செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

மிக அதிகமாக விற்ற புத்தகங்கள் பட்டியலில் சமையல் புத்தகங்கள்

 Karthikeyan Fastura  :  சென்னை புத்தகக் கண்காட்சி அலப்பறைகள்
அலப்பறை 1:
அரங்கு எண் XXX க்கு சென்ற போது பிரபல எழுத்தாளர் தனியே நின்று கொண்டிருந்தார். நான்தான் அவருக்கு கம்பெனி கொடுத்தேன்.
அலப்பறை 2:
என்னுடைய "இத்துப்போன தத்துவம்" புத்தகம் அரங்கு எண் X, XX, XXX இல் கிடைக்கும். அங்கு வந்தால் நானே உங்களுக்கு கையெழுத்துப் போட்டு கொடுப்பேன்.
அலப்பறை: 3
இதுவரை மொத்தமாக 25 புத்தகங்கள் வாங்கினேன். சென்றமுறை வாங்கிய புத்தகங்களை எல்லாம் படித்து கிழிக்கவில்லை என்றாலும்.
அலப்பறை: 4
இந்தப் புத்தகம் குறித்து நூல் வெளியீட்டு விழாவில் நான் பேசினேன். ( மேடையை மட்டும் காண்பிக்கும்படி பத்திரிகையாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் )


அலப்பறை: 5
சுருதி டிவி எடுக்கும் வீடியோவிற்கு பபாசி இடம் பணம் கொடுக்க வேண்டும். அவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்க நாங்க தான் கிடைத்தோமா.. ( வேற எவனாவது இதை மதித்து கவரேஜ் செய்திருக்கிறான் என்றால் பிம்பிலிக்கா பிளாப்பி )
அலப்பறை 6
டிவி பேச்சாளர்களின் தமிழ் மோட்டிவேஷன் புத்தகங்கள். ஆக கொடுமை " இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டாம்" நீயா நானா கோபிநாத்தின் புத்தகம். ( படிக்க வேண்டாம் என்றால் என்ன ஐகோர்ட்டுக்கு எழுத வேண்டும் )
அலப்பரை 7
சின்ன குழந்தைகளின் பெற்றோர்களை குறிவைத்து IQ academyகள் . கோர்ஸ் விலை 30,000 தான். ( ஆமா உனக்கு இங்கே என்ன வேலை.. என்று யாரும் அவர்களிடம் கேட்கக் கூடாது )
அலப்பறை 8
தமிழக எம்பிகளை ராஜ்யசபா என்றாலும் லோக்சபா என்றாலும் அணுகுவதற்கு எளிதான இடம் புத்தகக் கண்காட்சி தான். All time available. ( மனு கொண்டு வந்து கொடுத்து அவர்களை மாட்டிவிட சரியான இடம் )
அலப்பறை 9
Food stalls மிளகாய் பஜ்ஜியில் மிளகாய் இல்லை. அப்பளம் சரியாகப் பொரியவில்லை. ( எங்கடா பாயாசம்.. )
அலப்பறை 10
சமீபத்தில் இறந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் எங்கே எங்கே என்று தேடித்தேடி வாங்குவது.
சோகங்கள் :
இறுதி நாள் முடிவில் மிக அதிகமாக விற்ற புத்தகங்கள் பட்டியலில் சமையல் புத்தகங்கள் முன்னணியில் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக