புதன், 9 மார்ச், 2022

கோகுல்ராஜ் வழக்கு அதிமுக ஆட்சியில் ... ஒரு பார்வை


Bilal Aliyar :
2015 ஜூன் 23-ந் தேதி இரவு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் சாமி கும்பிட சென்ற கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர்கள் கோகுல்ராஜைத் தேடினர்.
ஜூன் 24-ந் தேதி பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
யுவராஜ், அவரது கூட்டாளிகள் 15 பேரும் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்தனர்.
2015,செப்டம்பர் 18-ந்தேதி கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை
டிசம்பர் 25-ந்தேதி யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


இவ்வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இருந்து வழக்கு விசாராணையை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜின் தாய் சித்ரா கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.
இவை அனைத்தையும் யுவராஜும் அவருடைய ஆட்கள் 14 பேரும் கூண்டுக்குள் நின்று சிரித்த முகத்துடனுயே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் நடந்த காலத்தில் அதிமுக ஆட்சி நடந்த கொண்டிருந்தது என்பதை கூட திமுககாரனாக இருந்தாலும் சொல்ல மாட்டார்கள். 2015-2021 காலங்களில் கொலையாளி யுவராஜின் சிரித்த முகத்துடனான பவனியை பலமுறை நாம் கண்டிருக்கிறோம். அதெல்லாம் இப்போது ஞாபகத்துக்கு வாரது…
ஒரு பேச்சுக்கு, இப்போது தீர்ப்பின் போதும் அதிமுக-பாஜக கூட்டணியின் ஆட்சி நடந்திருந்தால், தீர்ப்பில் என்ன நடந்தருக்கும் என்று திமுககாரனால் யூகிக்க முடிந்திருத்தால் அதிமுக இத்தனை வருடங்கள் தொடர்ந்து ஆட்சி நடத்தி இருக்காது. ஆனாலும் திமுககாரன் தன்னை கட்சிக்காரனாக காட்டிக் கொள்வைதை விட யோக்கியனாக காட்டிக்கொள்ள ரொம்ப மெனக்கெடுகிறான்
பிகு: இந்த வழக்கை திறம்பட நடத்திய வழக்கறிஞர் மோகன் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என் பாராட்டுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக