சனி, 19 பிப்ரவரி, 2022

சென்னையில் இளம்பெண்களை தாக்கும் கும்பல்... பதைபதைக்கும் வீடியோ

chennai girls attack: சென்னையில் இப்படியா..? இளம்பெண்களை தாக்கும் கும்பல்...  பதைபதைக்கும் வீடியோ - girls attacked by protesters in chennai ecr video  goes viral on internet | Samayam Tamil

  tamil.samayam.com : சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரு பெண்களை வாலிபர்கள் எட்டி உதைத்து தாக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வட மாநிலத்தில் நடப்பதை போல சென்னையில் இரு பெண்களை ஒரு கூட்டத்திற்குள் வைத்து எட்டி உதைக்கும் வாலிபர்களின் செயல் பூதாகரமாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலான இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலை மரக்காணம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள் சாலையை கடக்க முயற்சித்துள்ளனர். இதனை அனுமதிக்காத ஆண்கள் சிலர் பெண்களின் வாகனத்தை எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளனர்.


அதில் ஒரு பெண் ஆத்திரத்தில் இளைஞர்களை எதிர்கொண்டபோது தொடர்ந்து அந்த பெண்களுக்கு வழி விடாமல் வாகனத்தை எட்டி உதைத்ததுடன், பெண்களை கை நீட்டி தாக்க முயன்றனர். ஒரு சில நொடிகளுக்கு பிறகு அந்த வீடியோ முடிவதால் அதன் பிறகு என்ன நடந்தது குறித்து தெரியவில்லை.

இந்நிலையில், இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோரை நெட்டிசன்கள் டேக் செய்து இளம்பெண்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக