வெள்ளி, 28 ஜனவரி, 2022

.திராவிடம் ஒரு மாநிலத்துக்கான சித்தாந்தம் அல்ல.. Loganayaki Lona

May be an image of 1 person and text that says 'BEST Frienas குடியர நான் அணி குப்பு விடுதலைப் போரில் தமிழகம்'

Loganayaki Lona  : ஓட்டரசியலில் என்னை வாழவைக்கும் கட்சி என்று சொல்வதற்காக தலித் ப்ரதிநிதிகளுக்கு சமூகநீதிகட்சிகள் பதவி தருவதில்லை.
எப்போது  தலித்  அரசியல் அதிகாரம் பெற்று விடுகிறாரோ அவர் தன் சமூக மக்களிடம்  ஒடுக்கப்பட்டவராக இருக்கப்போவதில்லை.
மாறாக மாற்றுகட்சியில் இருக்கும் தன் சமூக மக்களை கிடைத்த அதிகாரத்தால் மிக எளிதாக ஒடுக்கிவிட முடியும்.இதைத்தான் திமுகவின் வெகு சில பஞ்சாயத்து தலைவர்கள்  மாற்றுக்கட்சியிடம் செய்கின்றனர்.அவர்கள் வாரிசுகள் இணைய ரவுடிசம் செய்து சிறை சென்றனர்.எதிர்கட்சியாக இருக்கும் போது கூட அப்படி செயல்பட்டவர்கள் திமுக என்பதாலேயே இப்போது புனிதர்களாகிவிட முடியாது.


சாதியை   கட்சிப்பற்றாக ஒருவர் வெளிப்படுத்தினாலும்  சாதி மறுப்பாளர்களால் அடையாளம் காண முடியும்.
நேரடியாக மாற்றுக்கட்சியின் சாதியவாதிகளை விமர்சிக்க திமுகவினருக்கு ஒரு தடையும் இங்கு இல்லை. 

அம்பேத்கர் விமர்சனம் என்பது திராவிட இயக்க கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு அந்த கட்டமைப்பின் தலைவராக ஏற்கப்பட்ட ஒருவரை பார்ப்பனீய பாணியில் விமர்சித்த போக்கு ..அது அநியாயம்.பெரியாரிஸ்ட் ஒரு போதும் இதை செய்திருக்க மாட்டார்கள்.
அவர்கள் இருவதும் தான்  தான் அடிப்படையில் சுயமாய் சிந்தித்து பார்ப்பனீயமே இங்கு  நிலவும் அனைத்து பாகுபாட்டுக்கும் ப்ரச்சனை என்பதை தன் வாழ்நாள் முழுவதும்  நிறுவியவர்கள்.பெண் விடுதலையை பேச்சோடு நிறுத்தாமல் செயல்வடிவம் தர உழைத்தவர்கள்.
திராவிட இயக்கத்துக்குள் பெரியார் அம்பேத்கருக்கு பிறகு தான் உங்க மாநிலத்தலைவர்கள் ஏற்கப்படுவார்கள்.திராவிடம் ஒரு மாநிலத்துக்கான சித்தாந்தம் அல்ல.இந்தியத்தால் ஒடுக்கப்பட்ட மாநிலங்கள்  தன் அதிகாரத்தை பரவலாக்க வழி உள்ள சித்தாந்தம்.தேசிய அளவிலும் ஆட்சி அதிகாரம் பெற பாதை வகுக்க முடியும்.அதைத்தான் திமுக,விசிக இணைந்து  இப்போது செய்து கொண்டிருக்கிறது.


G Shanmugakani  :திராவிட இயக்கத்துக்குள் அண்ணல் அம்பேத்கார் எப்போது வந்தார்? பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர், நாவலர், கி வீரமணி, தற்போதைய தலைவர் ஸ்டாலின். போன்றவர்கள்தான் திராவிட இயக்கத் தலைவர்கள். அம்பேத்கார் இந்தியத் தலைவர்களுள் ஒருவர்.

Loganayaki Lona  :  G Shanmugakani உங்க திராவிடத்தலைவர்களில் நீதிக்கட்சி வரலாறே இருக்காது போல


G Shanmugakani  :  Loganayaki Lona நீதிக் கட்சியின் தொடர்ச்சிதான் திகவும், திமுகவும்.

Loganayaki Lona
G Shanmugakani அம்பேத்கர் இந்திய அளவில் திராவிடம் தான் பேசினார்.அதனால் அவர் திராவிடத்தலைவர்

G Shanmugakani :Loganayaki Lona அம்பேத்கர் திராவிட இயக்கத்தின் கூட்டாளி, திராவிடத் தலைவரல்ல!


Loganayaki Lona  :  G Shanmugakani தனித்து இயங்கிய மாபெரும் போராளியே தலைவரில்லையெனில் வேறு எவரும் தலைவரல்ல


G Shanmugakani  :  Loganayaki Lona அம்பேத்கார் திராவிட இயக்கத்தின் கூட்டாளி, திராவிட இயக்கத்தின் தலைவரல்ல.


G Shanmugakani  :  Loganayaki Lona திராவிட இயக்கத்தின் தலைவர் அல்ல என்றுதான் கூறினேன். அவர் இந்தியத் தலைவர் என்றுதான் கூறுகிறேன். அவர் தனித்து இயங்கினார் என்றுதான் கூறுகிறேன்.


Loganayaki Lona  :  G Shanmugakani அவர் எங்க பேசியிருந்தாலும் பேசினது திராவிடம் தான் என்கிறேன் நான்.தமிழ்ல பேசுனாத்தான் தலைவர்ன்றீங்க நீங்க.


G Shanmugakani  :  Loganayaki Lona திராவிட நாட்டை அவர் அங்கீகரிக்கவில்லை. இந்தியாவின் மூதாதையர்கள் திராவிடர்கள் என்று ஆய்ந்து சொன்னார்.


Loganayaki Lona  :; G Shanmugakani
அவர் திராவிடத்தின் வட இந்தியத்தலைவர்.நாம் இருபுறமும் செயல்படுவதால் பெரியாரும் அம்பேத்கரும் திராவிட இயக்கத்தலைவர்கள் தான்.மாத்துனா ஒரு பொண்ணு கூட உங்க கூடலாம் அரசியல் பேசாது.

Loganayaki Lona  :  G Shanmugakani திராவிட நாட்டில் மராட்டியத்தையும் சேர்க்க சொல்லி பெரியாரிடம் பேசினார்.அவர் எதிர்க்கவில்லை.கூட்டணியே கேட்டார்


Loganayaki Lona  :கரிகாலன் கலைஞரிஸ்ட் ஓஹோ..அம்பேத்கர் 2 வார்த்தை தான் பேசினாரா?
2 வார்த்தை கம்யூனிசம் பேசினா கம்யூனிஸ்ட் ஆக முடியாது.சமகாலத்தில் அதே தலைமைப்பண்புடன் போராடியிருந்தால் தலைவர் என்பதை நிராகரிக்க முடியாது.


G Shanmugakani  :  Loganayaki Lona அண்ணலின் கொள்கைகள் பல திராவிடத்தின் கொள்கைகள். அதை அவர் வட இந்தியாவில் பேசினார்.


Loganayaki Lona  : Shanmugakani நம்மளும் வட இந்தியாவிலும் தானே பேசப்போகிறோம்.வட இந்தியத்தலைவரின் உழைப்பையும் மதிப்பதில் தவறில்லை.

G Shanmugakani  :  Loganayaki Lona ஐயோ! அண்ணலின் உழைப்பையும், நாட்டுக்காக அவரின் பங்களிப்பையும் யாரும் மதிப்பர், போற்றுவர்,வியந்தும் பார்ப்பர், மாற்றுக் கருத்தில்லை.

Loganayaki Lona  :  G Shanmugakani ஆனா அவர் நம்ம சாதிக்காரர் இல்லைங்கிறது ப்ரச்சனையா?இல்லனா தமிழ்ல பேசலன்றது ப்ரச்சனையா?

G Shanmugakani  :  Loganayaki Lona எனக்குத் தெரியும் கடைசியில் நீங்கள் சாதி எனும் சாக்கடைக்குள்தான் வருவீர்கள் என்று. அண்ணலை சாதிக்குள் அடைப்பவன், நாட்டின் நலம் விரும்பி அல்ல, சீழ்பிடித்த மூளைக்குச் சொந்தக்காரர்கள். சாதியை சுத்தமாக வெறுப்பவன் நான்.


Loganayaki Lona  :G Shanmugakani இன்னொரு ஆப்சன் இருக்குது பாருங்க..தமிழரில்லை என்பது ப்ரச்சனையா?

    
Loganayaki Lona  :  கரிகாலன் கலைஞரிஸ்ட் திராவிட இயக்கத்தின் தலைவர் அவர்.அவரை சாதிக்காரங்க கையில் எடுப்பதற்கு அவர் பொறுப்பாக முடியாது.

G Shanmugakani  :  Loganayaki Lona தமிழ்நாட்டில் தங்கி தமிர்களுக்காகப் பேசியவர்கள்,தமிர்களுக்காக உழைத்தவர்களை, அவர்களின் சயமரியாதை வாழ்விற்காக சிறைசென்று துன்புற்றவர்களை, அவர்களின் வாழ்வில் ஏற்றம் கண்டவர்களை அவர்கள் எம்மாநிலத்தவர் ஆயினும் எனது தலைவர்கள். உதாரணம் Dr Nair. மற்ற மாநிலத்தவர் திராவிடம் பேசினால் எங்கள் கூட்டாளிகள், அவர்கள் இந்தியத் தலைவர்கள்.


Loganayaki Lona  :  G Shanmugakani அம்பேத்கர் தமிழரில்லை எனில் நாங்கள் இந்தியப்பெண்கள் ..நன்றி வணக்கம்.

கரிகாலன் கலைஞரிஸ்ட்  :முதல் நான்கு பத்திகளுக்கு ஒரு அர்த்தமும் புரியவில்லை


Loganayaki Lona  : கரிகாலன் கலைஞரிஸ்ட் அது தனிநபர் தாக்குதல்..
உங்க டீம்ல ஒருத்தரோட சொந்தக்காரங்க திமுகவால் பஞ்சாயத்து தலைவரா இருக்காங்க.அவர் தலித் .திமுக தன்னை வாழவைப்பதால்னு ஆரம்பித்து....எப்பவும் இங்கு பேசும் பிற கட்சி சார்ந்த தலித் இளைஞர்களை ரவுடி போல் தாக்குவார்.
அவர்கள் ஊரிலும் இணையச்சண்டைக்கு நேரடித் தாக்குதல் நடத்தி ஜெயிலுக்கு போனார்.வழக்கு தொடுத்து சில நாள் காவல்துறை அவரை கைது செய்யவில்லை .கனிமொழி மேடம்க்கு எல்லாம் பதிவு அனுப்பினோம்.அப்பவும் ரொம்ப லேட்டா கைதானார்.
கிரிமினல்கள் கட்சிக்கு பின்னாடி ஒழிஞ்சுகிட்டு உங்களோட கோரஸ் போடுவாங்க.

 
Nalangilli Thenmozhi :  பார்ப்பனர் தவிர (அதிலும் விலக்குண்டு),ஏனைய வகுப்பார் அந்தந்த வகுப்புத் தலைவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க முன்வந்தார்களா? வருகிறார்களா? வருவார்களா?


Parthiban D  : தவறான சிலதகவல்
யார் தவறுசெய்தாலும் தவறுதான்
மொழிப்போர் வீரரை
ஜாதியாக பார்க்க சொல்வதுஎவ்விதநியாயம்
ஜாதிமுன்நிறுத்தும்புத்தி
எந்த பார்பனரல்லாதவரிடம்
இருந்தாலும் தவறுதான்


Loganayaki Lona  :  Parthiban D அம்பேத்கரிஸ்ட் தவறு செய்தால் அம்பேத்கரை விமர்சிப்பீர்கள் எனில் பெரியாரிஸ்ட் தவறு செய்ததால் பெரியாரை விமர்சிப்பீங்களா?
உங்களாலாம் மக்கள் எப்படி நம்புவாங்க?


Parthiban D  :Loganayaki Lona விமர்சனங்கள்
கூடாது என யார்கூறியது

      layaraja Ksm
முற்றிலும் உண்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக