வெள்ளி, 18 மார்ச், 2022

பட்ஜெட் 2022 ...சென்னை பகுதிகள் மட்டுமா ஓட்டு போட்டார்கள். நாங்களும் தானே ஒட்டு போட்டோம்? ஏன் ஓரவஞ்சனை?

May be an image of 2 people and text that says 'தமிழக பட்ஜெட் 2022-23 ਹ Polimer NEWS ₹ 36,000 கோடி 19,000 கோடி 17,901 கோடி 8,700 கோடி ரூ.7,500 கோடி 4,816 கோடி 3,700 கோடி 3,384 கோடி பள்ளிக்கல்வித்துறை அகவிலைப்படி, ஒய்வூதியம் மக்கள் நல்வாழ்வுத்துறை வீட்டுவசதித்துறை பொது விநியோக திட்டம் ஓய்வூதிய திட்டம் பிரதமர் வீடு திட்டம் நீர்ப்பாசன திட்டம் குடிநீர் ணைப்பு ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முதலமைச்சர் காப்பீடு திட்டம் மகளிர் இலவச பேருந்து திட்டம் நீதி நிர்வாகத்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சிங்கார சென்னை 2.0 திட்டம் தீயணைப்புத்துறை சுற்றுலாத்துறை இ.சி.ஆரில் வழிச்சாலை திட்டம் ரூ 3,000 கோடி 2,800 கோடி 1,547 கோடி ரூ. 1,520 கோடி 1,461 கோடி 808 கோடி 500 கோடி 496 கோடி 246 கோடி ரூ 135 கோடி 18 MARCH 2022 /linews'

Karthikeyan Fastura :  தமிழ்நாடு அரசின் இந்த பட்ஜெட்டில் பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன.
குறையென்று பார்த்தால் இடம் சார்ந்த நலத்திட்டங்கள் சென்னை, சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே ஒதுக்கியுள்ளது மதுரை, திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட பிற மாநகரங்களுக்கு நலத்திட்டங்கள் பெரிதாக ஒன்றுமில்லை.
கிண்டி குழந்தைகள் பூங்காவை 20கோடி செலவில் குழந்தைகள் இயற்கை பூங்காவாக மறுசீரமைக்க ஒதுக்கப்பட்டிருக்கிறது. ( மதுரையில் ஒரு நல்ல பூங்கா கிடையாது )  
300 கோடி ரூபாய் செலவில் கியூ கார்டன்ஸ் லண்டன் உதவியுடன் சென்னைக்கு அருகில் உயிரியல் பூங்கா அறிவித்திருக்கிறார்கள். சென்னைக்கு அருகில் மலையோ காடோ இல்லை ஆனால் செயற்கையாக உயிரியல் பூங்கா அமைக்க திட்டமிடுகிறீர்கள். மதுரையில் சிறுமலை, அழகர்மலை என்று காடுகளுடன் கூடிய இயற்கையான உயிரியல் காடு இருக்கிறது. அதை பூங்காவாக மேம்படுத்தும் ஐடியா இந்த அரசுக்கு இருக்கிறதா என்றால் இல்லை.
10 கோடி ரூபாய்  செலவில் சென்னையில் புயல் முன்னறிவிப்பு நிலையத்தை மறுசீரமைக்க ஒதுக்கியிருக்கிறார்கள்.

ராமேஸ்வரத்திற்கும் வேதாரண்யத்திற்கும் இடைப்பட்ட கடல் பகுதிகளில் தான் எப்போதும் புயல் கரையை கடக்கும். இந்த பகுதிகளில் வாழும் மீனவர்கள் தான் மிக அதிகமாக மீன் ஏற்றுமதி செய்கிறார்கள்.
சென்னை நந்தம்பாக்கத்தில் Tamil Nadu Industrial Development Corporation (TIDCO) சார்பில் startup hub ஆரம்பித்திருக்கிறார்கள். start-up ஆரம்பிக்க வேண்டும் என்ற கனவோடு இருப்பவன் சென்னையில் மட்டும் தான் இருக்கிறானா.. அல்லது சென்னை வந்து மாதம் 10,000க்கு குறையாமல் வாடகை எடுத்து 10,000க்கு தன் வாழ்க்கையை ஓட்டி மாதம் 20,000 ரூபாய் செலவழித்து startup hubல் பங்கேற்க வேண்டும்? Cost of Living குறைவாக உள்ள மதுரை மாதிரியான மாநகரங்களில் தானே ஒரு Startup Hub இருக்க வேண்டும்.  
மதுரவாயல் சென்னை துறைமுகம் இரண்டடுக்கு மேம்பால சாலைக்கு 5770 கோடி ரூபாய் செலவில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மதுரை, திருச்சி, கோவை, சேலம் என்று எவற்றிற்காவது முழுமையான சுற்றுசாலைகள் இருக்கின்றனவா? ஒரு பக்கம் இருந்தா இன்னொரு பக்கம் இருக்காது.
நீலாங்கரை, கொட்டிவாக்கம், பாலவாக்கம் ஆறுவழி சாலைக்கு 135 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த காசை வைத்து ஆறு மாநகராட்சிகளின் சாலை வசதியை மேம்படுத்தலாம். மதுரை நகர் சாலைகள் ஒன்றாவது குண்டுகுழி இல்லாமல் இருக்கிறதா..? பிபிசி- தமிழில் கூட வந்துவிட்டது. அரசின் கண்ணுக்கு தான் தெரியவில்லை  
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையை ஒட்டி  40 கோடி ரூபாய் செலவில் Tamil Nadu Institute of Mental Health & Neuro Sciences கொண்டுவர ஒதுக்கியிருக்கிறார்கள். இது போன்ற சிறப்பு மருத்துவமனை திட்டங்கள் ஏன் பிற மாநகரங்களில் இல்லை.
ஏற்கனவே திராவிட ஆட்சிகளில் தேவைக்கும் அதிகமாகவே சென்னையை வளர்த்துவிட்டாயிற்று. இப்போவாது பிற மாநகரங்களை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திட்டங்கள் கொண்டுவருவார்கள். நிதி அமைச்சர் PTR மதுரை மத்திய தொகுதி வேறு. மதுரை மக்களின் மனநிலையை புரிந்துகொள்வார் என்று எதிர்பார்த்தேன். பெருத்த ஏமாற்றம். மதுரையின் சாலைகள் புழுதிகளால் நிரம்பியுள்ளது. இந்நகரத்தை முழுமையாக இணைக்கும் சுற்றுச்சாலைகள் இல்லை. இந்நகரை மையமாக வைத்து தொழில் திட்டங்கள் இல்லை. ஏற்கனவே இருக்கும் தொழில் பூங்காக்கள் பராமரிப்பின்றி இருக்கின்றன. புதிய அரசு கல்லூரிகள் வந்து மாமாங்கம் ஆகிவிட்டது. தியாகராஜர் பொறியியல் கல்லூரி கூட Government-aided தானே ஒழிய முழுமையான அரசு கல்லூரி இல்லை.
சென்னை, சென்னையை  சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமா இந்த ஆட்சிக்கு ஓட்டு போட்டார்கள். நாங்களும் தானே ஒட்டு போட்டோம். ஏன் இந்த ஓரவஞ்சனை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக