செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

ரேஷன் கடைகளில் பண்டங்களின் இருப்பு விவரம் விநியோக விபரம் விலை போன்றவை தகவல் பலகையில் கட்டாயம்” -தமிழ்நாடு அரசு!

”இனி எல்லா ரேஷன் கடைகளில் இவை கட்டாயம்” - இல்லத்தரசிகளின் சிரமத்தை போக்கிய தமிழ்நாடு அரசு!

கலைஞர் செய்திகள் : நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் விவரங்களை கொண்ட பலகையை கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும் என தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சுற்றிக்கை அனுப்பியுள்ளது.
நியாயவிலைக் கடைகளில் பராமரிக்க வேண்டிய அறிவிப்பு பலகைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விவரங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
வேலை நேரம், இன்றியமையாப் பண்டங்கள் இருப்பு விவரம், விநியோகம் செய்யப்பட்ட விவரம், விற்பனை விலை உள்ளிட்டவை தகவல் பலகையில் இடம்பெற வேண்டும்.

”இனி எல்லா ரேஷன் கடைகளில் இவை கட்டாயம்” - இல்லத்தரசிகளின் சிரமத்தை போக்கிய தமிழ்நாடு அரசு!
விநியோகம் செய்யப்பட்டது, இறுதி இருப்பு உள்ளிட்ட விவரங்கள் மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படும் அளவு மற்றும் விற்பனை விலை ஆகியவை அறிவிப்பு பலகையில் இடம்பெற வேண்டும்.
”இனி எல்லா ரேஷன் கடைகளில் இவை கட்டாயம்” - இல்லத்தரசிகளின் சிரமத்தை போக்கிய தமிழ்நாடு அரசு!

நியாயவிலைக்கடை தொடர்பாக புகார் அளிக்க உணவுத்துறை அமைச்சர் 044 25671427, உணவுத்துறை செயலாளர் 044 25672224, உணவுப்பொருள் வழங்கல் ஆணையாளர் 044 28592255 உள்ளிட்டோரின் எண்கள் இடம்பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

 ”இனி எல்லா ரேஷன் கடைகளில் இவை கட்டாயம்” - இல்லத்தரசிகளின் சிரமத்தை போக்கிய தமிழ்நாடு அரசு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக