சனி, 5 பிப்ரவரி, 2022

face book - Meta பங்குச்சந்தை மதிப்பு 230 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ச்சி! ஒரே நாளில் ..

 vikatan  : பேஸ்புக்கின் உரிமையாளரான Meta நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 230 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன் பங்குகள் 26.4 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளன.
பேஸ்புக்கின் வழமையான பயனர்களின் பாவனை கடந்த 18 வருடங்களில் முதற்தடவையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக Meta நிறுவனம் தெரிவித்துள்ளது.
Meta நிறுவனத்தின் சிரேஷ்ட நிறைவேற்றதிகாரி Mark Zuckerberg இன் நிகர சொத்து மதிப்பு 31 பில்லியன் டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக Bloomberg செல்வந்தர்களுக்கான குறிக்காட்டி தெரிவித்துள்ளது.


அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான போர்ப்ஸ் சமீபத்தில் சிறந்த பணக்காரர்களின் நிகர சொத்து மதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் 193 கோடியில் இருந்து 192.9 கோடியாக குறைந்துள்ளது.

பேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் விளம்பரதார்கள் செலவினை குறைத்துள்ளதால், பேஸ்புக் வருவாய் குறையலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் முதலீடு செய்துள்ள பங்கு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் நியூயார்க் பங்குச்சந்தையில் மெட்டா நிறுவன பங்கு பெரும் சரிவைக் கண்டது. இதனால் மெட்டா பங்கின் விலை 26.39 சதவீதம் குறைந்துள்ளது.

ஒரே நாளில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ள நிலையில், மெட்டா நிறுவனத்தில் 12.8 சதவீத பங்கினை வைத்துள்ள மார்க் ஜூகர்பெர்க்கின் நிகர மதிப்பு 85 பில்லியன் டாலராக குறைந்ததாக தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக