நக்கீரன் செய்திப்பிரிவு : ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனுக்கு இடமளித்து தங்களுக்கு ஆதரவாக இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பத்தில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டிருந்தார்.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று (01/03/2022) நடைபெற்றது. இதில் காணொளி மூலம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனுக்கு இடம் கொடுத்து, தங்களுக்கு ஆதரவாக இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், தங்களது மண்ணை தங்களால் காக்க முடியும்; ரஷ்யாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக