ஞாயிறு, 20 மார்ச், 2022

முன்னாள் முஸ்லீம் தோழர் பாரூக் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் வீர வணக்கம்.

May be an image of 6 people, people sitting and people standing

Jinna Maachu  :  இஸ்லாத்தில் நாஸ்தீகர்கள் !
இந்த கருத்தரங்கத்திற்கு வந்திருக்கும்
இசுலாமிய மத அடிப்படைவாதத்திற்குப் பலியான நம் தோழர் ஃபாரூக்கின்
 ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்க கூட்டத்தில், தலைமை ஏற்று வந்திருக்கும்
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் அண்ணன், கொளத்தூர் மணி அவர்களே
 திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்களே
 திராவிட இயக்கத் தமிழர் பேரவையைச் சேர்ந்த தோழர் இரா.உமா அவர்களே
தோழர் பீர் முகமது அவர்களே
தோழர் வசந்தன் அவர்களே


மற்றும் தி. வி. க தோழர்களே, பொது மக்களே, தாய்மார்களே, அனைவருக்கும்  எனது பணிவான வணக்கமும், நன்றியும் தெரிவித்துக்கொண்டு, எனது உரையை
தொடங்குகிறேன்.
"இஸ்லாத்தில் நாஸ்தீகர்கள் "
இஸ்லாம் அல்லாத மற்ற மதங்கள்  கடவுள் இருப்பிலிருந்து துவங்கும்.
அதாவது கடவுளை வைத்து தொடங்கும்.
ஆனால் இஸ்லாம் துவங்குவதே கடவுள் மறுப்பிலிருந்துதான்.கடவுள்கள் இல்லை, அல்லா வைத் தவிர, என்று, மற்ற கடவுள்கள் இல்லை, அவைகளைநம்பாதே, ஏற்காதே, கூறி விட்டு, அதன் பிறகே தன் கடவுளை ஏற்க கூறும்.
அதனால் நாஸ்தீகத்தின் துவக்கதிலிருந்து உருவாவது தான் இஸ்லாம்.  .
நாஸ்தீகம் என்றால் அழிப்பது ,மறுப்பது, பார்ப்பன வேத இதிகாசங்களை மறுப்பவர்களை,பகுத்தறிவு தளத்தில் களமாடுவோரை  ஆத்திகர்களால் சூட்டப்பட்ட பெயர்தான் நாஸ்திகர்கள்  என்பது.
நாமும் வேத நம்பிக்கை தீண்டாமை ,பெண்ணடிமை,புரோகிதம்  ஜோதிடம் போன்ற பழமைவாத சிந்தனை செயல்பாடுகளை  சிந்தனை ரீதியாக நாஸ்தி செய்வர்கள் என்பதில், நாம் மறுப்பவர்களும் இல்லை
அடுத்து இசுலாத்தை பார்ப்போம்.
இஸ்லாம்  ஆறு வகையாக மனிதர்களை  பிரிக்கிறது
 முஃமின்
-முஸ்லிம்
-முனாஃபிக்
-காஃபீர்-
முஷ்ரிக்
முர்தத்   .
1)இதில் முஃமீன் என்பவன் ஜிஹாத் மூலம்   உயிர்பலி எடுப்பவனாகவும் இருப்பான். தன் உயிரை பலி கொடுப்பவனாக வும் இருப்பான். இது போருக்காகவும் இருக்கலாம். தன் மதத்திற்காகவும் இருக்கலாம்.
2)  முஸ்லிம் என்பவன்  "முஹம்மது கூறிய அல்லாவை மட்டுமே கடவுள் என்று நம்புவான். முஹம்மதை இறைத்தூதர் என்றுஏற்றுக்கொள்வான், ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். முகமது கூறுவது மட்டுமே உண்மை என
நினைக்க வேண்டும். அவனே இங்கு முசுலீம்.
3)முனாஃபிக் என்பவன் சூழ்ச்சி மிகுந்தவன் இது எல்லா நாட்டிலும், மதங்களிலும், கட்சிகளிலும் இருப்பது தான். அது போலமுஹம்மதின் காலத்தில் முஹம்மதின் படைக்குள் நுழைந்து உளவுப்பார்த்து எதிர்தரப்பாருக்கு தகவல்களை சொன்னவர்கள் மற்றும் முஹம்மதின் சந்தேகத்திற்கு உட்பட்டவர்கள் முனாபிக்
என்கிறார்கள். .
4)காஃபீர் என்பவர்களில் இருதரப்பார் உண்டு. ஒன்று முஹம்மது சொன்ன
அல்லாவை மறுத்து, வேறு மத நம்பிக்கையின் பால் ஈர்ப்பு கொண்டவர்கள் வேறு மதத்தவர்களாக வாழ்பவர்கள். (யூதர்கள் ,கிருத்துவர்கள், சிலை ,சமாதி வழிபாட்டாளர்கள் இயற்கை வழிபாட்டாளர்கள்)
அடுத்த காஃபீர் முழுமையாக  இறைமறுப்பை எடுத்துரைப்பவர்கள் Athirst எந்த கடவுளையுமே ஏற்காதவர்கள்.
5)முஷ்ரீக் ,இணை வைப்பவர்கள்  என்று அடையாளமிடப்படுகிறது .
6)வது தான் இதற்கெல்லாம் மேலாக  உள்ளது.  அதாவது முர்தத்  என்பவர்கள் இவர்கள் முன்பு எதோ ஒரு காரணத்திற்காக, இஸ்லாத்தை ஏற்றிருப்பார் பின்வெளியேறியிருப்பார்கள்  
அதாவது எங்களைப் போல, இதில் சிலர் மதம் மாறிப்போயிருக்கலாம். முர்தத் என்றால்  வெளியேறிபோனவர்கள் என்று பொருள்.
இவ்வகையில், தன் பெற்றோர்களின் மதத்தை துறந்து, அவர்கள்வழிபட்ட பல கடவுள்களை மறுத்து, இல்லை என்று கூறி, ஒரு கடவுளை அதாவது அல்லா என்ற கடவுளை மட்டுமே, ஏற்றுக்
கொண்டு,தன் முன்னால் மதத்தவர்
களுக்கு முர்தத் ஆகி  போனவர் தான் முகமதும்.
.
 அவர் மட்டுமல்ல, யூதர்களின் இறை
தூதர் என்று கூறப்படும் மோசஸ்.
அவரை இறை தூதராக ஏற்றுக்
கொண்ட சமூகத்தில் பிறந்தவர் தான் இயேசு, ஆனால்அந்த இறைதூதரை,
தன் இறைதூதராக ஏற்றுக்
கொள்ளாமல், அந்த சமூகத்தில் முரண்பட்டவராக வாழ்ந்து, அச் சமூகத்தவர்களை எதிர்த்து, முகமது வழியில் கூறுவோம் என்றால், அச்சமூகத்தவர்களுக்குஇயேசுவும்
ஒரு முர்தத்தாக கருதப்பட்டதாலேயே
கொல்லப்பட்டுள்ளார்.
நாங்கள் மட்டுமே காபீராக, முர்தத் ஆனவர்கள்அல்ல,அதில் எங்களுக்கும் முன்னோடி இவர்களே.
சரி,வேறு மதத்தில் முர்தத் ஆனவன், அதாவது வெளியேறியவர்கள் இசுலாமிய மதத்தில் சேரலாமா? சேரக்கூடாதா? என்றால் தாராளமாக சேரலாம். அவ்வகை முர்தத் ஆனவர்கள் தான் இவர்களுக்கு தேவை. அதாவது அவன் ராமஸ்வாமியாக இருக்கலாம் அல்லது முனியாண்டியாகவும் இருக்கலாம் இஸ்லாத்தை ஏற்க்க வேண்டும் என்றால் அவனுக்கு ஒரு இஸ்லாமிய  மதகுரு அரபியில் ஒரு ஸ்லோகம் சொல்லிக்கொடுப்பார் அல்லாஹ்வை தவிர வேறு கடவுள்கள் இல்லை  முஹம்மது கடவுளின் தூதர் என்பதைமதம்மாறும்முனியாண்டியோ ,ராமஸ்வாமியோஏற்றுக் கொண்டேன் என உறுதி மொழி எடுக்க வேண்டும்  
அப்படிக்கூறிவிட்டால் அவன் இஸ்லாமியனாக ஆகிவிடுவான் அதன் பின் அவனுக்கு மத நூற்கள் கற்பிக்கபடும்  மத சம்பிரதாயங்கள் சொல்லிக்கொடுக்கப்படும் அவனுடைய மொழி கலப்பிலிருந்து தோற்ற மாற்றம்வரை அவன் மீது திணிக்கப்படும் ஹலால் ஹராம் திணிக்கப்படும். அவனுடைய மதம் மாறாத குடும்பத்தினரிடம் கூட, மதம் மாறியவன்
ஹலால், ஹராம் பார்க்கும் கட்டாயம் ஏற்படும். இனி அவனின் சொத்துக்களுக்கு அவர்கள் வாரிசாக முடியாது
இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் இஸ்லாத்தில் மத நுழைவை பற்றிப்புரிந்துக்கொண்டால்தான்  மத துறப்பை பற்றி புரிய முடியும் ஏனெனில் இஸ்லாத்தில் உள்ளே நுழைய ஒரு வழி முறை இருப்பதுப்போல் வெளியேற வழி இல்லை அப்படி வெளியேறும் முர்தத் எனும் எக்ஸ் முஸ்லிம்களை கொல்லப்பட வேண்டும் என்கிறது இஸ்லாமிய அடிப்படை.
இதனால் இதன் பெயரால் இசுலாமிய அரசுகளை, எதிர்க்கும் முசுலீம்களை கொலை
செய்கிறது, மதத்தலைவர்கள் பத்வா எனும்
பெயரில் சாதாரண முசுலீம்களை மிரட்டுகின்றனர். ஒரு சாதாரண இசுலாமியன் கூட, உன்னை எல்லாம் விட்டுவைக்கக் கூடாது என, எங்களைப்
போல் உள்ளவர்களை மிரட்டுவதற்கு
காரணமே, மத தூண்டல் தான்.
என்றாலும், இந்த மிரட்டலை நாங்கள்
காவல் துறையிடம் முறையிட்டாலும், தனி நபர்மிரட்டலாகவே பார்க்கப்
படுகிறதே தவிர, அது மதம் சார்ந்த
மிரட்டல், மதம் தூண்டி விடும் மிரட்டலாக  பார்க்கப்படுவதில்லை.
ஆகவே, இவ்வகை மதம் சார்ந்த மிரட்டலை
எந்த தனி நபரும், மதத்திற்க்கு ஆதரவாக
பயன்படுத்தக் கூடாது, தவறினால் கடும்
தண்டனை என்று சட்டம் இயற்றினால்
மட்டுமே, இந்திய முசுலீம்கள், இசுலாமிய
கடும் கோட்பாடு தண்மையிலிருந்து மீட்டு
எடுக்க இயலும், சுதந்திர இந்தியாவில்
சுதந்திரமானவர்களாக வாழ இயலும்.
மாறாக இது மதச்சுதந்திரம் இதில் தலை
யிடக்கூடாது என அரசு விலகி நின்றால்,
தீவிரவாதிகளாக மாறுவதற்கு, அரசும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.
அதன் நீட்சிதான் நமது தோழன் ஃபாருக் கொல்லப்பட்டதும் .
இது இசுலாத்திற்க்காக நடந்த கொலையே தவிர, பாரூக்கை மட்டுமே
கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவும் நிகழவில்லை. ஒரு
கொலை நிகழ்த்தி, அதில் எங்கள்
எல்லோரையும் அதாவது எக்ஸ் முசுலீமாகியஎங்கள் எல்லோரையும்
 சிக்க வைக்க, கொலைசெய்து அந்த
பழி எங்கள் மீது விழ வேண்டும்
என்பதற்காக நிகழ்த்தப்பட்ட கொலை,
ஏன் என்றால் பாரூக் எங்களோடு
இணைந்து செயல்பட்டவர்.
சசிகுமார் கொல்லப்பட்ட சமயத்தில்
எந்த சம்பந்தமும் அல்லாத,நாத்திகரான
எக்ஸ் முசுலீமாக இருப்பவர். கைது
செய்யப்பட்டு, பிப்ரவரியில் விடுதலை
அடைகிறார். அதன் பிறகு முனாப்
என்பவன், நானும் உன்னோடு உங்கள்
இயக்கத்தில் இணைகிறேன். இதில்
உள்ளவர்களை சந்திக்க விரும்புகிறேன், என என்னையும்,
மற்றொரு தோழரையும் பாருக் உடன்
சந்திக்க வருகிறான், பாரூக் அப்பொழுது தான் முனாபைஅறிமுகமே செய்கிறார். அவனை எங்களிடம் அறிமுகம் செய்கிறார்.
மார்ச் 6 ம் தேதி இரண்டு காவலர்கள்
என்னைத் தேடி, நான் பனிபுரியும்
இடத்தில் வந்து, உங்கள் மீது புகார்
வந்துள்ளது, அய்யா உங்களை
அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று
கூறுகிறார் என்கிறார்கள். நான் இப்பொழுது வர இயலாது நாளை
மதியம் மூன்று மணிக்கு வருவ தாகவும் என்சிசிதாககூறிய பின் சென்று விட்டார்கள்.
நான் மறுநாள் அதாவது மார்ச் 7 தேதி
மதியம் மூன்று மணிக்கு எனக்கு
தெரிந்த வழக்கறிஞரை அழைத்துக்
கொண்டு அலுவலம் சென்று சந்திக்கிறேன்.
காவல் ஆய்வாளர், வேறு ஒன்றும் இல்லை, இது
கோவை பதற்றம் நிறைந்த பகுதி,
கடவுள் மறுப்பை கூறி பதிவு போடுவதை நிறுத்தி விடுங்கள் என்கிறார்.
நான் முடியாது அது என் உரிமை என்று
கூறி வெளியேறுகிறேன். என் வீடு
இருக்கும் பகுதியை சார்ந்த, காவல்
துறையினர்  உங்களுக்கு மிரட்டல்
எதுவும் வந்ததா? எனக் கேட்கிறார்கள்
நானோ அப்படி எதுவும் வரவில்லையே
என்கிறேன், அவ்வாறு வந்தால் எங்களிடம் கூறுங்கள் என்கிறார்.
சில நிமிடங்களில் வேறு ஒரு போன்
வருகிறது, நான் பணிபுரியும் பகுதியை
சார்ந்த காவல்துறையிடமிருந்து, இதே
கேள்வி, நானும் அதே பதிலை கூறுகிறேன், சரி என்று துண்டித்துக்
கொண்டார்.
மறுநாள் காலை இரண்டு காவலர்கள்
வீட்டிற்க்கு வருகிறார்கள். நீங்கள்
மாலை ஆறு மணிக்கு மேல் வெளியில்
எங்கும் சுற்றக்கூடாது என, நானோ
8,9 மணிக்கே என் பணி முடியும்
என்கிறேன். அவர்களோ உங்கள்
நலனிற்கு தான் கூறுகிறோம் என
சென்று விட்டார்கள்.
இரவு வீடு திரும்பியதும், என் மனைவி
கூறுகிறார், வீட்டின் உரிமையாளர்
என்னை வரச் சொன்னதாக,
சரி என்று  உரிமையாளரை பார்க்கச்
சென்றேன்.
அவரோ, என்ன உங்களை தேடி போலீஸ் வந்ததாக கூறுகிறார்கள்
என்றார்.
நான் ஆமாம் என்றேன்.
சரி நீங்கள் வீடை காலி செய்யுங்கள்
என்கிறார்.
நான் எதற்கு காலி செய்ய சொல்கிறீர்
கள் என்கிறேன்
அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம்
பயப்படுகிறார்கள், நீங்கள் தீவிரவாதியோ என, ஆகவே காலி
செய்து விடுங்கள் என்கிறார்.
சரி, யார் கூறினார்களோ, அவர்கள்
வரட்டும், அல்லது நீங்களே போலீஸ்
ஸ்டேசன் வாருங்கள். அவர்கள் என்னை
தீவிரவாதி எனச் சந்தேகிக்கிறோம்
என்று கூறட்டும், நான் வீடு காலி செய்கிறேன்  என்று கூறினேன்.
என்னடா இவன் நம்மையே, ஸ்டேசனுக்கு அழைக்கிறானே, என
வாயை மூடியவர் தான், அதன் பிறகு
வாயே திறக்க வில்லை.
மறு நாள் காலை அதாவது 8ம் தேதி என் நண்பர்  போன் செய்கிறார், நான் ஆன்
செய்கிறேன். என்ன தோழர் உங்களைத்
தேடி போலீஸ் எல்லாம் வந்ததாக
கேள்விப்பட்டேன் என்று கேட்கிறார்.
நானோ எனக்கும் ஒன்றும் புரிய வில்லை, தோழர், நான் பதிவு போடுவதை தடுக்கவே, பாஜக அரசு காவல் துறையை வைத்து மிரட்ட வைக்க வேண்டும் என நினைக்கிறதோ என்று கூறுகிறேன்.
அப்பொழுது அவர் என் பக்கத்தில்
பாரூக் நிற்கிறார். அவரிடம் கொடுக்க வா, எனக் கேட்டு பாரூக்கிடம் கொடுக்கிறார்.
பாரூக் எப்பொழுதும் அண்ணா என்று தான் என்னை அழைப்பார்.
அது போல என்ன அண்ணா நடந்தது
என்று கேட்கிறார். நான் அவர் அச்சப்
படுவாரோ, என நினைத்து அதெல்லாம்
ஒன்றுமில்லை தோழர் என பேசி
முடிக்கிறேன்.
நான் பாரூக்கிடம் பேசிய கடைசி பேச்சு
இது தான்.
மார்ச் 16, இரவு பண்ணிரண்டு மணி
எனக்கு போன் வருகிறது. நான்
எடுக்கிறேன்.
மறுமுனையில் நான் உக்கடம் இன்ஸ்
பெக்டர் ஜோதி பேசுகிறேன். போன
வாரம், போலீஸ் உங்களை அழைத்ததா
ஏன் போனார்கள் என்று கேட்டார்.
நான் முழு கதையும் கூறி, ராத்திரி
பண்ணிரண்டு மணியானாலும்
விடாமல் கேட்கிறார்களே என மனதில்
நினைத்துக் கொண்டு இருக்கையில்,
ஜோதி அவர்கள் மற்றொருவரிடம்
போனை கொடுக்கிறார்.
அண்ணா, நான்  முனாப் பேசுகிறேன்.
பாரூக்கை யாரோ கொன்று விட்டார்கள்
அண்ணா, எனக்கு பயமாக இருக்கிறது
உடனே கிளம்பி வா என்று கூறுகிறான்.
அச்சமயம் திகைத்து அப்படியே அமர்ந்து விட்டேன். அப்பொழுது தான் நினைவுக்கு வருகிறது, 6மணிக்கு
மேலே வெளியே எங்கும் செல்ல
வேண்டாம் எனக் காவலர்கள் கூறியது.
அப்பொழுது தான் அறிய முடிந்தது.
இத்தகவல் காவல் துறைக்கு முன்பே தெரிந்ததால் தான் என்னை காப்பாற்றி இருக்கிறார்கள் என்று,
சரி, என மற்றொரு நண்பருக்கு போன்
செய்தேன். இந்த நேரத்தில் நான் அங்கு
வரவா என, கேட்டேன்.
அவரோ, வீட்டு வாசப்படியிலும் கால்
வைக்காதீர்கள் நான் இரவு முழுவதும் அங்குதான் இருப்பேன், நீங்கள் காலை ஆறு மணிக்கு மேல் வாருங்கள் என கூறினார்.
காலையில் செல்கிறேன், முனாப் என்ன
அண்ணா, என்னை தனியாக விட்டு
விட்டீர்கள், சாதிக் சமத் வரவில்லையா
எனக் கேட்கிறார்.
நான் வருவாரா, இல்லையா தெரியவில்லை தோழர் என்கிறேன்.
காலை ஒன்பது மணி இருக்கும், இரண்டு காவலர்கள் முனாப்பை
ஆய்வாளர் அழைப்பதாக கூறுகிறார்கள். முனாப் எனக்கு துணையா நீங்களும் வாருங்கள் என,
என்னையும் அழைத்துச் செல்கிறான்.
அங்கு அவனிடம் தனியாக விசாரணை
நடந்தது, நான் வெளியில் அமர்ந்து
இருந்தேன். ஒரு மணி நேரத்திற்க்கு
பின் வெளியே வருகிறான். என்னை
அழைக்கிறார்கள் நான் உள்ளே
செல்கிறேன்.
என்னிடம் விசாரிக்கிறார்கள், பாரூக்
எப்படி பழக்கம் என்று, நான் முகநூல்
வழியாக என்கிறேன்.
எத்தனை வருடமாக என்றார், நான்
ஒரு இரண்டு வருடமாக தெரியும்
என்கிறேன். முனாப்பை எப்படி தெரியும்
எனக் கேட்டார்.
நான் ஒரு மாதமாக தான் தெரியும்,
அதுவும் பாரூக் அறிமுகம் செய்ததால்
தான் தெரியும் என்கிறேன்.
உங்களைப் போல் உள்ளவர்கள் எத்தனை பேர் இருப்பீர்கள் எனக்
கேட்கிறார்.
நான் ஒரு நூறு பேர் இருப்போம் என்றேன்.
முகநூலில் மட்டுமே தொடர்பா, அல்லது
தனியாகவும் சந்திப்போம், என்று
கூறி இரண்டு மூன்று கூட்டங்கள்
நடத்தியதை கூறுகிறேன். வாட்ஸ்அப்பில் நடத்திய அல் முர்தத்
குழுவையும் காட்டுகிறேன்.
சரி, நீங்கள் வெளியில் இருங்கள்
என்கிறார். பிறகு முனாப்பை திரும்பவும் அழைக்கிறார்கள்.
மணி இரண்டு ஆகும் பொழுது, நீங்கள்
செல்லலாம் எனக் கூறுகிறார்கள்.
அதற்கு முன்பே முனாப், என்னை தனியாக விட்டு சென்று விடாதீர்கள்
என்று கூறி இருந்தான்.
அதனால் நானும் செல்லவில்லை,
சிறிது நேரம் கழித்து காவலர்
கேட்கிறார், உங்களைத் தான் போகச்
சொல்லியாச்சே, ஏன் உட்கார்ந்து
இருக்கிறீர்கள் எனக் கேட்கிறார்.
முனாப் வரட்டும் சார், அதன் பிறகு
செல்கிறேன் என்றேன், அவர் சென்று
விட்டார்.
மணி 4 இருக்கும், பாரூக்கை அடக்கம்
செய்ய போகிறார்கள், நீங்கள் வர
வில்லையா என்று கேட்டார்.
முனாப் என்னை விட்டு போய் விடாதீர்கள் என கூறுகிறான் எனஅவரிடம் கூற, முனாபை அழைத்து, பாரூக்கை அடக்கம் செய்ய போகிறார்கள் நான் சென்று
அடக்கம் முடிந்ததும் வருகிறேன்
என்கிறேன்.
உடனே, அங்கேயே கத்தி, கதறி, என்
உயிர் நண்பனை அடக்கம் செய்யப்
போகிறார்கள். அதை பார்க்கக் கூட
விட மாட்டீர்களா? என முனாப் கேட்க, அங்கு வந்த சில வழக்கறிஞர்களும் கேட்டுக் கொண்டதன் பேரில் விட்டார்கள். அடக்கம் முடிந்தவுடன் வர வேண்டும் என
அடக்கம் முடிந்தவுடன் மீண்டும் காவல்
நிலையம் சென்றோம். இரவு ஏழு
மணியளவில், இவனை அழைத்துக்
கொண்டு ஜுப்பில் சென்றார்கள். நான்
தனியாக அமர்ந்து இருந்தேன்.
சிறிது நேரத்தில் எனக்கு போன் வருகிறது, மார்ச் 6ம் தேதி என்னை
அழைத்த ஆய்வாளர் பேசுகிறார்.
ஜின்னா உங்களிடம் பேச வேண்டும்
நாளை வரமுடியுமா என்று கேட்கிறார்.
இல்லை, சார்  என் நண்பன் இறந்து
விட்டான், அதனால் இன்று லீவு
எடுத்ததால் நாளை எடுக்க இயலாது.
இப்பொழுது வேண்டுமானால் வருகிறேன் என்று கூறுகிறேன்.
சரி, இப்போ எங்கு உள்ளீர்கள் என்று
கேட்கிறார்.
நான் உக்கடம் போலீஸ் ஸ்டேஷனில்
உள்ளேன் என்கிறேன். எதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு போனீர்கள் என்று கேட்கிறார். என் நண்பனை வெட்டி கொன்று விட்டார்கள், அதன் காரணமாக
நிற்கிறேன் என்றேன்.
இறந்தவர் பெயர் எனக் கேட்கிறார்.
நான் பாரூக் என்றேன். நானும் காலை
யில் அங்கு தானே இருந்தேன்
உங்களைப் பார்க்கவில்லையே என்கிறார்.
உடனே கிளம்பி வாருங்கள் என்கிறார்.
நான் சென்று சந்திக்கிறேன். எனக்கு
பாரூக்கென்ற நண்பன் உண்டு என,
ஒரே ஒரு வார்த்தை கூறியிருந்தால்
கூட, அவரை காப்பாற்றி இருக்கலாமே,
என்கிறார்.
என் முகநூலை வைத்து கூறியதால், அது எனக்கு மட்டுமே  இருக்கும்,என நினைத்து விட்டேன் என்றேன்.
பின்பு கிளம்பி விட்டேன். மூன்றாம்
நாள் காலையில் தான் ஒரு தோழர்
கூறுகிறார்
முனாப் தான் தோழர், வண்டி பெட்ரோல்
இல்லாமல் நடுவழியில் நின்று விட்டது.
எனக்கு பயமாக உள்ளது ஆகையால்
கிளம்பி வா என வரவழைத்து,
மற்ற சிலரும் சேர்ந்து கொன்றிருக்கிறார்கள் என,
அப்பொழுது தான் எங்களுக்கு தெரிந்தது நண்பனாக வந்து, உளவு
வேலை, பார்த்து கொலை செய்யும்
கொலைகார கூட்டம் என,
இத்தகைய சம்பவங்களை எல்லாம்
மறைத்து, இது மதத்துற்க்காக
நிகழ்ந்த கொலை அல்ல, திருட்டுத்தனமான தொழில் செய்து, தண்ணி அடித்துக்கொண்டிருக்கும் பொழுது, சண்டை நிகழ்ந்து, நண்பர்களால் நடந்த கொலை
என பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
கொலை நிகழ்ந்த சமயத்தில்
பாரூக்கை ஆர்எஸ்எஸ் கைக்கூலி
அதனால் இசுலாமியர்கள் அடித்துக்
கொன்று விட்டார்கள். என வதந்தியை
 பரப்பினார்கள்.
கொலையாளிகள் காவல்துறையிடம்
பிடிபட்ட போது, நபியை அவதூறு செய்து
புத்தகம் வெளியிடப் போவதாக கூறியதால் கொலை செய்தோ ம் என வாக்கு மூலம் கொடுத்தார்கள்.
ஏன் இவர்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்  என்றால், இசுலாமை காப்பாற்றுவதற்க்காக,
மற்றும் யாரோ சிலர் தவறு செய்ததற்காக ஒட்டு மொத்த இசுலாமையும் குற்றம் சுமத்துவது எவ்வாறு சரியாகும் என்றும்
கூறுகிறார்கள்.
இவ்வாறு யாரோ சிலர் செய்வதற்க்கு
காரணம் என்ன மதம் தானே, மதமே
கூறும் பொழுது அது யாருக்கு சரி எனப்
படுகிறதோ, அவர்கள் எல்லாம்
ஜிகாதிகளாக  மாறும் பொழுது, ஒட்டு மொத்த இசுலாமியர்களும் கூனிக்குறுகி நிற்கும் நிலை வருவதே மதத்தால் தானே, அதை இவர்கள் யாராலும் தடுக்க இயலவில்லையே, இன்று யாரோ செய்கிறான் எனக் கடந்து சென்றாலும், நாளை அவர்கள் வீட்டிலேயேஒருவன் உருவானால், அது அவனுக்கோ, அவன் குடும்பத்திற்கு மட்டுமே அவமானம்.
மற்றவர்கள் எல்லாம் இவனையும், இவன் குடும்பத்தையும் கைகாட்டி விட்டு, இவன் தவறு செய்தால் அதற்கு இசுலாம் எவ்வாறு பொருப்பாகும் என, இவனை குற்றவாளி ஆக்கி இசுலாத்தை காப்பாற்றி விடுவார்கள் எனும் பொழுது, தன் மதத்திற்க்காக விமர்சித்த இசுலாமியனை கொலை செய்பவன், கொலைகாரனாக அவமானத்தையே பரிசாக பெறுவார்கள். மாறாக
பாராட்டி பரிசு பெற மாட்டார்கள்.
மற்றும் பெரும்பான்மையை கொண்ட
இந்துத்வா தான் முதல் ஆபத்து, அதனால் அதை எதிர்ப்பது தான் முதன்மையாக இருக்க வேண்டும், சிறு பாண்மை கொண்ட இசுலாம் அல்ல, என்றும் கூறுகிறார்கள்.
சிறு பான்மையாக இருக்கும் ஒரு மதத்தை பார்த்து, பெரும்பான்மையாக இருக்கும் ஒரு மதம் அச்சம் கொள்ள வேண்டிய காரணம் என்ன?
எனக் கேட்டால், அந்த மதம் எங்கள் மதத்தை அழித்து விடும் அதனால் அச்சப்படுகிறோம் என்கிறார்கள்.
அது உண்மையா என்றால் நிச்சயமாக
இல்லை,
ஒரு வேலை இந்துத்வா ஆட்சி செய்தால்
நாத்திகர்களை அழிக்குமா என்றால்,
முடியாது. இந்து மதத்தில் நாத்திகமும்
உண்டு.
இசுலாத்தை அழித்து விடுமா? என்றால்
அதுவும் செய்யாது, உன் கடவுளை
வணங்கிக் கொள், ஆனால் என் கடவுளை
யும் வணங்க வேண்டும். இரண்டாம் தர மக்களாக என்று தான் கூற இயலும்.
அதே போல இசுலாம் ஆட்சி செய்தால்
இந்துக்களை அழிக்குமா? என்றால் அழிக்காது, ஆனால் இசுலாத்திற்கு மாறு, அல்லது வரி கட்டு என்று தான் கூறும், ஆனால் நாத்திகர்களை ப் பார்த்து கூறுவதோ, ஒன்று  இசுலாமியனாக மாறு, அல்லது வேறு ஏதாவது மதத்தை சார்ந்தவனாக மாறி வரி கட்டு, நாத்திகனாக வாழ அனுமதி இல்லை, மீறி வாழ நினைத்தால், நீ கொல்லப்படுவாய் என்று கூறும்.
ஆக நாத்திகர்களுக்கு இந்துத்வாவை
விட, பெரிய ஆபத்தாக இருக்கும் மதம்
இசுலாமே.
உலகில் இறைமறுப்பை வெளிப்படையாக பேச ஹிந்து ,கிருத்துவம் அனுமதிப்போல் இஸ்லாத்தில் இல்லை. அதனால் இசுலாத்தில் நாத்திகர்களே இல்லை, மீறி வந்தாலும், விலகிய இசுலாமியர்களாக வே வாழ இயலும்.
ஆகவே தான் எங்களை நாங்கள் எக்ஸ்முஸ்லிம்கள் என அறிமுகம்
செய்கிறோம், அதாவது ஒரு நாத்திகன்
பார்ப்பன வேதங்களை முக்கியமாக
மறுப்பவர்களாக இருக்கிறார்களோ,
அது போல, அரேபியமதநூல்களை
முக்கியமாக மறுப்பவர்களாக நாங்கள்
இருக்கிறோம்.
தமிழகத்தில் மட்டுமல்ல நமது பக்கத்து மாநிலமானகேரளாவிலும், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க எக்ஸ் முசுலீம்கள் எனும் பெயரில்
கடவுள் மறுப்பாளர்களாக இயங்கி வருகிறார்கள்
அனைவரது நோக்கமும் ஒன்று தான்.
நாத்திகர்கள் பார்ப்பானின் பிடியில்
இருந்துஇந்துக்களை காக்க வேண்டும் என நினைக்கிறார்களோ, அது போல, இஸ்லாத்தின் பிடியிலிருந்து முஸ்லிம்களை மீட்க வேண்டும்  அவர்களது கல்வி, வேலை வாய்ப்புகளில் மேலோங்கி வரவேண்டும் பெண்ணடிமைத்தனமாக ஹிஜாப், மஹர் இத்தா போன்றவைகள் ஒழிக்கப்படவேண்டும் மானுட சமூகத்திற்கு எதிரான கிலாஃபத், ஜிஹத் சிந்தனைகள் ஒழிக்கப்படவேண்டும். என எக்ஸ் முசுலீம்கள் விரும்புகிறார்கள்.
 எந்த இஸ்லாமிய நாடுகளிலும் இறை மறுப்பை பேசமுடியாது மலேஷியா போன்ற நாடுகளுக்கு நீங்கள் சென்று இறை மறுப்பை பேச விரும்பினால்
 ஹிந்து ,கிருத்துவ இறை மறுப்பை பேசமுடியுமே தவிர இஸ்லாத்தை மறுத்துப்பேச இயலாது அதேப்போல் சௌதிப்போன்ற இஸ்லாமிய நாடுகளில் நாஸ்தீகத்திற்கு  ஆதரவாக உங்களால் எதுவுமே  பேச முடியாது
 மதத்துறப்பை நாங்கள் பரிந்துரைப்பது, வேறு எந்த மதங்களையும், மதம்
துறந்தவன் ஏற்கக் கூடாது. ஒரு மூட
நம்பிக்கையை விட்டு, வேறு ஒரு மூட
நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள கூடாது, எனக்கூறி விடைப்பெறுகிறேன் நன்றி வணக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக