வியாழன், 3 பிப்ரவரி, 2022

நானும் ஒரு தமிழன்''-ராகுல் காந்தி பேட்டி!

நக்கீரன் செய்திப்பிரிவு  : இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடியது.
கரோனா பரவல் காரணமாக, மக்களவை இந்த கூட்டத்தொடர் முழுவதும் மாலையிலேயே கூடுகிறது. இன்று மக்களவையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, தமிழக மக்களைப் பாரதிய ஜனதா வாழ்நாளில் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது. நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை மத்திய அரசால் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. தமிழ்நாடு மனம் தளராமல் மீண்டும் மீண்டும் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு கோரிக்கை வைக்கிறது. ஆனால் மத்திய அரசு அதை ஏற்க மறுத்து விரட்டி அடிக்கிறது'' என்று ஆவேசமாகப் பேசினார்.
மக்களவையில் தமிழகம் குறித்தும் தமிழ் மக்கள் குறித்தும் ராகுல்காந்தி ஆவேசமாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு ராகுல் காந்தி  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் மக்களவையில் தமிழ்நாடு பற்றி பலமுறை குறிப்பிட்டது தொடர்பாகக் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி 'நானும் ஒரு தமிழன்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக