வியாழன், 3 பிப்ரவரி, 2022

ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? -முதல்வர் மு.க.ஸ்டாலின்

 நக்கீரன் செய்திப்பிரிவு   தமிழக அரசு நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கடந்த 7 மாதங்களாக கிடப்பில் வைத்திருந்தார் ஆளுநர் ரவி.
இந்த நிலையில், இன்று அந்த சட்ட மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பியிருக்கிறார்.
ஆளுநரின் இந்த செயல்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும்  கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
நீட் விலக்கு மசோதா தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் அறிவித்திருக்கும் நிலையில், அண்ணா நினைவு நாளான இன்று ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் 'பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவுநாளில், "ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?" என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக