற்காக கொல்லப்பட்டார் என்கிற ஆவல் முஸ்லிம் இளைஞர்களிடம் வளரும் என்கிற சிற்றறிவுகூட பாவம் அவர்களிடம் இல்லை.
பெரியார் சொன்னதுபோல, நமக்கு எப்பவுமே விளம்பரம் நம்முடைய எதிரிகளின் செலவில்தான் என்பதுபோல, இந்த முறை சில முஸ்லிம் நண்பர்களின் செலவில் ..farook
LR Jagadheesan : பகுத்தறிவின் பரிணாமம்
மத அடிப்படைவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட நாத்திகவாதியின் நினைவுநாள் நடத்தக்கூட முடியாத சூழலில் தான்,
நாடறிந்த நாத்திகவாதியான பெரியார் மண்ணெனப்படும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை பரிணமித்திருக்கிறது.>எவ்வளவு கேவலம்? அதுவும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இந்த அடக்குமுறை. நம்புங்கள் தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் கொடிகட்டிப்பறக்கிறது.
பகுத்தறிவு சுடர்விட்டு எரிகிறது. ஒருவன் நாத்திகவாதியானால் அவனுக்கு நினைவுநாள் நடத்தக்கக்கூடாது என்று எதிர்ப்பது ஆர் எஸ் எஸ் அல்ல. அக்ரஹாரங்கள் அல்ல.
இந்த நிகழ்வின், நிராகரிப்பின் பின் விளைவுகள் என்னவாக உருவெடுக்கும் இதில் so called முற்போக்காளர்கள் கடைபிடிக்கும் கள்ள மௌனமும் காரிய மௌனமும் யாருக்கு சாதமாகும் என்பதை நான் விளக்கத்தேவையில்லை. காலம் கண்டிப்பாய் உங்களுக்கு உணர்த்தும்.
So, Chennai Press Club withdraws permission to hold a memorial meeting of an atheist (ex-Muslim) who was brutally murdered by a Muslim extremist. Waiting for Periyarists, Marxists, Ambedkarites Feminists and all other shades of 24/7 politically correct progressives reaction to this, happening in a state capital.
Religious Extremists of all shades and 24/7 politically correct progressives in Tamil Nadu are united in their hatred against atheists. The irony is so-called Periyaarist brand atheists too became outright opportunists.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக