திங்கள், 21 மார்ச், 2022

காருக்குள் வைத்து 20 பெண்கள் சீரழித்த .சீரியல் நடிகர் முகமத் சையத் கைது

அதிரடி கைது

Rajkumar R -   Oneindia Tamil :  சென்னை : சென்னையில் இன்ஸ்டாகிராமில் பழகி 20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல விளம்பர மாடலும் சீரியல் நடிகருமான முகமது சையதை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்துள்ள நிலையில் செல்போன் தான் எல்லாமே என்று ஆகிவிட்டது. ஒற்றை செல்போனில் உலகமே கைக்குள்ளாக வந்துவிட்டதாக கருதும் நிலை தான் தற்போது உள்ளது.
சில நேரங்களில் செல்போன்களில் மூழ்கும் பெண்கள், இளைஞர்கள் சமுக வலைதளங்களான ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உலாவி வருகின்றனர்.
அவ்வாறு உலா வரும் பெண்கள் தங்கள் வாழ்வையே தொலைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுவதைக் காணமுடிகிறது.
இதுபோன்ற ஒரு சம்பவம்தான் தற்போது சென்னையில் நடைபெற்றுள்ளது.


இன்ஸ்டாகிராமில் பழகி 20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல விளம்பர மாடலும் சீரியல் நடிகருமான ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முகமது சையத். இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். விளம்பரம் மற்றும் டிவி சீரியலிலும் இவர் நடித்து வந்துள்ளார்.
இவர்தான் காவல்துறையில் சிக்கியவர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் டெக்கரேஷன் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் வேலை செய்து வருவதாகவும், கடந்த 2019-ம் வருடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான சென்னை கீழ்பாக்கம் மில்லர்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபல மாடலும், சீரியல்களில் நடித்து வரும்26 வயதான முகமது சையத் தன்னை காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி பழகியதாகவும், கடந்த டிசம்பர் 202ஆம் வருடம் காரில் வைத்து வலுக்கட்டாயமாக தன்னை பலாத்காரம் செய்ததாகவும் பகீர் புகார் ஒன்றை அளித்தார்.

 20 பெண்களை பாலாத்காரம் மேலும், பலமுறை பணம் பெற்றுக்கொண்டதோடு திருமணம் செய்ய மறுத்ததாகவும், மேலும் கடந்த டிசம்பர் 21-ம் தேதி ஒரு ஓட்டலில் Get together பங்ஷனுக்கு அழைத்துச் சென்றபோது அங்கு ஏற்கனவே சுமார் 3 பெண்கள் இருந்ததால் முகமது சையது மீது சந்தேகம் ஏற்பட்டு அவரது செல்போனை ஆராய்ந்தபோது இவர் சுமார் 20 பெண்களை வீட்டிற்கு அழைத்து சென்று அவர்களுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது எனவும் கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் முகமது சையத்தை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. முகமது சையத், தன்னுடன் வேலை செய்யும் பெண்களையும், இன்ஸ்டா மற்றும் பேஸ் புக் மூலம் அறிமுகமான பெண்களையும் காதலிப்பது போல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது.
கிட்டத்தட்ட 20 பெண்களை இவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது முகமது சையத் மீது மேலும் 3 பெண்கள் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ள நிலையில், முகமது சையதை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக