திங்கள், 7 மார்ச், 2022

திமுக கோவை மகளிரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியில் இருந்து நீக்கம்

தொடர் நீக்கம்: அடுத்து மீனா

மின்னம்பலம் : கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட சலசலப்புகள், உள்குத்து தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கட்சியின் முக்கியமானவர்களை கூட ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் இன்று மார்ச் 6 காலை கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட நிலையில்... மாலையில் கோவை மாநகரைச் சேர்ந்த திமுக மகளிர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி கோவை மாவட்டப் பொறுப்பாளரான அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் நடந்த திமுக செயற்குழுக் கூட்டத்தில் மீனா ஜெயகுமார் பேசும்போது... கோவை மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக்கை மேடையிலேயே ஒருமையில் பேசினார்.


இதுதொடர்பாக செந்தில் பாலாஜி அவரை சமாதானப்படுத்தி அமர வைத்தார். மீனா ஜெயக்குமாரின் இந்த நடவடிக்கை மகளிர் அணி செயலாளர் கனிமொழியின் எதிர்ப்பையும் பெற்றிருந்த நிலையில், இன்று மீனா ஜெயகுமார் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக