puthiyathalaimurai.com - Sinekadhara : தானே காங்கிரஸ் கட்சியின் முழு நேரத் தலைவர் என சோனியா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய சோனியா காந்தி, “நான் கட்சியின் முழு நேர தலைவர் பொறுப்பில் இருக்கிறேன்.
நிர்வாகிகள் கேட்டுக்கொண்டால் அதில் நீடிக்கப் போகிறேன்.
காங்கிரஸில் உள்ள அனைவருமே கட்சிக்கு புத்துணர்வு தரவேண்டும் என விரும்புகிறேன். ஆனால் அதற்குமுன் அனைவரும் ஒற்றுமையாகவும் சுய கட்டுப்பாட்டுடனும் இருப்பது அவசியம்.
கட்சி தலைமை குறித்த கருத்துகளை ஊடகங்கள் மூலம் எனக்கு தெரிவிக்காதீர்கள். எதுவாக இருந்தாலும் நேர்மையான வெளிப்படையான விவாதத்திற்கு கட்சி தயாராக இருக்கிறது.
கொரோனா காரணமாகத்தான் உட்கட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டது. அத்தேர்தலை நடத்துவது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக