புதன், 2 பிப்ரவரி, 2022

ஈரானில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்குத் தூக்குத் தண்டனை

Report: Iran Executed 2 Men Over 'Charges Related to Homosexuality'

தினமலர் : ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட ஆண்கள் இருவர் தூக்கில் இடப்பட்ட சம்பவம் ஈரானில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் ஓரினச்சேர்க்கை, திருநங்கையருடனான உறவு, விபசாரம் ஆகியவை பெரும் குற்றங்களாகக் கருதப்படுவதோடு, அவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மராகேவில் உள்ள சிறையில் சமீபத்தில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆண்கள் இருவர் தூக்கில் இடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே குற்றச்சாட்டில் சிக்கிய இருவர் கடந்த ஆண்டு ஜூலையில் மராகே சிறையில் துாக்கிலிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக