புதன், 12 ஜனவரி, 2022

Cafe Coffee Day சித்தார்த்தின் தற்கொலையில் இருந்து நிறுவனத்தை மீட்ட மனைவி! மாளவிகா சித்தார்த் ஹெக்டே

May be an image of ‎1 person and ‎text that says '‎CaFé COFFee Day "My association with Siddhartha is 32 years. Institution is his world. Employees are family members. took on the responsibility of running the empire he built." MALAVIKA HEGDE CEO, Café Coffee Day אס‎'‎‎

Karthikeyan Fastura  : நான் எப்போதுமே பெண்களின் திறனில் அபாரநம்பிக்கை கொண்டவன். காரணம் நான் கற்ற அறிவியலும், வரலாறும் அதை தான் கூறியது.
Cafe Coffee Day Owner சித்தார்த் இரண்டாண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த தொழில்கடன்களின் அழுத்தம் தாங்காமல் ஒருநாள் எல்லோரையும் விட்டு விலகிச் சென்று தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரத்தில் ஒட்டுமொத்த தொழில் உலகத்தையே அதிர்ச்சியில் தள்ளியது.
அந்த சமயம், இனி இந்த நிறுவனம் அவ்வளவு தான். மீள்வதற்கு வழியில்லை. தலைமையே தற்கொலை செய்துகொண்டுவிட்டது என்று பொது கருத்து தான் நிலவியது. எல்லா நகரங்களிலும் இருந்த அதன் கிளைகள் மூடிவிடுவார்கள் என்று தான் நினைத்தார்கள். அவை எல்லாவற்றையும் ஒரு பெண் வந்து தலைகீழாக மாற்றிக்காட்டுவாள், அவநம்பிக்கைகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி வளர்ச்சி என்றால் என்ன என்று கெத்து காட்டுவாள் என்று வானம் பிளந்து அசரீரி சொல்லியிருந்தாலும் நம்பியிருக்கமுடியாது. ஆனால் அது தான் நடந்தது
2020 டிசம்பரில் சித்தார்த்தின் மனைவி திருமதி.மாளவிகா தனது துயரத்தில் மீண்டவராக,  தொழிலில் கவனம் செலுத்த அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த ஆரம்பித்தார். இதுபோன்ற ஒரு சூழலில் எந்த ஒரு பெண்ணும் இருக்கிற சொத்தை காப்பாற்ற அந்த கடனில் இருந்து தப்பிக்க கம்பெனியின் பொறுப்பை தட்டிக்கழித்து எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றே தப்பிக்க முயற்சிப்பார்கள். அந்தளவிற்கு மலைபோல கடன். அவர் நினைத்திருந்தால் தப்பித்திருக்கலாம். ஆனால் நிறுவனத்தின் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அனைவரும் அத்தோடு காலி.
ஆனால் அவ்வாறு செய்யவில்லை. மாறாக துணிந்து தலைமை பொறுப்பை ஏற்று திறம்பட நடத்தினார். பெங்களூரில் நிறுவனத்திற்கு சொந்தமான பெரும் Global Village Technology Parkஐ விற்று 2700கோடி கடன்களை முதலில் அடைத்தார்கள். அதில் ஓரளவு கடன்களின் சூடு குறையவும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகள் குறைய ஆரம்பித்தன. 7000 கோடி ரூபாய் கடனாக இருந்தது இன்று 1700 கோடிக்கு வந்திருக்கிறது. இன்னும் ஓரிரு வருடங்களில் அதுவும் காணாமல் சென்று லாபத்தை எட்டும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்.
இங்கே நம்பிக்கை தான் உண்மையான Asset. அது தன் மீதும், தன் நிறுவனத்தின் மீதும் தனக்கு உள்ள நம்பிக்கையாக இருக்கட்டும், அல்லது மற்றவர்கள் வைக்கும் நம்பிக்கையாக இருக்கட்டும் அவற்றை காப்பாற்ற வேண்டியது அவசியம்.
இன்று நிறுவனத்தின் மீதான மக்களின் பார்வை, முதலீட்டாளர்களின் பார்வை அனைத்தும் மாறிவிட்டது. சித்தார்த் சேர்த்து வைத்தது கடன் மட்டுமல்ல வாடிக்கையாளர்கள் coffee day மீதான நம்பிக்கையும், personal Connectionம், அது உருவாக்கியிருந்த நன்றியும் தான். அதனால் தான் மாளவிகா அவர்களால் இத்தனை விரைவில் மீட்க முடிந்தது. அன்றைய நெருக்கடியை அவரால் சமாளிக்க முடிந்திருக்கும் அவர் மனைவியுடன் பகிர்ந்திருந்தால் அல்லது அவரை என்றும் தன் தொழிலில் துணையாக வைத்திருந்தால். ரஞ்சி என் தொழிலில் என்னுடன் பயணிப்பதால் தான் நான் தாக்குப்பிடித்து வளர்ந்துள்ளேன் என்பதை உறுதியாக சொல்வேன்.  
இன்று பங்குசந்தையில் Café Coffee Day பங்கு ஒருநாளில் 6% உயர்ந்து 55 ரூபாயை தொட்டுள்ளது. நிச்சயம் அவர்கள் சேவை சிறப்பாக தொடரும்போது இந்த வருடமே  எளிதாக 100ஐ தாண்டும். ஏனென்றால் நம்பிக்கை மீட்கப்பட்டுவிட்டது.  All is well

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக