சனி, 26 மார்ச், 2022

பணத்தோட்டம் ... தனிமனித நிதி மேலாண்மை பற்றிய புரிதலுக்கும், சமூக பொருளாதார சிந்தனைக்கும்

 Karthikeyan Fastura  : பணத்தோட்டம் சேனல் ஆரம்பிப்பதற்கு முன் நிறைய யோசனைகள் தயக்கங்கள் இருந்தன.
எதையும் professional ஆக செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆரம்பத்தில் வீடியோ எடிட்டிங் நன்றாக இருந்தாலும் வீடியோ பதிவு மிக சுமாராக லைட்டிங் சரியில்லாமல் இருக்கும்.
இருந்தபோதிலும் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த சமயத்தில் வெளியிட்டோம்.
பிறகு அதனை நிறுத்தி வைத்தோம். ஏனென்றால் அதற்கென்று ஒரு தனியாக ஆள் கிடைக்கவில்லை.
மூன்று மாதங்களுக்கு முன்பு இதில் நிபுணத்துவம் பெற்ற ராகேஷ் என்ற தொழில்முறை வீடியோ எடிட்டர் கிடைக்கவும் மீண்டும் பணத்தோட்டம் சேனலுக்கு உயிர் கொடுத்தோம்.
இம்முறை அதற்கென்று ஒரு தனி அறை ஒதுக்கி, அங்கு லைட்டிங் ஏற்பாடுகள் செய்து,


i7 processor + 16GB Ram + SSD drive + Graphics card + 32" Dell Monitor என்று ஏற்பாடு செய்துகொடுக்க,
ராகேஷ் தரமான வீடியோ கேமராவுடன் களமிறங்க வீடியோக்களின் தரம் மிகச் சிறப்பாக வந்தது.
ஒவ்வொரு வீடியோவிற்கு முன்பு கலந்தாலோசித்து  முன்தயாரிப்புடன் களம் இறங்குவோம்.
எங்களின் உழைப்பு நல்ல பலன் கொடுக்க ஆரம்பித்தது. இரண்டு மாதத்தில் subscribers count 1000 தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இந்த சேனல் ஆரம்பிப்பதற்கு காரணம் தனிமனித நிதி மேலாண்மை பற்றிய புரிதலை ஏற்படுத்தவும், சமூக பொருளாதார சிந்தனையை மக்களிடம் எடுத்துச் செல்லவும் விரும்பினோம்.
இந்த சேனலை ஏன் பார்க்க வேண்டும் என்று கேட்பீர்கள் என்றால் தனிமனித நிதி மேலாண்மை புரிதல் கொண்ட ஒருவரால் தன் வாழ்நாளில் அனைத்து வித மகிழ்ச்சியையும் பார்த்துவிடுவார் அவரது குடும்பத்திற்கும் கொடுப்பார். நீங்கள் அவராக இருக்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயம் இந்த சேனலை பார்க்க வேண்டும் என்பேன்.

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நீங்கள் இதனை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் பரிந்துரை செய்ய வேண்டுமென்று அ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக