வெள்ளி, 18 மார்ச், 2022

ரஷ்யா ஆட்சியாளர்களால் ஒடுக்கப்படும் தேசிய இன மக்கள்

 Umayan Natarajan  :  ரஷ்யாவில் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் மொத்த மக்கள் தொகையில் 57 சதவீதம் ,அல்லது 10 கோடிக்கு மேல்; நாட்டின் எல்லைப்  பிராந்தியங்களில் அத்தேசிய இனங்கள் வசிக்கின்றன; அத்தேசிய இனங்களில் சில ருஷ்யர்களை காட்டிலும் கூட கலாச்சாரத்தில் உயர்ந்தவை;
உருசியாவின் அரசியல் முறையில் அதன் அனாகரிக மத்திய கால குணாம்சங்கள் விசேஷமாக காணப்படுகின்றன;
அந்நாட்டின் பூர்சுவா ஜனநாயக புரட்சி இன்னும் நிறைவு பெறவில்லை -


அத்தகைய உருசியாவில் சாரிசத்தினால் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தங்குதடை இன்றி சுதந்திரமாக பிரிந்து போகும் உரிமையை ஏற்றுக்கொள்வது சமூக ஜனநாயகவாதிகளுக்கு நிபந்தனையின்றி கட்டாயமானது;
அவர்களுடைய ஜனநாயக சோசலிச நோக்கங்கள் நிறைவேற்றுவதற்கு அது தனிப்பட்ட கடமையாகிறது. 1912 ஜனவரியில் மீண்டும் நிறுவப்பட்ட நமது கட்சி ஆயிரத்து 13 இல் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தில் மூலம் சுயநிர்ணய உரிமையை மீண்டும் வலியுறுத்தி மேலே கூறப்பட்ட அதே தூலமான பொருளில் விளக்கியது.
 1914 1916இல் பூர்சுவாக்கள் மத்தியிலும் சந்தர்ப்பவாத சோஷலிஸ்டுகளின் மத்தியிலும்(ருபனொவிச், பிளாஹானவ்,நாஷே தியாலோ வகையறா) மத்தியிலும் தலைவிரித்தாடிய மாருஷிய தேசிய வெறியானது இக்கோரிக்கையை நாம் இன்னும் அதிகமாக வலியுறுத்துவதற்கும் அதை ஏற்க மறுப்பவர்கள் நடைமுறையில் மகாருஷ்ய தேசிய வெறிக்கும் சாரிசத்துக்கும் ஆதரவு தருகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து கொள்வதற்கும் வேண்டிய சந்தர்ப்பத்தை நமக்கு அளிக்கிறது .

சுயநிர்ணய உரிமைக்கு எதிரான அத்தகைய நடவடிக்கைகளுக்கு நாம் கட்சியை சிறிதும் பொறுப்பு ஏற்க அழுத்தந்திருத்தமாக மறுக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறது.-லெனின்.
நூற்றி ஏழு ஆண்டுகளுக்குமுன் எழுதியது.
இன்று மாருஸ்ய தேசியவெறி தலைக்கேறி
நாடுபிடிக்க கிளம்பியிருக்கும் புட்டினை
போல்ஸ்சுவிக் வழியில் புரிந்துகொள்ள வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக