செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

நடிகை ராதிகா – பயில்வான் ரங்கநாதன் மோதல்: திருவான்மியூர் கடற்கரையில் நடந்தது என்ன?

 tamil.indianexpress.com : நடிகர் பயில்வான் ரங்கநாதன் அண்மையில் நடிகை ராதிகா சரத்குமாரை சமீபத்தில் திருவான்மீயூர் கடற்கரையில் பார்த்ததாகவும் அப்பொது அவர் தன்னிடம் மிக மோசமாக பேசி சண்டை போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகை ராதிகா பயில்வான் ரங்கநாதன் மோதல், திருவான்மியூர் கடற்கரையில் ராதிகா பயில்வான் ரங்கநாதன் இடையே நடந்தது என்ன, நடிகை ராதிகா, பயில்வான் ரங்கநாதன்,
நடிகர் பயில்வான் ரங்கநாதன் அண்மையில் நடிகை ராதிகா சரத்குமாரை சமீபத்ஹ்டில் திருவான்மீயூர் கடற்கரையில் பார்த்ததாகவும் அப்பொது அவர் தன்னிடம் மிக மோசமாக பேசி சண்டை போட்டதாகவும் தெரிவித்துள்ளார். நடிகை ராதிகாவுக்கும் நடிகரி பயில்வான் ரங்கநாதனுக்கும் ஏற்பட்ட மோதல் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது திரைக்கூத்து யூடியூப் சேனலில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடிகை ராதிகாவை திருவான்மியூரில் பார்த்ததாகவும் அப்போது அவர் தன்னிடம் தனது அம்மாவைப் பற்றி தவறாக பேசியுள்ளாயேமே என்று சண்டை போட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், தான் ராதிகாவைப் பற்றி தவறாக எதையும் பேசவில்லை. அவரைப் பாரட்டியே பேசியுள்ளேன். பாராட்டி பேசும்போது நன்றி தெரிவிக்காத சினிமாக்காரர்கள் விமர்சிக்கும்போது கொதித்துப்போவது ஏன் என்று கேள்வி எழுப்பி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நடிகர் பயில்வான் ரங்கநாதன் தனது திரைக்கூத்து யூடியூப் சேனைல் பேசியிருப்பதாவது: “சின்னத்திரையில் வெற்றிகரமாக செயல்பட்டு கோடி கோடியாக சம்பாதித்த நடிகை ராதிகா, பெரிய திரையில் ஒரு வெற்றிப் படத்தைக்கூட தயாரிக்க முடியவில்லை ஏன்?

விஜயகாந்த்தின் வாழ்க்கையிலும் முக்கிய பங்காற்றியவர் ராதிகா. விஜயகாந்த் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர். எம்.ஆர்.ராதாவும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். அந்தக் காரணத்தால், இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்றுகூட பேச்சு அடிப்பட்டது. ஆனால், புத்திசாலித் தனமாக, லாவகமாக அதிலிருந்து தப்பிவிட்டார் ராதிகா. விஜயகாந்த் அதற்கு முன்னால் எல்லாம் ஒரு ரவுடியாகவும் நாக்கை துருத்திக்கொண்டும் கண்களை உருட்டிக்கொண்டு வரும் பாத்திரங்களில் மட்டுமே நடித்தார். பாடி லேங்குவேஜ் அவ்வளவாக இல்லை. லேட்டஸ்ட் காஸ்ட்யூம் டிசன்கூட விஜயகாந்த்துக்கு அவ்வளவு பெரிசா இல்லை. விஜயகாந்த்துக்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றினார் ராதிகா. புதுமை இளைஞனாக விஜயகாந்த்தைக் கொண்டுவந்தார் ராதிகா சரத்குமார். விஜயகாந்த்தின் ஹேர் ஸ்டைலில் புதுமையைப் புகுத்திவரும் ராதிகாதான். அதே நேரத்தில், விஜயகாந்த்துக்கும் ராதிகாவுக்கும் கெமிஸ்ட்ரி நல்லாவே வொர்க் அவுட் ஆச்சி. ஆனால், ஆரம்ப காலத்தில் விஜயகாந்த் உடன் ராதிகா பழகுவது எம்.ஆர். ராதாரவிக்கு பிடிக்காது. எம்.ஆர்.ராதாரவி எம்.ஆர்.ராதாவின் மகன் என்பதால் ராதிகாவுக்கு அண்ணன் ஆகிறார். ஆரம்பத்தில், ராதிகா விஜயகாந்த் உடன் பழகியபோது எம்.ஆர்.ராதாரவி எதிராகத்தான் இருந்தார். அதே சமயத்தில், எம்.ஆர்.ராதாரவி படங்கள் இல்லாமல் திணறியபோது, அவரை அழைத்து தனது சீரியலில் நடிக்க வைத்தவர் ராதிகா. அதே மாதிரி, தன்னுடைய தங்கை நிரோஷாவையும் தன்னுடைய ரேடான் பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடிக்க வைத்தவரும் ராதிகாதான். அதே மாதிரி, நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசு விக்ரம் இவர் எம்.ஆர். ராதாவின் இன்னொரு மனைவிக்கு பிறந்தவர். அவருக்கும், சித்திரையில் புதிய வாழ்வளித்தவர் ராதிகா சரத்குமார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே மாதிரி, நடிகர் சங்கத் தலைவராக சரத்குமார் இருந்தபோது விஷால் உடன் கடுமையாக மோதினார். சரத்குமார் கடுமையாக வரிந்துகட்டிக்கொண்டு விஷாலை திட்டினார். ஆனாலும், அதே விஷால் தயாரித்து நடித்த படத்தில் ராதிகா நடித்தார். அந்த சமயத்தில், நாம் விஷாலை எதிரியாகக் கருதினோமே, நடிகர் சங்கத்தில் எதிரியாகத் திட்டினோமே என்ற பாகுபாடு இல்லாமல் விஷால் படத்தில் நடித்தார்.

ராதிகாவைப் பொறுத்தவரை ஒரு பிளஸ் பாயிண்ட் என்னவென்றால், கஸ்தூரி ராஜா இயக்கத்தில் என் ஆசை ராசாவே படத்தில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு மனைவியாக நடித்தார். அதே சிவாசி கணேசனுக்கு பசும்பொன் படத்தில் ராதிகா மகளாக நடித்தார். இந்த படத்தை பாரதிராஜா இயக்கி இருந்தார். யாருமே செய்யத் துணியாத வேடத்தில் ராதிகா நடித்திருந்தார். அந்த படத்தில் ராதிகாவுக்கு 2 புருஷன், அந்த 2 புருஷனுடைய மகன்களும் சண்டை போட்டுக்கொள்வார்கள். வித்தியாசமான படம். அந்த மாதிரி ஒரு படத்தில் எந்த நடிகைக்கு துணிச்சல் வராது. அந்த துணிச்சல் ராதிகாவுக்கு மட்டுமே இருந்தது. சினிமா உலக வரலாற்றில், 2 கணவர்களுக்கு மனைவியாக நடித்த முதல் நடிகை என்று பெயரும் ராதிகாவுக்கு உண்டு. எந்த வேஷமும் என்றாலும் அநாயசமாக செய்வார். சமீபத்தில் ஒரு படத்தில் ரவுடியாக வந்து கலக்கினார் ராதிகா. சுருட்டு புடிச்சுகிட்டு வேறு யாருக்கும் வராது. என்ன காரணம் என்றால், ஜீன். எம்.ஆர். ராதாவின் மகள் என்ற காரணத்தினால் அவருக்கு நடிப்புத் திறமை இயல்பாகவே வந்தது. பாரதிராஜா, கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகப்படுத்தும்போது இருந்த ராதிகா வேறு, இப்போது உள்ள நடிகர்களின் வாரிசு எம்.ஆர். ராதிகா வேறு. நிர்வாகத்திறன் மிக்கவர். சிறந்த நடிகை. அதுமட்டுமல்ல, கலைஞரின் செல்லப்பிள்ளை. ஏனென்றால், எம்.ஆர். ராதாவின் மகள் என்பதால், தனி அன்பை வைத்திருந்தார் டாக்டர் கலைஞர். அதுமட்டுமல்ல, அரசியல் மாச்சரியங்களுக்காக பல நடவடிக்கைகள் எடுத்தும் சன் டியில் இன்னும் நல்ல தொடர்பில் இருக்கிறார் ராதிகா. இதற்கு காரணம் அவருடைய நிர்வாகத் திறமைதான். எம்.ஆர். ராதாவைவிட கூடுதல் புகழ்பெற்றார் என்று சொல்ல வேண்டும். எம்.ஆர். ராதா கடைசி காலகட்டத்தில் ரொம்ப கஷ்டப்பட்டார். ஏனென்றால், நாத்திகம் பத்திரிகையின் ஆசிரியர் ராமசாமியுடன் தொடர்புகொண்டு, பத்திரிகைக்கு தினமும் வந்துவிடுவார். நாத்திகம் பத்திரிகையின் ஆசிரியர் ராமசாமியும் எம்.ஆர்.ராதாவும் நெருங்கிய நண்பர்கள். கடைசி நேரத்தில் அவர் கஷ்டப்பட்டார்.

அதுமட்டுமல்லாமல், ராதிகா கடனாளியாக இருந்த சரத்குமாரையும் கடனில் இருந்து மீட்டுக்கொண்டுவந்தவர் ராதிகா. அதுதான் முக்கியம். ஏனென்றால், ராதிகாவுக்கு கணவராகும்போது சரத்குமார் கடனாளியாக இருந்தார். இப்போது அவர் கம்பீரமாக நடக்கிறார் என்றால் அதற்கு பின்னணியில் இருப்பவர் ராதிகா என்றால் மிகையாகாது. இன்னமும், சரத்குமர் இளமையாக இருப்பதற்கு காரணம், ராதிகா சரத்குமார்தான். ராதிகாவும் ராதிகா சரத்குமாரும் அடிக்கடி வெளிநாடு சுற்றுப்பயனம் செய்து, பல்வேறு வியாபார நிறுவனங்களை நடத்திக்கொண்டிருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது.

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தாலும், மெர்கண்டைல் போராட்டத்தில் கலந்துகொண்டதால் அவரை ராஜ்ய சபா எம்.பி.யாக்கினார் கலைஞர். அதற்கு காரணம் ராதிகா சரத்குமார்தான். என்னால்தான் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றார். அதற்கு பிரதியுபகரமாக ராதிகா கேட்டுகொண்டதற்கு இணங்க கலைஞர் சரத்குமாரை எம்.பி ஆக்கினார் அனைவருக்கும் தெரிந்த விஷயம். தமிழ் சினிமா வரலாற்றை யார் எழுதினாலும் அதில் ராதிகா சரத்குமார் பெயர் கண்டிப்பாக இடம்பெறும். ஏனென்றால், தமிழ் சினிமால் முன்னணி நடிகைகள் என்ற பட்டியலில் ராதிகா சரத்குமார் இடம்பெறுவார்.” என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

ஆனால், பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சினிமா நடிகர்கள், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிப்பிட்டு விமர்சித்து வீடியோ வெளியிட்டு வருவதாகவும் விமர்சனங்கள் உள்ளன. அண்மையில் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோவில், ராதிகாவின் தாயாரைப் பற்றி தவறாகக் கூறியிருந்ததாகவும் அதனால், திருவான்மியூர் கடற்கரையில் அவரைப் பார்த்த ராதிகா, தனது தாயைப் பற்றி தவறாக பேசியிருக்கிறாய் என்று கூறி கடுமையான வார்த்தைகளால் பேசியிருக்கிறார். பதிலுக்கு பயில்வான் ரங்கநாதனும் பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில், நான் வீடியோவில் தவறாகப் பேசியிருந்தால் வழக்கு போடுங்கள் சந்தித்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு வந்துள்ளார். சினிமா நடிகர்கள், நடிகைகளைப் பற்றி கிசுகிசுக்களை யூடியூப் வீடியோவில் பேசும் பயில்வான் ரங்கநாதனுக்கு ராதிகா தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்று சிலர் அவருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக