சனி, 5 பிப்ரவரி, 2022

நாடற்ற இந்தியர்களும் இலங்கை அகதிகளும் ! தொ.பத்திநாதன்

May be an image of tree, outdoors and text

ந. சரவணன்:  காலச்சுவடு இதழிலில் எழுத்தாளர் தொ.பத்திநாதன்  அவர்களது கட்டுரை காலச்சூழலுக்கு ஏற்ற ஒன்றாகவே காண முடிகிறது.
Pathi Nathan  : தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள், அவர்களின் நிலை, அவர்களுக்கு உள்ள வாய்ப்புகள், மாநில அரசு அனுகும் விதம்,
ஏற்கனவே இருந்த பார்வையில் இருந்து அகதிகளை தற்போது அனுகும் விதம். என்பது பற்றியும்,
அடுத்து மத்திய மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் தெளிவான ஒரு பார்வையினை முன் வைத்துள்ளார்.
குறிப்பாக தமிழக முகாம்களில் இருக்கும் மக்கள் வெவ்வேறு பின்புலங்களை கொண்டவர்களாக இருக்கிறார்கள்,
அதாவது இந்திய வம்சாவழி தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் என இருக்கின்றனர். இருவேறு பின்புலங்களை கொண்ட மக்களுக்கான வாய்ப்புகளை வெவ்வேறு வகையான அனுகுமுறையிலேயே அனுக இயலும். அதற்குத்தான் தற்போதைக்கு வாய்ப்பிருக்கிறது.


இங்கு யாரும் வெளியில் இருந்து வந்து பிரிக்கவில்லை, அவர்கள் ஏற்கனவே பிரிந்து தான் இருக்கிறார்கள் என்கிறார்.
ஆனால் எவ்வளவு தெளிவுப்படுத்தினாலும், சிலர் இவர்களை தனியாக பிரிக்கின்றனர். இது பிரிவினையை ஏற்படுத்தும் செயல் என பொதுவெளியிலும் குழுக்களாக இருந்தும் இந்த அனுகுமுறையை கையாள்பவர்களின் செயல்பாடுகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கின்றனர். அதனால் விளையப்போகும் முன்னேற்றம் குறித்து அவர்களுக்கு கவலையில்லை, 

மாறாக அவர்களது செயல்பாடு மற்றும் அதன் மூலம் அரசுகளிடத்தில் உருவாகிவரும் மாற்றம், இன்று அமைக்கப்பட்டிருக்கும் தமிழக முகாம் மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஆலோசனை குழு,
மற்றும் முகாம் பெயர் மாற்றம், தற்போதைய ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே சட்டமன்றத்தில் இலங்கை அகதிகளின் குடியுரிமை குறித்து தகுந்த ஆலோசனைகளின்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்படும் என்பது வரை கடந்தகால செயற்பாடுகளால் விளைந்த முன்னேற்றம் என எதையும் கருத்தில் கொள்ளாமல்,

அதே சமயம் முகாம் மக்கள் தங்களது கருத்துக்களை பொதுவெளியில் பகிர எவ்வித இடர்பாடுகளும் இல்லை என்ற சூழல் உருவானதிற்கு பிறகு அதற்கு காரணமானவர்களை பிரிவினைவாதிகள், ஒரு சார்பாக செயல்படுகிறார்கள் என்று முத்திரை குத்துவதன் மூலம் அவர்களது செயற்பாட்டை முடக்க நினைக்கிறார்களே தவிர, 

விளைந்திருக்கும் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு அவர்களுடன் நிற்பதற்கு தயாராக இல்லை. மாறாக வெளியில் இருந்து குடியுரிமை கோரிக்கைக்கு எதிராக செயல்படுபவர்களுடன் கைகோர்க்கிறார்கள்.மக்கள் செயற்பாட்டாளர்கள் எனும் அடையாளத்துடன் குடியுரிமைக்கு எதிரானவர்களின் செயற்பாட்டை ஊக்குவிக்கறார்கள்.
 

இப்படி செயல்படுபவர்கள் என்னவிதமான பின்புலங்களில் இயங்குகிறார்கள், அவர்களது இந்த கருத்துருவாக்கம் உள்நோக்கம் கொண்டது என்பது வரை மிக விரிவாக எழுதியுள்ளதுடன் இத்தகைய போக்கு மக்களின் தார்மீக கோரிக்கையை வலுவிலக்க செய்யும் எனும் அனுமானத்தை கொண்டு எழுத்தாளர் தொ.பத்திநாதன் இக்கட்டுரையை எழுதியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
நன்றி.

 No photo description available.

May be an image of text

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக